(Reading time: 43 - 86 minutes)

நீ கெஞ்சவே வேண்டாம். நான் கண்டிப்பா ஹல்ப் பண்ணுவேன். ஏன்னா அப்போ தான் சும்மா என்னையும் நிருவையும் சேத்து வைச்சு ஓட்டுற உன் வாயை மூடலாம்...?” என்று பெருமையாக சொன்னாள் மது.

 

“மொட்டை நீ கூட பயங்கரமா யோசிக்க ஆரம்பிச்சிட்ட. ” என்று கார்த்திக் கிண்டலாக பாராட்டினான்.

 

“சரி அந்த பொண்ணு பேரு என்ன?” என கேட்டாள் மது.

 

“அது...அது…” என்று ஒரு நொடி யோசித்தவன், “ஜீரா” என்றான்.

 

“ஜீராவா… ஹீரா கேள்விபட்டுருக்கேன்..அது என்ன ஜீரா… ஸ்வீட் பேரு மாதிரி இருக்கு?” கேட்டாள் மது.

 

“மது ன்னாலும் ஸ்வீட் தானே, அது மாறி தான் ஜீரா” என்றான் கார்த்திக்.

 

“ஓ….” வியப்பாக கேட்டு விட்டு, “சரி அவுங்க என்ன பண்றாங்க” என கேட்டாள்.

 

“நான் யோசிச்சு இவ்வளோ சொன்னதே பெரிய விஷயம். மத்ததெல்லாம் நிரு கிட்டயோ இல்ல பேய்கிட்டயோ கேட்டுக்கோ...பை..நான் திரும்பி வர குறைந்தது ஆறு மாசமாவது ஆகும். இப்போ போற அசைன்மென்ட்க்கு அங்கயே இருக்க வேண்டியிருக்கு” என்றான் கார்த்திக்.

 

“ஆறு மாசமா? டெய்லி போன் பண்ணுவ தானே?...ஏதாவது டவுட்ன்னா? உன்னை தேடணுமே” என்று பதறிய படி கேட்டாள் மது.

 

கார்த்திக், “இந்த ஆறு மாசம் உன்னோட திறமை தான். ரெண்டு வருஷம் என்கூட சேர்ந்து கம்பெனி ரன் பண்ணியிருக்க தானே? கேர்ள் பவரை நிரூபி. உனக்கு ஏதாவது டீடைல்ஸ் வேண்டும்னா நான் ஹெல்ப் பண்றேன். மத்தபடி நீயா தான் எல்லாம் ஹான்டில் பண்ண போற. ” என்றவுடன் ஒரு வித பயத்துடன் முழித்த படி பார்த்தாள் மது.

 

“மொட்டை, உன்னால முடியும். சந்தியாவும் உனக்கு மாரல் சப்போர்ட்க்கு கூட இருக்கா. அதுனால கவலை படாதே” என்று தைரியம் சொன்னான் கார்த்திக்.

 

“ம்..ஓகே. ஏதாவது தப்பா முடிவு எடுத்தா?” என்று பயந்த படி கண்களை சிமிட்டினாள்.

 

“தப்பா முடிவு எடுத்தா லாஸ் ஆகும் அவ்வளவு தான் ...இந்த மொட்டைக்கு முடியா கொட்டும்? எடுத்தவுடனே இந்த மாறி நெகடிவ்வா பேசுறதை விடு... சரியா?“ என்று அவள் பதிலுக்காக காத்திருக்க,

 

“ம்...யோசிச்சு சொல்றேன்” என்றாள் வழக்கம் போல.

 

“இங்கி பிங்கி போடாத! நீயெல்லாம் ஒரு சி.இ. ஓ….தலையெழுத்து!“ என்று அவள் தலையில் தட்டி,

 

“டம்மி சி.இ.ஓ வா இருக்காத. ஆக்ட் லைக் எ க்ரோன் அப்” என்று அவள் தலையில் மீண்டும் தட்டி சொன்னான் கார்த்திக்.

 

அவன் சொன்னதும் ரோஷம் வந்த மது, “ம்….ஏய் அதுக்காக சும்மா மட்டம் தட்டாத! நான் எவ்வளோ அழகா எல்லா டீம்மை மேனேஜ் பண்றேன்னு தெரியும்ல” என்றாள் காலரை தூக்கி விட்டு.

 

“அப்புறம் என்ன “ என்று விட்டு அவளை மாதிரி குரலில், அவள் மாதிரி முக பாவனையில் “ஏதாவது தப்பா முடிவு எடுத்தா?” என்று அவள் சொன்னதையே சொல்லி விட்டு, பின் தன் இயல்பு குரலுக்கு மாற்றிவன், “அப்படின்னு கேக்குற?.. ட்ரை யுவர் பெஸ்ட். நான் அடுத்து பாக்கிறப்போ பவர்புல் சி.இ. ஓ வா இருக்கணும்!” என்றான் கார்த்திக்.

 

“ம்...ஓகே! ஒகே! ஏய் காதி, எப்பவும் போல டெய்லி போன் பண்ணு” என்றாள் மது.

 

“ம்..இந்த தடவை கஷ்டம் மொட்டை. பாக்கலாம்.” என்று விடைபெற்று கிளம்பும் போது “உன் பழி வாங்கும் படலம் என்ன ஆச்சு காதி?” என்று அவள் கேட்டுகும் திணுசில் அவள் நக்கல் ஒலித்தது.

 

“ம்...அதுக்கெல்லாம் நம்பியார் மாதிரி இருக்கணும். டாம் க்ரூஸ் மாதிரி இருந்துகிட்டு இப்படி பழி வாங்கும் படலம் எல்லாம் கொஞ்சம் கஷ்டம் தான் மொட்டை” என்று உள்ளுக்குள் நொந்து வெளியில் சிரித்த படி சொன்னான்.

 

“நீ டாம் க்ரூஸ்ஸா? இது எல்லாம் ஓவர்” என்று சிரித்தாள் மது.

 

“சரி நான் எல்லாரையும் பாத்துட்டு கிளம்புறேன். அந்த நிரு வாழ்கைல கொஞ்சம் விளக்கேத்தி வை. பை” என்று சொல்லி விட்டு பின் வீட்டில் அனைவரிடமும் சொல்லி விட்டு விடைபெற்றான்.

 


டிரைவரை ஓட்ட விட்டு, காரில் அமர்ந்தவனுக்கு சந்தியாவை தன் வாழ்கையில் இனி பார்க்கவே கூடாது என முடிவெடுத்தான். அதிகாலை ஆறு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. அவனுக்குள் அவளை அழைக்க உந்துதல் தோன்ற, நடந்ததிற்கு மன்னிப்பு கோர, இது தான் கடைசி அழைப்பாக இருக்க வேண்டும் என்று அவளை அழைத்தான். வெகு நேரம் கழித்தே அழைப்பை எடுத்தாள் சந்தியா...தட்டு தடுமாறி தடவியவாறு...அவள் கைக்கு எட்டும் தூரத்தில் தான் போனை வைத்திருந்தாள் இருந்தாலும்….

 

“கா….த் ...தி” என திக்கி திணறி அனத்தியவாறு வந்த அவளின் பதிலில் அவன் உயிர் அவனிடத்தில் இல்லை.

 

“என்னடா...என்னாச்சு?” முகத்தில் அச்சம் தெரிய, பதறியவாறு.

 

அனத்தலே பதிலாக வந்தது. அவள் சொல்ல வருவது அவனுக்கு புரியவில்லை. அவளை மேலே பேசவிடாமல் இணைப்பை துண்டித்தான். டிரைவரை அவளது வீட்டிற்கு வண்டியை செலுத்த சொல்லி விட்டு ஸ்ரீமாவிற்கு அழைத்தான். “சந்தியாவுக்கு என்ன ஆச்சு? நடுங்கிகிட்டே பேசுறா” அவள் போனை எடுத்தவுடன் பதறியபடி கேட்டான் கார்த்திக்.

 

“சந்தியாவா?” அதிர்ச்சியுடன் கேட்டுவிட்டு, “தூங்கிட்டு இருக்கான்னு நினைச்சோம். அய்யோ நான் போய் பாக்கிறேன்” என அவனிடம் பேசுவதை துண்டித்து விட்டு, ஓடிப் போய் சந்தியாவின் கதவை தட்டினாள் ஸ்ரீமா.

 

பெலனற்ற உடம்பில் இருந்த சக்தியெல்லாம் திரட்டிக் கொண்டு எழுந்தரிக்க முயன்ற சந்தியாவால் நடக்க முடியவில்லை. மறுபடியும் கட்டிலில் படுத்தாள். “முடி...ய..லை..” அனத்தினாள்… கண்களை சுழற்றியது...ஜீவன் எல்லாம் வடிந்து போய் கிடந்தாள் படுக்கையில். முகம் வெளிறி உடம்பு அனலாய் கொதித்தது…ஒரு வாரமாக சரியான தூக்கமின்மை, வேலை, முந்தைய நாள் விரதத்தில் நீர் சத்து எல்லாம் கரைந்து போயிருந்தது...அதோடு மழையில் நனைந்தது, ஈர ஆடை, விடிய விடிய அழுதது, மன உளைச்சல் என அனைத்தும் அந்த சிறுத்த உடம்பால் தாங்க முடியாமல் நோயில் விழுந்தது….

 

அவள் அனத்தல் சத்தம் மட்டும் லேசாக கேட்க, பதட்டமடைந்த ஸ்ரீ, “மாமா….அப்பா….சந்தியாவால எழுந்தரிக்க முடியல. சீக்கிரம் வாங்க..அவ ரூமோட இன்னொரு சாவி கொண்டு வாங்க” பதட்டத்தில் அவள் சத்தமாக கூப்பிட்டது வீட்டிலிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவள் சத்தம் கேட்டு அந்த கதவிற்கு மற்றொரு சாவி வீட்டிலிருந்ததால் அதை எடுத்துக் கொண்டு என்னமோ ஏதோ என்று பதறியடித்து கொண்டு வேகமாக ஓடி வந்தார் தன்ராஜ். முகத்தில் பதட்டம்… மனதிருக்குள் அத்தனை கடவுளையும் கூப்பிட்டவாறு…. பூமா சொன்ன விஷயங்கள் கண் முன் வர குற்ற உணர்ச்சி அவரை கொன்றது. அவர் பின்னாலே ஓடி வந்த லக்ஷ்மியும் “என் புள்ளைக்கு என்ன ஆச்சோ…” சொல்லிக் கொண்டிருக்கும் போதே தன்ராஜ் கதவை திறந்தார்.

 

உள்ளே ஓடி வந்த அவர் கட்டிலில் கிடந்த சந்தியாவை பார்த்து பதறிப் போய் அவளை மடியில் கிடத்த, அவள் உடம்பு அனலாய் கொதிப்பதை உணர்ந்தார். “அய்யோ பாப்பாக்கு காச்சல் கொதிக்குதுடி…”, நெத்தியிலும், கழுத்திலும் கையை வைத்த படி லக்ஷ்மியிடம் பதறினார். “கண்ணெல்லாம் கிறங்கி போய் கிடக்கே...சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போகணும்” என்று வருத்தமும் அவசரமும் கலந்த குரலில்.

 

“இப்படி கொதிக்குந்தண்டியும் என்ன செய்த? எங்களை ஒரு சத்தம் போட்டிருக்க கூடாதா..” பதறிக் கொண்டே கண் கலங்கிய படி, கிடு கிடுவென் நடுங்கிய சந்தியா மீது போர்வையை போர்த்தினார் லக்ஷ்மி.

 

சற்று தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்து, ஸ்ரீமாவின் கணவர் அருகிலிருந்த ஆட்டோ ஸ்டாண்டிற்கு சென்றார். அங்கு நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்த வடிவுக்கரசி சந்தியாவின் கட்டில் அருகில் வந்து கீழே உட்கார்ந்து கொண்டு, “யாரு கண்ணு பட்டதோ, என் ராசாத்திக்கு! இப்படி பெண் பேசுத அன்னைக்கு தேன் இப்படி ஆகணுமாயா...என் கண்ணு...இன்னக்கு புடிக்கிற போட்டால எல்லாம் புள்ளை மொவத்தில களையே இல்லாம தெரியுமே!” என அவளுக்காக வருந்துவது போல அன்று நிச்சயதார்த்தம் நடக்க போவதை உறுதி படுத்திக் கொள்ள தன்ராஜை பார்த்தாள். அவரோ அவளை சட்டை செய்யாமல் லக்ஷ்மியின் உதவியுடன் சந்தியாவை அந்த அறையிலிருந்து கீழே கொண்டு வந்தார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.