(Reading time: 51 - 101 minutes)

வர்களுக்குப் பெரியவர்கள் முறைப்படி நலங்கு வைக்க ஆரம்பிக்க… ஆதியின் முறை வந்தது நலங்கு வைக்க சொல்லி…

வந்தவன், என்னடா மாப்பிள்ளைகளா??... எப்படி இருக்கு நம்ம சர்ப்ரைஸ்???... என்று கண்ணடித்துக்கொண்டே கேட்க…

இது உன் வேலைதானா?... என்ற ரீதியில் கோபமாக பார்த்த மூவருமே தன்னை மறந்து சிரித்து, ஆதியைக் கட்டிக்கொள்ள…. ஷ்யாமும் தினேஷும் வந்து அம்மூவரையும் ஆதியிடமிருந்து விலக்கி விட்டுவிட்டு,

அடடா… உங்க தொல்லை… தாங்கலைடா… கொஞ்ச நேரம், கையையும், காலையும் வைத்துக்கொண்டு சும்மா இருங்கடா…. மாப்பிள்ளையா அடக்க ஒடுக்கமா இருக்கப் பாருங்க… என்று சொல்ல…

என்னது அடக்க ஒடுக்கமாவா????... என்று கேட்ட மூவரும், தங்களது துணை வருவதைக் கண்டு அடக்கத்தின் மறு உருவாகவே மாறிப் போயினர்….

மேடை வரை, விழி தாழ்த்தி வந்த மூவரும், தங்களது இணை அருகில் அமர்ந்ததும், வெட்கம் ஒருபுறம் இருந்தாலும், சுற்றம் மறுபுறம் இருந்தாலும் அதைக் கண்டும் காணாமல் தங்களது மணவாளன்களைக் கண்டனர் ஓரக்கண்ணில்…

அதைக் கண்டு கொண்ட அவர்களும், பதிலுக்கு பார்வையை செலுத்த, பெண்கள் மூவரும் ஆண்களைப் போதும் என்ற பாவனையில் யாருக்கும் தெரியாமல் லேசாக கைகளில் கிள்ள, இம்முறை வெட்கம் கொள்ளுவது ஆண்களின் முறையாயிற்று….

அதைப் பார்த்துக்கொண்டிருந்த ஷ்யாமும், தினேஷும் கைகளைத் தட்டிக்கொண்டு சிரிக்க…

மாமா… போதும்…. நிறுத்துங்க… என்று மூவரும் சொல்ல…

அட போங்கடா… என்றவாறு அவர்கள் அதை சட்டை செய்யவே இல்லை கொஞ்சமும்….

நலங்கை பெண்கள் மூவருக்கும் பெரியவர்கள் வைக்க ஆரம்பிக்க, சாகரியின் முறை வந்த போது அவள் வந்து அவர்களை அணைத்து வாழ்த்து சொன்னாள்…

சாகரி அருகில் நின்றிருந்த அனுவையும், காவ்யாவையும் அவர்களது கணவன்மார்கள் சைகையில் அழைக்க, அதைக் கண்டும் காணாதவாறு அவர்கள் கீழிறங்கி சென்று விட்டனர்…

என்னடா இது… இப்படி ஆயிட்டே… என்று அவர்கள் ஒருவரின் ஒருவர் முகம் பார்த்துக்கொண்ட போது, வாலு மாப்பிள்ளைகள் மூன்று பேரும் அவர்களது முகம் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொள்ள, அப்போது கைத்தட்டும் ஓசை கேட்டது…

யார் தட்டுகிறார்கள் என்று பார்த்தால், அது காவ்யா மற்றும் அனுவின் கைத்தட்டல்கள்தான்…

கூட்டத்தோடு கூட்டமாய் கலந்த இருவரும் தங்களது கணவன்மார்களைப் பார்த்து கை நீட்டி கீழே வாங்க என்ற தோரணையில் அவர்கள் கைதட்டி அழைக்க, குஷியான இருவரும் வாலு மாப்பிள்ளைகளுக்கு டாட்டா காட்டிவிட்டு கீழே சென்றனர்…

இருவரும் வேகமாக தங்களது துணைவிமார்களை கண்டுபிடித்து இழுத்து வந்து, நிறுத்தி,

கைத்தட்டி தட்டி அழைத்தாளே

என் உயிரைத் தொட்டு தொட்டு திறந்தாளே

என் மனதை மெல்ல துளைத்து நுழைந்தாளே

ஜீவன் கலந்தாளேஇந்த தேன் குயிலும்….”

என்று உருகி பாட… பெண்கள் இருவரும் செய்வதறியாது திகைத்தபடி நிற்க… ஆண்கள் இருவரும் உற்சாகமாகி..

தா ரம் பம்தா ரம் பம்தா ரம் பம்….

என் ஆரம்பம் இன்பம் இன்பம்….

பெண் எப்போதும் சுகமான துன்பம்….

என் வானெங்கும் அவளின் பிம்பம்….

ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்

வாழ்வு மரணத்தை வெல்லும்…”

என்று ஆடி பாடி முடிக்க…. அங்கே மணப்பெண்கள் நால்வரும், மணமகன்கள் நால்வரும் கைத்தட்டிக்கொண்டிருந்தனர் உற்சாகமாக…

அனு, காவ்யா இருவரையும் வெட்கம் சூழ்ந்து கொள்ள, மணப்பெண்கள் நால்வரிடத்திலும் சென்று அடைக்கலம் தேடி ஒளிந்து கொள்ள முயற்சிக்க…

அவர்களோ இதுதான் சமயம் என்று நினைத்து களத்தில் இறங்கினார்கள்…

அத்தான் வருவாகஒரு முத்தம் கொடுப்பாக

உன் அச்சம் வெட்கம் கூச்சம்

அதை அள்ளி ருசிப்பாக…”

என்று மயூரி ஆரம்பிக்க…

கதவை சாத்தினா ஜன்னல் திறப்பாக

ஜன்னலை சாத்த தான் மனசில்லையே

உன்னைக் காணத்தான் இரண்டு கண்களா??

பிரம்மன் செஞ்சது சரி இல்லையே….”

என்று ஷன்வி கேலி செய்ய…

பாலும்புதுத்தேனும்…. பாகும்…. கசப்பாக

அவங்க தான் உனக்கு இனிப்பாக….”

என்று மைத்ரியும் சேர்ந்து காவ்யா மற்றும் அனுவை சுற்றிக்கொண்டு நகர விடாமல் ஆடி பாட, அவர்களது முகம் வெட்கத்தில் மின்னியது…

அதைக் கண்டு கொண்ட ஷ்யாமும் , தினேஷும் புன்னகைத்துக்கொண்டவர்களாய் மனைவியின் முகத்தையே ஆசையோடு பார்க்க…. வாலு மாப்பிள்ளைகள் மேலும் கிண்டல் செய்யும்படி வாண்டு பெண்களிடத்தில் கை அசைக்க…

அவர்களும் உற்சாகமாய் அடுத்த கச்சேரியை ஆரம்பித்தனர்…

அவுக வந்து நின்னாலே

சரியா காது கேட்காது…”

என்று மயூரி அனுவைப் பார்த்து பாட, அனு மயூரியின் காதைப் பிடிக்க முயற்சித்த போது அவள் நழுவி சென்றுவிட,

முழுசா பார்வை தெரியாது

ஒழுங்கா பேச முடியாது….”

என்று மைத்ரி அனுவின் கன்னம் பிடித்து பாட, அனுவிற்கு கோபத்திற்கு பதில் சிரிப்பு வந்தது…

ஆக மொத்தம் காதல் என்ன குதூகல குத்தம் தான்

குதூகல குத்தத்துல குழம்பினா சிக்கல் தான்…”

என்று ஷன்வி ஆடியபடி பாட…

ஒரு அழகன் எனக்காக எனக்கு முன்னே பிறந்தானே…”

என்று ஷ்யாமைக் கை காட்டி பாடிய அனு, ரிகாவின் தோளில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்…

அதைப் பார்த்துக்கொண்டிருந்த அனைவரும், கலகலவென்று நகைத்தபடி இருந்த போது, தினேஷ், காவ்யாவிடத்தில் சைகையில் ஏதோ சொல்லி காற்றில் முத்தத்தைப் பறக்க விட, அவள் அதை அழகாக வாங்கி தனக்குள் வைத்துக்கொண்டாள்…

யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் என்று எண்ணி சிரித்துக்கொண்டிருந்தவளின் முன் ஷன்வியையும் மயூரியையும் தினேஷ்- காவ்யா போல் மைத்ரி நிற்க வைத்து விட்டு அகல, அவர்கள் இருவரும் காவ்யா-தினேஷ் மௌன பாஷையில் பேசிக்கொண்டதை அப்படியே நடித்து காட்ட இப்போது காவ்யா ஓடி ஒளிய முற்பட, அதைப் பார்த்துக்கொண்டிருந்த தினேஷ், வெட்கத்துடன் கூடிய புன்னகை ஒன்றை சிந்திவிட்டு, மனைவி என்ன செய்யப் போகிறாள் என்று பார்த்துக்கொண்டிருந்தான் ஆவலுடன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.