(Reading time: 43 - 86 minutes)

 

வன் அந்த அறையை விட்டு வெளியேற முற்படும் போது, உள்ளே எதிர்பட்டான் பாண்டியன். “என் கண்ணு முன்னாடியே அவளை முழுங்கிற மாதிரி பார்க்கிற... உன்னை என்ன பண்றேன் பார்” மனதிற்குள் கடிந்து கொண்டான் கார்த்திக். மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததும், காரில் ஏறியவன் விமான நிலையம் செல்லும் வழியில் சிவாவை அழைத்தான்.

 

“சொல்லு மாப்ளை...கிளம்பிட்டியா?” கேட்டான் சிவா.

 

“மச்சி, ஒருத்தன் கதையை முடிக்கணும்”, கார்த்திக்.

 

“என்னது?” அதிர்ச்சியாய் கேட்டான் சிவா.

 

“சந்தியாவுக்கு அவங்க முறைப் பையனோட திடீர்னு நிச்சயதார்த்தம் நடக்க இருந்து இப்போ நிறுத்திட்டாங்கடா. அந்த பய பார்வையே சரியில்லை மச்சி.”, பாண்டியனை பற்றி குமுறினான் கார்த்திக்.

 

“டேய்...முறைப்பொண்ணை அதுவும் கட்டிக்க போறோம்கிற ஆசைல பாத்திருப்பான்.அவன் முறை பொண்ணு….அவன் உரிமை….அதுக்கு ஏன்டா டென்சன் ஆகுற. அதான் நிச்சயம் பண்ணலைல. அப்புறம் ஏன் புலம்புற” என்று சமாதான படுத்த முயன்றான் சிவா.

 

“அவன் அம்மா என்னை மட்டமா பேசிடுச்சுடா. அதை நான் கூட தாங்கிடுவேன். உன்னால தாங்க முடியாதுடா மச்சி. அதான் பீலிங்ஸ்” என்று அவன் சோகம் சிவாவை தாக்கிடும் என வருந்தினான் கார்த்திக்.

 

“சரிடா….விடு. இதுக்கு மேல பில்ட் அப்பை என் இதயம் தாங்காது. உனக்காக உயிரையும் குடுப்பேன்டா...உயிரை எடுக்க மாட்டேனா? அவன் அங்க அடையாளம் எல்லாம் சொல்லு” என்று களத்தில் இருங்க தயாரானான் சிவா.

 

“என்னை விட கொஞ்சம் உயரம் கம்மி, என்னை விட கலர் கம்மி, என்னை விட பிட்னஸ் கம்மி, என்னை மாதிரி கம்பீளீட் சேவ் பண்ணலை டா...மீசை வைச்சிருக்கான். என் அளவுக்கு டிரெஸ்ஸிங் சென்ஸ் இல்ல மச்சி...என்னை விட..” என்று சொல்லிக் கொண்டே போனவனை,

 

“டேய் நிறுத்து” என்று அதிகாரமாய் இடைமறித்த சிவா, “அவன் அங்க அடையாளம் கேட்டா நீ ஆறு வித்தியாசம் சொல்லிக்கிட்டு இருக்க. இப்படி சொன்னா ஆளை எப்படி பிடிக்கிறது?”

 

“ஓ….உன்னை புத்திசாலி நினைச்சு சொல்லிட்டேன். சாரிடா மச்சி. அவன் பேரு பாண்டியன். அவன் கார் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் முதல் கொண்டு எடுத்துட்டேன். அவன் சென்னைல தான் இருக்கான். எங்க மாமாகிட்ட அவன் டீடைல்ஸ் பாக்க சொல்லியிருக்கேன். இப்போதைக்கு அவனை நம்ம ஊர்ல இருந்து துரத்தினா போதும் மச்சி... முடியாம இருக்கிற பொண்ணை திருட்டுத்தனமா பாக்கிற அந்த ரெண்டு கண்ணையும் நோண்டணும் போல இருந்தது. இப்போதைக்கு போட்டோ கைல இல்ல. சமாளிச்சிடுவியா?” என்றவனிடம்,

 

“மாப்ளை, போட்டோ எல்லாம் கிட்னி இல்லாதவங்களுக்கு. பேரை வைச்சே சிட்டிவேன் சாங் போட்டே ஆளை கப் கப்புன்னு பிடிச்சிடுவான் இந்த சிவா. அவன் கதைய முடிச்சிட்டு...அதான் கடத்தி முடிச்சிட்டு உனக்கு நான் போட்டோ அனுப்புறேன். நீ இதுக்கு உங்க மாமா வரைக்கும் போக வேண்டாம்” என்று பெருமை அடித்தான் சிவா.

 

“மச்சி, அப்புறம் ஒரு சின்ன ரிகேவ்ஸ்ட். தப்பா நினைக்க மாட்ட தான” என தயங்கிய படி கேட்டான் கார்த்திக்.

 

“சொல்லு மாப்பிளே”, சொல்ல சொல்லி தூண்டினான் சிவா.

 

“தப்பா நினைக்க மாட்ட தான… ம்ம்ம்ம்…”, மீண்டும் ஒரு முறை உறுதி படித்த கேட்டான்.

 

“கோவிச்சிக்க மாட்டேன்டா…” என்றான் சிவா தயாள மனதாக.

 

“சத்தியமா?”, கார்த்திக்.

 

“சாமி சத்தியமாடா”, சிவா.

 

“நிச்சயமா?”, கார்த்திக்.

 

“சர்வ நிச்சயமா”, சிவா .

 

“அது வந்து….”, கார்த்திக் இழுத்தான்.

 

“வந்து போயின்னு ...நண்பேன்டா...எதையும் தாங்குவேன் சொல்லு சொல்லு”

 

“அது வந்து மச்சி வழக்கம் போல இதையும் சொதப்பிடாதன்னு சொல்ல வந்தேன்” என்று வேகமாக சொல்லி முடித்தான்.

 

“”, நொந்து போன சிவாவிடம் இருந்து பதில் இல்லை.

 

“மச்சி…. யு தேர்” என பதில் வராமல் சிவாவை அழைத்தான்.

 

“மீ சேற்”, அவன் முகத்தில் சேறு பூசி அசிங்க படுத்திவிட்டதை கொலைவெறி பாணியில் தங்க்ளிஸ்ஸில் சொன்னான்.

 

“என்னடா… பீல் பண்றியா? சந்தியா கூட சொன்னாடா...சிவா கூட பிரண்ட்ஷிப் வைச்சிக்காதன்னு. அதெல்லாம் முடியாது போடின்னு...ஒரு போடு போட்டேன் பாரு அப்படியே அடங்கிட்டா. நாம அப்படியா பழகியிருக்கோம்? நண்பேன்டா. ” என்று முழு பூசணிக்காயை சோற்றிற்குள் மறைக்க பார்த்தான் கார்த்திக்.

 

“நம்பிட்டேன்டா… பேதி காபிய கொடுத்து பீதிய கிளப்புன அனுபவம் ஒன்னு போதும்டா சாமி. ஆளை விடு. காரியத்தை முடிச்சிட்டு படத்தை அனுப்புறேன். பை” என்று விட்டு காரியத்தை முடிக்க தீயாய் வேலை பார்த்தான் சிவா.

 

ருத்துவனை அறையில் சந்தியாவிற்கு ஒதுக்க பட்ட அறையில் லக்ஷ்மி, தன்ராஜ் பாண்டியன் மட்டும் இருந்தனர். ஸ்ரீமாவும் அவளது கணவரும் அப்பொழுது தான் தருணை தூக்கிக் கொண்டு வீட்டில் உள்ள விருந்தினருக்கு ஹோட்டலில் காலை உணவு ஏற்பாடு செய்து தர புறப்பட்டு சென்றனர். பாண்டியன் தன்ராஜிடம் வந்து கார்த்திக்கை பற்றி குறை சொல்ல முயன்று, “மாமா, நல்லா பிழிய பிழிய வேலை வாங்கிட்டு இப்போ முடியலைன்னவுடனே நல்லவனாட்டம் உதவிக்கு ஓடி வர்றாங்க. நான் தான் கைநிறைய சம்பாதிக்கிறேன்ல, இப்போ இவ வேலைக்கு போகணும்னு யாரு கேட்டது? நல்லா வீட்டில ரெஸ்ட் எடுக்க சொல்லி உடம்பை தேத்திவுடுங்க. பாவம் சந்தியா” என்று சந்தியாவிற்கு வருந்துவது போல நடித்தான்.

 

அதை பார்த்த தன்ராஜ், “சந்தியா வேலைக்கு போற கம்பெனி என் ப்ரண்ட் ராஜ் மோகன் தான் சிபாரிசு பண்ணார். இப்போ பாத்தீங்களே அந்த பையன் கார்த்திக் அமெரிக்காலே படிச்சி வேலை பாத்துகிட்டு இருந்துட்டு அவங்க அப்பாக்கு முடியலைன்னு இங்க வந்து பிஸ்னஸ் பண்றான். தங்கமான பையன். என்ன பொறுப்பு, என்ன சாமர்த்தியம்... அதைவிட அவன் பணிவை பாத்தீங்களா? சதாசிவம் சார் அவரை போலவே பிள்ளைகளையும் நல்லா வளர்த்திருக்கார்.” என்று கார்த்திக்கின் பெருமை பாடினார் தன்ராஜ். பாண்டியன் உள்ளுக்குள் பொங்கினான். “பணக்காரனை பாத்தவுடனே பல்லை இளிக்கிறியா? கல்யாணம் மட்டும் ஆகட்டும். இதை சொல்லி சொல்லியே உன்னையும் உன் பொண்ணையும் புண்ணாக்குறேன்” என்று மனதிற்குள் கெடுதலாய் யோசித்தான்.

 

“நீங்க என்ன தான் சொல்லுங்க மாமா நம்ம வீட்டு பொண்ணுக்கு நம்ம அளவுக்கு யாரும் அக்கறை பட மாட்டாங்க. அவங்க அவங்க சுயநலத்துக்கு தான் செய்வாங்க. பேச்சு மட்டும் அப்படியே இனிப்பை பூசி பேசுவாங்க. நீங்க நல்லவங்க மாமா. அதான் வெளுத்தது எல்லாம் பாலுன்னு நினைக்கிறீங்க. இப்போவே மணி ஏழரை. பத்து மணிக்கு எப்படி நிச்சயம் பண்ண முடியும்? எல்லார்கிட்டயும் விஷேசம்ன்னு வேற சொல்லிட்டோமே” என தன்ராஜின் எண்ணத்தை அறிய கேட்டான் பாண்டியன்.

 

“பெண் பேசுறதை நிறுத்திடலாம் மாப்பிளை. திடீர்னு முடிவு பண்ணதுனால நெருங்கின சொந்தத்துக்கு மட்டும் நேத்து போன்ல சொன்னேன். அவங்ககிட்ட மட்டும் விவரத்தை தெரிவிச்சா போதும். பக்கத்து வீட்டிக்கு எல்லாம் காலையில தான் சொல்றதா இருந்தது. அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சே” என்றார் தன்ராஜ்.

 

“ஆனா மாமா, ஊர்ல இருந்து வந்தவங்ககிட்ட என்ன சொல்ல? நீங்க சொன்ன மாறி கண்டிப்பா இன்னக்கு வேண்டாம். சந்தியாவுக்கு பயப்படுற மாறி இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாங்களே. அது நல்லாயிடுச்சுன்னா நாளைக்காவது வைக்க முடியுமா?” என கேட்டான் பாண்டியன்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.