(Reading time: 51 - 101 minutes)

ன்ன கோதை, இந்த ஆதிக்கும் ரிகாவிற்கும் என்ன ஆயிற்று..?... எதற்காக இப்படி தனியே இருக்கிறார்கள்?... அவர்களோடு சேர்ந்து ஆடிப்பாட வேண்டியது தானே?... என்று பர்வதம் கேட்க…

அதுதான் எனக்கும் தெரியலை அம்மா… நலங்கே வேண்டாம் என்று சொன்னான் ஆதர்ஷ்… மற்ற மூன்று பேரும் தான் அவனை வற்புறுத்தி இந்த நலங்கிற்கே சம்மதிக்க வைத்தனர்…

இது என்ன கோதை இப்படி சொல்கிறாய்?... நலங்கு வேண்டாம் என்றானா?... என்று ஆதங்கத்துடன் கேட்டார் செல்லம்மாப்பாட்டி…

ஆமாம்… அம்மா… அப்படித்தான் சொன்னான்… அதுவும் திருமணம் தான் சேர்ந்து நடக்க முடியவில்லை… நலங்காவது நடக்கட்டும் என்ற ரீதியில் தான் அவன் சம்மதித்தான்…

என்ன கோதை சொல்கிறாய்???... என்று இருவருமே அதிர்ச்சியாக கேட்க… கோதை நடந்ததை அவர்களிடத்தில் சொல்ல ஆரம்பித்தார்…

திருமணம் எளிமையாக கோவிலில் வைத்து நடக்கட்டும் அம்மா… தம்பிங்களுக்கு வேண்டுமானால் மண்டபத்தில் திருமணம் விமரிசையாக திருமணம் நடத்தலாம்…

என்ன ஆதர்ஷ் உளறுகிறாய்?... புரிந்து தான் பேசுகிறாயா நீ?...

இதில் என்னம்மா உளறல் இருக்கிறது… நான் முதன் முதலில் அவளை கோவிலில் வைத்து தான் சந்தித்தேன்… கோவிலில் வைத்து தான் முதன் முதலில் அவள் நெற்றியில் பொட்டும் இட்டேன்… இப்போது தாலி மட்டும் வேறு இடத்தில் வைத்து எப்படிம்மா நான் அணிவிக்க முடியும்???...

அவன் சொல்வதில் இருக்கும் உண்மையும், நியாயமும் கோதைக்கு புரியத்தான் செய்தது… ஆனாலும், அவர் மனம் தெளிவாகவில்லை… சரி சுவாமியைப் பார்த்து கேட்டுவிடலாம் என்று சுந்தரத்துடன் அவர் சேர்ந்து சென்று கேட்ட போது,

அந்த சுவாமியோ, உங்கள் முதல் மகனுக்கு இறைவனின் சந்நிதியில் வைத்து தான் திருமணம் முடியும்… வேறு எங்கேயும் வைத்து செய்யலாம் என்று நினைத்தால் அது நடக்காது அம்மா… என்று சொல்ல

கோதையும் சுந்தரமும் கலங்கி போயினர்…

உண்மைதான் அம்மா… இவர்கள் இருவரும் பிரிந்து தானே இப்போது சேர்ந்திருக்கிறார்கள்… அதற்கு காரணம் இவர்களது ஜாதகத்தில் இருந்த கிரக நிலை தான்… அந்த கிரகங்களின் பார்வை முழுமையாக விலக வேண்டுமெனில் உங்கள் மகனுக்கும் மருமகளுக்கும் கோவிலில் வைத்தே திருமணம் முடித்து வையுங்கள்… உங்கள் மகனின் விருப்பமும் அதுதானே… அதையே நிறைவேற்றுங்கள்… நன்மையே சேரும்… என்றார்…

சரி சுவாமி… மற்றவர்களுக்கும் கோவிலில் வைத்தே திருமணம் செய்து வைக்கலாமா?... நான்கு பேருக்கும் ஒரே நாளில்… ஒரே முகூர்த்தத்தில்…???

வேண்டாம்… அதை மட்டும் செய்துவிட வேண்டாம்… முதலில் மூத்த மகனுக்கு கோவிலில் வைத்து திருமணம் செய்யுங்கள்… பின் அடுத்த நாளில் மற்ற மூவருக்கும் திருமணம் செய்யுங்கள்… அது கோவிலாக இருந்தாலும் சரி, மண்டபமாக இருந்தாலும் சரிதான்… என்று சுவாமி கூறிவிட, கோதையும் சுந்தரமும் சரி என்று வந்துவிட்டனர்…

என்னங்க… சுவாமி… இப்படி சொல்லுறார்… இப்போ என்ன செய்ய?...

அதுதான் கோதை எனக்கும் புரியலை… ஆதியை விட்டுவிட்டு அவர்கள் மூன்று பேரும் தனியே எப்படி திருமணம் செய்ய சம்மதிப்பார்கள்?... என்று சுந்தரமும் வருத்தப்பட்டுக்கொண்டிருந்த போது,

என்னப்பா?... என்ன கவலையா இருக்கீங்க?... என்றபடி அங்கே ஆதர்ஷ் வந்தான்…

இல்லப்பா… மண்டப்பத்தில் வைத்து கல்யாணம் நடத்தலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்…

தாராளமா செய்யலாம்ப்பா… தம்பிங்களுக்கு… என்றான் அவன் சிரித்தபடியே…

ஆனால், அதற்கு உன் தம்பிகள் சம்மதிக்கணுமே… என்றார் சுந்தரம்..

ஏன் சம்மதிக்காமல் என்ன?... கோவிலில் என் திருமணத்தை முடித்து விட்டு, மண்டபத்திற்கு வந்து அடுத்த முகூர்த்தத்திலேயே தம்பிகள் மூன்று பேருக்கும் திருமணம் முடித்திட வேண்டியது தானே… என்று இலகுவாக சொன்ன மகனை புரியாமல் பார்த்தார் சுந்தரம்…

என்னப்பா?... நான் சொல்வதை நிறைவேற்றுவது கடினம் என்று நினைக்கிறீர்களா?... என்று ஆதி கேட்க…

வேலைகள் எல்லாம் பெரிய விஷயம் இல்லை ஆதி… திருமணம் தான் பெரிய விஷயம் என்றார் கோதை…

புரியவில்லை அம்மா… எனக்கு நீங்கள் சொல்வது என்று ஆதி சொல்ல..

ஒரே நாளில் உங்கள் நான்கு பேருக்கும் திருமணம் நடக்க விதியில்லை ஆதி… உனக்கு முதலிலும், அவர்களுக்கு அதற்கு அடுத்த நாளும் தான் நடக்க விதி உள்ளது என்று கோதை நிறுத்தி நிதானமாக சொல்ல,

ஆதிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது…

பின் மனதை தேற்றிக்கொண்டு நான் தம்பிகளிடம் சொல்லிக்கொள்கிறேன் அம்மா… கவலை வேண்டாம் விடுங்க… என்று சொல்லிவிட்டு அகன்றவனிடம்,

சரிப்பா… நலங்கிற்கு தேவையானதை வாங்க வேண்டும்… வா போகலாம்… என்று சுந்தரம் சொல்ல…

அதற்கு நான் எதற்கு அப்பா?... தம்பிகளை அழைத்து செல்லுங்கள்… என்றான் ஆதர்ஷ்…

நலங்கு உன் தம்பிகளுக்கு மட்டும் இருந்தால் நீ சொல்வது சரியாக இருக்கும் ஆதி என்றார் சுந்தரம் அமைதியாக…

அப்பா… எனக்கு இந்த நலங்கு எல்லாம்… என்று பேச ஆரம்பித்தவன், திடீரென்று சரிப்பா… திருமணம் தான் ஒரே நாளில் நடக்க வாய்ப்பில்லை… நலங்காவது நடக்கட்டும்… ஆனால் ஒன்று, எனக்கு நலங்கு முடிந்த பதினைந்து நிமிடங்களில் தம்பிகளுக்கு நடக்க வேண்டும்… ஒரு கணம் கூட தாமதம் இருக்க கூடாது…  

அதையும் ஏன் பதினைந்து நிமிடம் கழித்து வைக்க சொல்லுகிறேன் என்றால், அவர்கள் எனக்கு தான் நலங்கு என்று ஆடி பாடிக்கொண்டிருப்பார்கள்… அப்போது அவர்களுக்கும் அன்று தான் நலங்கு என்று தெரிய வாய்ப்பு இருக்காது… யாரும் சொல்லவும் வேண்டாம்… திடீரென்று அவர்களையும் மேடையில் அமர வைக்கும்போது, அவர்கள் முகத்தில் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி இருக்கும்… அதை நான் பார்க்க வேண்டும் என் தம்பிகளின் முகத்தில்… அதனால் இந்த நலங்கு அவர்களுக்கு நான் கொடுக்கும் சர்ப்ரைஸ்… என்றவன், திருமணம் போல் நலங்கும் தனித்தனி நாளில் தான் நடக்க வேண்டும் என்றால் நலங்கு என்ற பேச்சையே என்னிடத்தில் எடுக்காதீர்கள்… என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்ட மகனையேப் பார்த்திருந்தனர் பெற்றவர்கள்…

என்ன கோதை… இன்னும் என்ன யோசனை?.. என்று கேட்ட சுந்தரத்திடம், இவன் இப்படி பேசிட்டு போறானேங்க… எப்படி மற்ற மூணு பேரிடத்திலும் திருமணம் அடுத்தடுத்த நாளில் என்று சொல்ல??... என்று கேட்டார் கோதை…

அதைதான் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ஆதி சொன்னான் அல்லவா?... கவலையை விடு… அவன் அவனது தம்பிகளிடத்தில் அதை சொல்லிக்கொள்வான்… ஆதிக்கு கல்யாணத்திற்கு முந்தின நாள் நலங்கு என்று மட்டும் மூன்று பேரிடத்திலும் நாம் சொல்லலாம்… என்றார் சுந்தரம்…

நடந்ததை எல்லாம் கோதை சொல்லி முடித்ததும், நலங்கு நடக்கும்போது ஆதி அதற்காகத்தான் உன்னை அருகே அழைத்து உன்னிடம் பேசினானா?... என்று பர்வதம் கேட்க…

அவரும் ஆமாம்.. அம்மா… அதற்காகத்தான் அழைத்தான்… நேரமாச்சு அம்மா… தம்பிங்களை ரெடி பண்ணனும்… மாமாகிட்ட சொல்லுங்க… அவங்க ரெடி பண்ணிடுவாங்க… என் தம்பிங்க முகத்துல சீக்கிரம் இதை விட அதிக சந்தோஷத்தை நான் பார்க்கணும்ன்னு என்னிடம் சொல்லிவிட்டான்… நான் அதன் பிறகு தான் மாப்பிள்ளைகளிடம் சென்று மற்றவர்களை தயார் செய்ய சொன்னேன்… என்றார் கோதை…

சரிவிடு கோதை… எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொள்ளலாம்… மனதைப் போட்டுக்குழப்பிக்கொள்ளாமல் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கலாம்… என்றார் பர்வதம்…

ஆமாம் கோதை… அவங்க சொல்லுறது சரிதான்… ஆனா, குதிரை மேல நாலு பேரும் வந்தாங்களே… அதற்கு எப்படி சம்மதிச்சாங்க மற்ற மூணு பேரும்??? என்று செல்லம்மாப்பாட்டி கேட்க…

எனக்கு கொஞ்சமாச்சும் கம்பெனி குடுங்கடா… நான் தனியா வர எனக்கு ஒரு மாதிரி இருக்கு… கொஞ்சம் கூட வாங்கடா… அப்பதானடா நாளைக்கு நான் உங்க நலங்கில் சந்தோஷமா ஆடிப் பாடி கலந்துக்க முடியும் என்று பேசி ஆதி தான் அவர்களை சம்மதிக்க வைத்தான் அம்மா… என்று கோதை சொன்னதும்,

நிஜமாவே ஆதி ரொம்ப நல்ல பையன் தான் கோதை…. அவனை நல்லா வளர்த்துருக்கிற… தம்பிகள் மேல பாசமாகட்டும், பெரியவங்க மேல மரியாதை ஆகட்டும்… ஆதி தனியா தெரியுறான்… என்றனர் இருவரும்…

பின், அவனையும் நடக்கும் நலங்கில் ஆடி பாடி இருக்க சொல்லு… அப்பதானே… பார்க்க நல்லா இருக்கும்… என்று பெரியவர்கள் இருவரும் சொல்ல… கோதைக்கும் அது சரியென்றே பட்டது…

ஆனால் ஆதி அதற்கு சம்மதிக்கவில்லை… தாயிடத்தில் இருக்கட்டும் அம்மா… அதுதான் தம்பிங்க, அவங்க ஜோடிங்க, அனுக்கா, காவ்யாக்கா, ஷ்யாம், தினேஷ் மாமா… குட்டீஸ், எல்லாரும் ஆடுறாங்கல்ல… அதுவே போதும்மா… நான் சந்தோஷமா இருக்கேன்… என்று தாயின் கைகளைப்பிடித்துக்கொண்டு பேசியவன், அவர் தோளைச்சுற்றி கைவைத்து அணைத்தபடி அவர்கள் ஆடிப்பாடுவதை மகிழ்வுடன் கண்டு களித்தான் அவரின் மூத்த மகன் ஆதர்ஷ்…  ஆனால் அவனை விட்டு பார்வையை அகற்றாதவராய் ஈரம் கொண்ட விழிகளோடு பெருமையோடு மகனைப் பார்த்திருந்தார் கோதை… அவன் தாயிடம் சிரித்த முகத்தோடு பேசிக்கொண்டிருந்ததையும், அவன் முகத்தில் இருந்த அந்த அளவில்லாத உவகையையும் கண்ட சாகரிக்கோ தானாகவே இதழ்கள் விரிந்தது மகிழ்வில்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.