(Reading time: 51 - 101 minutes)

திருமகனே…. திருமகனே

நீ ஒரு பார்வை பாராய்

வெண்ணிறப் புரவியில் வந்தவனே

வேல்விழி மொழிகள் கேளாய்

அற்றைத் திங்கள் அந்நிலவில்

கொற்றப் பொய்கை ஆடுகையில்

ஒற்றைப் பார்வை பார்த்தவனும் நீயா???...”

என அவளும் அவனைப் பார்த்து கேள்வி கேட்டுக்கொண்டே பரதம் ஆட… அவன் வியந்து அவளைப் பார்த்தான்…

அற்றைத் திங்கள் அந்நிலவில்

கொற்றப் பொய்கை ஆடுகையில்

ஒற்றைப் பார்வை பார்த்தவனும் நீயா???...

என மீண்டும் அவள் அவனைப் பார்த்து கேட்க… அவன் ஆம் என்று தலை அசைக்க அவள் முகம் சிவந்து போனாள்…

அவளது சிவந்த முகம், அவளை முதன் முதலில் பார்த்த தருணத்தை நினைவு கூற,

மங்கை மான் விழி அம்புகள் என் மார் துளைத்ததென்ன…”  என ஆதர்ஷ் சொல்ல…

பாண்டி நாடனைக் கண்டு என் மனம் பசலைக் கொண்டதென்ன…” என்றாள் அவளும் அவனைக்காணாத நாட்களில் தன் நிலையை…

நிலாவிலே பார்த்த வண்ணம்…. கனாவிலே தோன்றும் இன்னும்என அவன் அவள் நிலையை தான் கண்டதாக கூற,

இளைத்தேன்துடித்தேன்பொறுக்கவில்லை

இடையில் மேகலை இருக்கவில்லைஎன அவளும் அவனது ஆபத்து பற்றி தான் கனவில் கண்டதை அறிந்து துடித்ததை சொல்லியவள்…

யாயும் யாயும் யாராகியாரோ நெஞ்சு நேர்ந்ததென்ன?...” என்று அவள் அவர்கள் பிரிந்ததை சொல்ல…

யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன…” என அவனும் அவர்கள் பிரிந்து சேர்ந்ததை அழகாக அவளுக்குப் புரிய வைக்க…

அவனது வார்த்தைகள் அவளுக்கு இதமாக இருக்க, அவளுக்கு அவன் முதன் முதலில் தன்னை தீண்டிய தருணம் நினைவுக்கு வந்தது…

ஒரே ஒரு தீண்டல் செய்தாய்

உயிர்க்கொடி பூத்ததென்ன

ஒரே ஒரு தீண்டல் செய்தாய்

உயிர்க்கொடி பூத்ததென்ன…”

என அவள் உருகி கண்ணில் காதல் வழிய பாடி ஆட…

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல்

அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன…”

என அவன் இன்றைய அவர்களின் திருமண பந்தத்தைக்கூற அவள் ஆடாமல் நின்று அவனையேப் பார்த்திருந்தாள் விழி அகற்றாமல்…

அவனோ அவனது வார்த்தைகளுக்கு அவள் காட்டிய அபிநயத்தில் தொலைந்து போனவனாய் நின்றிருக்க…

அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து நின்று கைத்தட்ட அந்த ஓசை அவர்கள் இருவரையும் நனவுலகுக்கு கொண்டு வந்தது…

காதல் நதியோ அவர்களது காதல் திருமண பயணத்தை ரசித்து துள்ளி குதித்தது…

இந்த வாரம், கல்யாணத்திற்காக, நிறைய பாடல்களை பயன்படுத்த விரும்பினேன்… அதனாலே இந்த வாரம் கதையை விட, பாடல்கள் நிறைய இருந்திருக்கும்… அதை பொறுமையாக படித்த அனைவருக்கும் என் நன்றி…

வரும் வாரத்தோடு நமது காதல் நதியில் தொடர்கதை நிறைவடைய இருக்கிறது என்பதை இங்கே உங்களிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்…

கதையைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்…

மீண்டும் வரும் வாரம் காதல் நதியில் சந்திக்கலாம்…

நன்றி….

அடுத்த அத்தியாயத்துடன் முற்றும்!

Go to episode # 30

Go to episode # 32

{kunena_discuss:739}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.