(Reading time: 51 - 101 minutes)

வுக என்ன சொன்னாங்க?...”  என்று ஓடி ஒளிய முற்பட்ட காவ்யாவைப் பிடித்து மைத்ரி கேட்க, அவள் ஹூம்… ஹூம்… என்று தலை ஆட்ட…

சட்டென்று மயூரி அதை தனதாக்கிக்கொண்டு, காவ்யாவைப் போல் வெட்கப்பட்டுக்கொண்டு

அதை நான் சொல்ல மாட்டேங்க…”  என்றாள் அவளும் முகம் மறைத்தபடி…

அவுக என்ன தந்தாங்க??...”  என்று மைத்ரி மறுபடியும் காவ்யாவிடத்தில் கேட்க…. இம்முறையும் காவ்யா மௌனம் சாதிக்க…

இந்த தடவை ஷன்வி குறுக்கே புகுந்து, காவ்யா சொல்வதை போல்

அதை நான் பொத்தி வைச்சேங்க…”

என்றாள் காலால் தரையை கோலம் போட்டுக்கொண்டே…

வேகமாக வந்த காவ்யா, ஷன்வி, மயூரி இருவரின் காதையும் பிடித்து திருகியபடி,

சித்தன் கூட காதலிச்சா புத்தி மாறுவானே

போதி மர உச்சியில ஊஞ்சல் ஆடுவானே…”

என்று சற்றே அவர்கள் தலையில் உரைக்கும்படி பாட…

அவளிடமிருந்து தங்களை விடுவித்துக்கொண்டவர்கள், ஒருவரின் பின் ஒருவராக நின்று கொண்டு,

சிரிப்பீக… - ஷன்வி

அழுவீக…. - மயூரி

கிறுக்காக திரீவீக…. – மைத்ரி….

என்று வரிசையாக பாடிக்கொண்டே செய்கையில் செய்து காட்ட அனுவும் காவ்யாவும் அம்மூவரையும் துரத்தினர்…

எங்கேடி போனாளுங்க…. இங்கே தான வந்தாங்க… இவளுங்களை இன்னைக்கு சும்மா விடக்கூடாது…. என்று அனு சொல்ல…

உண்மைதான் அனு… எல்லாரும் என்ன நினைச்சிருப்பாங்க… நம்மளை… பெரியவங்க எல்லாரும் இருக்கும்போது… இப்படி கேலி செஞ்சு பாட்டு பாடிட்டாங்களே… என்று காவ்யா சொன்ன போது

அதிலென்ன தப்பு இருக்கு காவ்யா… உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சு 60 வருஷமா ஆச்சு…?... கல்யாண வீட்டில் கலகலன்னு இப்படிதான் இருக்கணும்… அது பெரியவங்களா இருந்தாலும் சரி, உங்களை மாதிரி சின்னஞ்சிறுசுகளா இருந்தாலும் சரி… அப்பதான் கல்யாணம் பண்ணிக்கப்போற புதுஜோடிங்களுக்கு மனசில இருக்குற பயமும், தயக்கமும், தெரியாது… அதற்காகத்தான் உறவினர்கள், ஃப்ரெண்ட்ஸ் என்று எல்லாரும் அவங்களை இப்படி கிண்டல் பண்ணி பாட்டு பாட சொல்லுவாங்க… அதை இங்கே நீங்க செய்யுறதுக்கு முன்னாடி வாலுங்க மூணு பேரும் உங்களுக்கு செய்துட்டாங்க… என்றபடி சொல்லி சிரித்த கோதை நான் சொன்னது சரிதானே செல்வி என்று கேட்க…

அவர் சரியா சொன்னீங்க அண்ணி… என்று சொல்லிவிட்டு, இங்கே பாரு காவ்யா… உன்னோட கல்யாணத்தையும், அனுவோட கல்யாணத்தையும் நாங்க யாருமே சேர்ந்து பார்க்கலை… இந்த கல்யாணத்துல உங்களை கேலி பண்ணி பிள்ளைங்க பாடி ஆடும்போது அதை எல்லாம் பார்க்குற வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துவிட்டது என்று எண்ணி சந்தோஷப்பட்டுக்கிட்டிருக்கோம்… அதனால தயங்காமல் மனதை போட்டு குழப்பிக்கொள்ளாமல் சந்தோஷமா இரு… பெரியவர்கள் சிறியவர்கள் தவறு செய்தால் தான் திருத்துவாங்க… இப்படி சந்தோஷமா ஆடி பாடி இருந்தா யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க… என்று சற்றே எடுத்து சொன்னவர், வரேன் என்றபடி கோதையுடன் அங்கிருந்து அகல,

காவ்யாவும், அனுவும் ஒருவரை ஒருவர் பார்த்து திகைத்துப் பின் புன்னகைத்துக்கொண்டனர்…

என்ன அக்காஸ்…. யாரையோத் தேடின மாதிரி இருந்தது?... கிடைத்துவிட்டார்களா?... என்றபடி வாலு முகிலன் அங்கே வர,

டேய்… ஓடிடு… இருக்குற கடுப்பில் அடித்துவிடுவேன்… என்றாள் அனு…

ஓஹோ… அடிப்பியா… எங்கே அடி பார்ப்போம்…. என்று அவ்னீஷ் முன்னே வர,

டேய்… என்னடா… கொழுப்பா… ஓடிடு… சொல்லிட்டேன்… என்றாள் அனு அவனை முறைத்துக்கொண்டே…

கொஞ்சம் அதை இங்கே பார்த்து சொன்னால் நல்லா இருக்கும் என்றான் ஹரீஷ்…

என்னடா பார்க்கணும் என்று கேட்க ஆரம்பித்தவளின் முன் ஷ்யாமை ஹரீஷ் நிறுத்த, அவள் காவ்யாவின் கைப்பிடித்துக்கொண்டாள்…

அண்ணா… நீங்களுமா இவனுங்களோட சேர்ந்துட்டீங்க?... என்று காவ்யா ஷ்யாமிடம் கேட்க…

என்ன செய்ய தங்கச்சி… சில நேரம் இவனுங்க தானே எங்களுக்கு உதவி பண்ணுறானுங்க… என்று சொல்ல…

அப்படி என்ன உதவி செய்துட்டாங்களாம் என்ற காவ்யாவிற்கு ஷ்யாம் பதில் சொல்லும் முன்னர், அதை நான் சொல்லுறேண்டா பொண்டாட்டி என்றபடி அங்கே தினேஷ் வர, இப்போது காவ்யா அனுவைப் பார்த்துக்கொண்டாள்…

எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன் என்றனர் மயூரி, ஷன்வி, மற்றும் மைத்ரி மூன்று பேரும்….

வந்துவிட்டீர்களா?... ஆமா… எங்கே இன்னும் இரண்டு பேரை ஆளைக்காணோம்… என்று தினேஷ் கேட்க,

ஓ… அவங்களை கேட்குறீங்களா?... அவங்க மேடைக்கு கீழே இருக்குறாங்க… நம்ம வீட்டு பெரியவங்க மட்டும்தான் அங்கே இருக்குறாங்க… மற்ற எல்லாரும் சாப்பிட போயிட்டாங்க என்று  மயூரி சொல்ல…

அப்போ சரி வாங்க அங்கே போகலாம்… என்றபடி தினேஷ் முன்னே செல்ல… மற்ற அனைவரும் அவனை பின் தொடர்ந்தனர்…

போகும் வழியில் அவன் மயூரியையும், முகிலனையும் அழைத்து அவர்களிடம் ரகசியமாக ஏதோ சொல்லிவிட்டு மற்ற அனைவருடனும் சேர்ந்து ஆதி-ரிகா இருக்குமிடம் வந்தான்…

என்னவென்று கேட்ட, ஷ்யாமிடத்தில் அவன் விஷயத்தை சொல்ல, அவன் குதூகலமானான்…

இவர்கள் அனைவரும் தடதடவென்று அங்கே வர, பெரியவர்கள் அனைவரும் என்னாயிற்று என்ற எண்ணத்துடன் அவர்களைப் பார்க்க,

தினேஷ் அவர்கள் அனைவரையும் அமர சொன்னான்… நீங்களும் போங்க என்று மைத்ரி, ஷன்வி, ஹரீஷ், அவ்னீஷ் ஆகியோரையும் போக சொல்ல… அவர்களும் அவன் பேச்சுக்குக் கட்டுப்பட்டு பெரியவர்களிடத்தில் சென்றனர்…

அந்த நேரம் மயூரியும் முகிலனும் வர, அவர்கள் வந்து தினேஷின் கைகளிலும் ஷ்யாமின் கைகளிலும் மறைமுகமாக ஒன்றை கொடுத்துவிட்டு அவர்களும் பெரியவர்களிடத்தில் சென்றனர்…

ஆதி-ரிகாவைப் பார்த்த சித்து,நந்து மற்றும் அபி மூன்று பேரும் அவர்களிடத்தில் வர,

அபியும் நந்துவும் ரிகாவின் இருபுறமும் அமர்ந்து கொள்ள, மைத்ரி, ஷன்வி, மயூரி மூன்று பேரும் அடுத்தடுத்து நந்துவின் அருகில் அமர,

கோதை-சுந்தரம், ராஜசேகர், செல்வி-ராசு, பர்வதம், செல்லம்மாப்பாட்டி என அனைவரும் அபியின் வலப்பக்கத்தில் அமர,

அவர்களின் இடப்பக்கத்தில், ஆதி சித்துவுடன் அமர, அவனருகில் ஹரீஷ், அவ்னீஷ் மற்றும் முகிலன் மூன்று பேரும் அமர்ந்தனர்…

என்ன இது நம்மளை விட்டு விட்டு இவங்க மட்டும் போய் உட்கார்ந்திருக்காங்க… என்று காவ்யாவும் அனுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு புருவம் உயர்த்திக்கொள்ள…

ஏன் அதை கூட எங்களிடம் கேட்டால் நாங்க சொல்லமாட்டோமா?... இப்பவும் உங்களுக்குள்ளேயே பேசிக்கிறீங்க?... என்றபடி ஷ்யாம் கேட்க…

எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்… அதெல்லாம் சொல்ல முடியாது… என்றாள் அனு…

ஓஹோ… சொல்ல முடியாதாம்டா தினேஷ்… அப்போ நம்ம வேலையை ஆரம்பிச்சிடலாமா?... என்று ஷ்யாம் கேட்க…

கண்டிப்பாடா… இன்னும் என்ன யோசனை… ஆரம்பிக்கலாம்… என்று சொன்ன தினேஷ், வாலு மாப்பிள்ளைகளிடம் கண்களை காட்ட…

அவர்கள் அந்த பாடலை ஒலிபரப்ப ஆரம்பித்தனர்…

காவ்யாவும் அனுவும் என்ன நடக்கப் போகிறது என்று செய்வதறியாது நின்றிருந்தனர்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.