(Reading time: 51 - 101 minutes)

ந்த மாலையைப் போடுங்கோ… என்ற குருக்கள் நெருக்கமாக தொடுக்கப்பட்ட இரண்டு மல்லிகைப்பூ மாலையை இருவரிடத்திலும் கொடுக்க…

ஆதர்ஷ் அதை வாங்கிவிட்டு அவளையேப் பார்த்திருந்தான்… அவள் என்ன இன்னும் மாலை போடாமல் என்ன செய்கிறார் என்றபடி அவனை நிமிர்ந்து பார்க்க… அவன் கையில் மாலையைப் பிடித்தபடி அதன் இடைவெளியில் அவளைப் பார்க்க அவளுக்கு புரிந்து போயிற்று…

சட்டென்று தன் கைகளில் வைத்திருந்த மாலையை அவன் புறம் அவள் உயர்த்த, அவன் புன்னகைத்துக்கொண்டே தலை குனிந்து அவளது கையினால் அவள் சூடும் மாலையை வாங்கிக்கொண்டான் கழுத்தில்… பின், அவனும் அவளுக்கு மாலை சூடினான்…

குருக்கள் இருவரையும் எழுந்து கொள்ள சொல்லி, ஆதர்ஷின் தோளில் போட்டிருந்த துண்டையும், சாகரி அனிந்திருந்த புடவையின் தலைப்பையும் சேர்த்து முடிச்சுப்போட சொல்ல, அனு வந்து அதனை செய்தாள்…

பின் ஆதர்ஷின் வலது கரத்தைப்பிடித்து அவனது சுண்டுவிரலோடு அவளது சுண்டு விரலைப் பிணைத்துக்கொள்ள சொல்ல, அவன் ஆவலோடு, இதுவரை தயங்கியது போல் இல்லாமல் மெல்ல அவள் விரலருகில் விரல் கொண்டு செல்ல, இம்முறை அவள் விரல் நடுங்கவில்லை…

அவன் உதட்டில் நிறைந்து நின்ற புன்னகையுடன், அவள் விரலுடன் தன் விரலை பிணைத்துக்கொள்ள இருவருக்குமே, மின்சாரம் பாய்ந்தது உடலில்…

பின், அவன் பாதம் தொடர்ந்து அக்கினியை மெல்ல மூன்று முறை வலம் வந்து அவள் நின்ற போது, அவள் எதிரே சுவாமி வந்து நின்றார்…

அவள் கண்கள் சலேரென விரிய, அவளது வியப்பைக்கண்ட ஆதர்ஷ் சுவாமியைப் பார்க்க, அவனது விழிகளிலும் ஆச்சரியம்…

இருவரும் அதற்கு மேலும் தாமதிக்காமல், அவர் பாதம் பணிய… அவர்… என்றும் நிறைவாய் வாழ்வீர்கள்… என்று ஆசீர்வதித்தவர், உன் ராம் நிழல் இனி என்றும் உன்னுடன் இருக்கும் தாயே… தீர்க்க சுமங்கலி பவ… என்று அவளிடம் சொன்னவர், உன் கண்ணுக்குள் இனி என்றும் இவளின் உருவம் மட்டுமே இருக்கும் ராம்… உன் கண்ணோடு என்றும் இவள் நிறைந்திருப்பாள்… ஆயுஷ்மான் பவ… என்று அவனிடமும் சொல்லிவிட்டு அகன்றவர், திரும்பி நாளை திருமணமாகப்போகும் தம்பதிகளைப் பார்க்க…

அவர்களும் ஜோடியாக அவர் காலில் விழுந்து வணங்க… அவர்களைப் பின் தொடர்ந்து தினேஷ்-காவ்யா, அனு-ஷ்யாம் ஆகியோரும் அவர் பாதங்கள் பணிய, அவர் மனம்நிறைந்தவராய் எல்லா வளமும் பெற்று நலமோடு வாழ்வீர்களாக… என்று வாழ்த்திவிட்டு சென்றார்…

சிறிது தூரம் சென்றபின், அந்த கர்ப்பகிரகத்தில் இருக்கும் சீதா-ராமனை தொழுதவர், ஆதர்ஷையும்-ரிகாவையும் பார்த்து இரு கைகளையும் வைத்து ஆசீர்வாதம் செய்பவர் போல் வைத்து மனதினுள் உவகையை அனுபவித்துவிட்டு, சந்தோஷத்தில் நீர் தழும்பிய கண்களை அலட்சியம் செய்தவராய் அங்கிருந்து மாயமாய் மறைந்தார்…

பின்னர் வரிசையாக, பர்வதம், செல்லம்மாப்பாட்டி, ராஜசேகர், கோதை-சுந்தரம், ராசு-செல்வி என அனைவரின் ஆசீர்வாதத்தையும் வாங்கியவர்கள், மறக்காமல் தினேஷ்-காவ்யா, அனு-ஷ்யாமிடத்திலும் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டனர்…

அம்மி மிதிச்சு மெட்டிப் போடுங்கோ என்று குருக்கள் சொல்ல…

ஆதர்ஷ், தரையில் முட்டிப்போட்டு நிற்க, சாகரிகா அம்மியில் காலை வைக்க தயங்கினாள்… தன்னவன் தன் கால்களை பிடிப்பாதா என்று?... அவள் எண்ணத்தை படித்தவன் போல் அவன் கண் மூடி இமைக்க, அவள் கால் தானாக அம்மியை நோக்கி உயர..

அவள் வெண் பஞ்சு பாதம் அம்மியைத்தொடும் முன்னரே, தன் இடது உள்ளங்கையில் தாங்கிக்கொண்டான் ஆதர்ஷ் ராம்… அவன் விரல்கள் நான் கும் அவள் உள்ளங்காலில் பட, அவனது பெருவிரல் அவளது காலில் மேல் பாகத்தில் இருந்தது… அவளுக்கு கூச்சம் அதிகரித்தது.. அதை உணர்ந்தவனாய், மெல்ல அம்மியின் மீது அவளைப்பிடித்திருந்த கையை வைத்து, தனது வலது கையினால் அவள் கால் விரலில் மெட்டியை அணிவித்து விட்டு அவளைப் பார்க்க, அவள் மொத்தமாய் அவன் வசமானாள்…

அம்மி மிதிச்சாச்சு… அடுத்து அருந்ததியைப் பார்க்கணும்… வாங்கோ… என்றழைத்துச் சென்ற குருக்கள் அந்த சடங்கையும் முடித்துவிட்டு, நல்ல நேரம் முடியறதுக்குள்ள சாமியை கும்பிட்டு விட்டு வீட்டிற்கு அழைச்சிட்டுப்போங்கோ… என்றார் அவர்…

அவரது காலில் விழுந்த ஆதர்ஷையும் சாகரியையும் நல்லா இருப்பேள்… எப்போதும்… சேமமா… என்று வாழ்த்திவிட்டு சுந்தரம்-கோதை கொடுத்த பரிசையும், தட்சனையையும் பெற்றுக்கொண்டு கிளம்பினார் அவர்…

புதுமணத்தம்பதிகள் தனிக்காரில் வரட்டும் என்று முடிவெடுத்த பெரியவர்கள், அவர்களை தனியாக காரில் வர சொல்ல, ஆதியும் ரிகாவும் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் முன்னரே, இளசுகள் எதிர்ப்பு தெரிவித்தனர்…

அதெல்லாம் முடியாது நாங்களும் கூட போவோம்… என்று முகிலன் அடம்பிடிக்க,., அவனைத் தொடர்ந்து அவ்னீஷும் அடம்பிடிக்க… சரி என்று பெரியவர்கள் சம்மதித்தனர்…

ஆதர்ஷ்-சாகரிகா இருவருக்கும் இடையில் நந்துவும் சித்துவும் அமர, ஆதியின் மடியில் அபி இருந்தாள்… அவர்களுக்கு எதிரே, ஷன்வி, மயூரி, மைத்ரி அமர்ந்திருக்க,

டிரைவர் சீட்டில் ஹரீஷும், அவனுக்கு அருகில் முகிலன் மற்றும் அவ்னீஷும் அமர்ந்திருந்தனர் அந்த பெரிய காரில்… ஹரி அதனை செலுத்தி முன்னே செல்ல

தினேஷ்- காவ்யா, அனு-ஷ்யாம் நால்வரும் பின்னாடியே இன்னொரு காரில் வர, அவர்களுக்கு பின் பெரியவர்கள் அனைவரும் வந்தனர் மற்றுமொரு காரில்…

வீட்டிற்கு தினேஷ் கார் முதலிலும், பெரியவர்கள் கார் இரண்டாவதும், புதுமணத்தம்பதிகள் கார் மூன்றாவதும் வர, ஆதர்ஷும், சாகரியும் மெல்ல காரை விட்டு இறங்கினர்…

அவள் இறங்கவும்,

மணமகளே மணமகளே வாவா

உன் வலது காலை எடுத்து வைத்து வாவா…”

என பாடியபடி அனுவும் காவ்யாவும் ஆரத்தி தட்டோடு வந்து அவர்களுக்கு பொட்டிட்டு உள்ளே அழைக்க,

அவள் மெல்ல ஆதர்ஷைப் பார்க்க, அவன் கண்கள் ஒருநொடி மூடி இமைத்து வா என்றது… அவனுடன் சேர்ந்து முதல் அடி எடுத்து வைத்தவள், அன்று போல் அவனது சுண்டு விரலோடு தன் சுண்டு விரலைப் பிணைத்துக்கொண்டாள்…. அவனுக்கோ அதிர்ச்சியும் சந்தோஷமும் சேர்ந்தே கிடைத்தது… அத்தனை பேர் மத்தியில் எப்படி அவள் முகம் பார்த்து பேச என்று அவன் யோசித்துக்கொண்டிருந்த போது,

இன்னும் என்ன யோசனை உள்ளே வாங்க… என்ற குரல் கேட்க… தன்னவளுடன் உள்ளே சென்றான் ஆதர்ஷ்…

அதன் பின், சம்பிரதாயங்கள் அனைத்தும் வரிசையாக நடைபெற, வாலு மாப்பிள்ளைகளும், வாலு பெண்களும், அவர்களை கேலி, கிண்டல் செய்து பொழுதை கழித்தனர்…

அதன் பின் பெண்கள் வந்து சாகரியை அழைத்து செல்ல, ஆண்கள் வந்து ஆதர்ஷை அழைத்துச் சென்றனர்…

இரவும் வந்தது…

என்ன எல்லாரும் தூங்கலையா?... சீக்கிரம் போங்க… காலையில நேரத்தோடு எழணும்… போங்க… என்று கோதை சொல்ல..

அதெப்படி அம்மா.. தூங்க முடியும்… இங்கே பாருங்க… இந்த பொண்ணை… என்று அனு சாகரியை அழைத்து வந்து முன்னே நிறுத்தி…

ரிகாவிற்கு என்ன ரீதியில் கோதை பார்க்க, அவள் திருதிருவென முழித்தாள் எதற்காக தன்னை வைத்து இப்படி பேசுகிறார்கள் என தெரியாமல்…

ஆனால் அவருக்கு புரிந்தது… ஹேய்.. அனு… சும்மா இரு… என்று மகளை அதட்டியவர், காவ்யாவைப் பார்க்க அவள் அவர் அருகில் வந்து, உங்க மருமகளை ஒன்னும் செய்ய மாட்டோம் அம்மா என்று சொல்ல… அவர் சிரித்தார்…

ஆமாம் அத்தை… உங்க மருமகளை ஒன்னுமே செய்ய மாட்டோம்… கொஞ்சம் கேலி, கிண்டல் பண்ணிட்டு தூங்கப் போயிடுறோம்… சரியா… என்று வாலு பெண்கள் மூவரும் சொல்ல… கோதை வேண்டாம் என வாயெடுக்கப்போகும்போது, பர்வதமும் செல்லம்மாப்பாட்டியும் வந்து பேசாமல் இரு என சைகை காட்ட, செல்வியும் அதை ஆமோதித்தார்…

அந்நேரம் சுந்தரம், ராஜசேகர், மற்றும் ராசு மூவரும் வர, ராசு, தமக்கையிடம், என்னக்கா யாரும் தூங்க போகலையா என்று கேட்க… அவரோ வாலு பெண்களைப் பார்த்தார்…

அப்போது வாடா என்று ஆதியை இழுத்துக்கொண்டு முகிலனும், ஹரீஷும் வர, அவ்னீஷ் அவன் பின்னாடியிருந்து அவனை தள்ளிக்கொண்டே வந்தான்…

டேய்…. டேய்… அவனை விடுங்கடா… என்று சொல்லிக்கொண்டே ஷ்யாமும், தினேஷும் அங்கே வந்து சேர, அனைவரும் அந்த இடத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்…

பெரியவர்கள் அனைவரும் புரியாமல் பார்க்க, தினேஷும், ஷ்யாமும், என்னடா செய்யப்போறாங்க இவங்க… என்ற கேள்வியோடு அவர்களைப் பார்த்திருக்க…

வாலு பெண்களும், பசங்களும் தங்களுக்குள் சிரித்துக்கொண்டனர்… அனுவும், காவ்யாவும் கூட…

சாகரியோ, நிமிர்ந்தே பார்க்கவில்லை… ஆதர்ஷ் அங்கே அந்த நொடி முதல் அவளை தவிர வேறு யாரையும் பார்க்கவில்லை…

நலங்கு நேற்று முடிந்திருக்கலாம்… ஆனால் கொண்டாட்டம் இன்று தான்… என்று சொல்லிய முகிலன்… ரெடி ஸ்டார்ட் என்று சொல்ல…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.