(Reading time: 51 - 101 minutes)

பெரியவர்கள் அனைவரும் அமர்ந்து நடப்பவற்றை வேடிக்கைப் பார்க்கத்துவங்கினர்… அப்போது ராசு, அக்கா, சின்னப்பிள்ளைகள் எங்கே என கேட்க, தூங்க வச்சிட்டுதான் வரேன் தம்பி என்று அவர் சொல்ல… சரிக்கா என்றவர், தமக்கையிடம், இது அவர்களுக்கான கொண்டாட்டம் போல இல்லக்கா… ஆதர்ஷ்-சாகரிக்கானது என எனக்குத்தோன்றுகிறது என்று சொல்ல, அவரும் அதை ஆமோதிப்பது போல் கண் மூடி திறந்தார்…

ஆதியோ என்னடா நடக்குது என்ற பாவனையில் முறைக்க, நீங்க மட்டும்தான் சர்ப்ரைஸ் கொடுப்பீர்களா?... என்று முகிலன் கேட்க…

அதானே… இது எங்க சர்ப்ரைசாக்கும்… எங்க அண்ணனுக்கு… என்றான் அவ்னீஷ்… இல்லாத காலரைத்தூக்கிவிட்டுக்கொண்டு…

ஆமாடா… நாங்க தான் செஞ்சோம்… எங்களுடன் சேர்ந்து உனக்கு திருமணம் நடக்கலைன்னா என்ன?.... அதற்காகவா நேற்று முழுக்க, அமைதியா இருந்த ஆடி பாடாமல்..???... உனக்கு எவ்வளவு திமிர்டா… என்று அவனது சட்டையை ஹரீஷ் பிடிக்க, ஆதியோ அமைதியாக இருந்தான்…

இன்னைக்கு நீ ஆடி பாடுற… இல்ல… அவ்வளவுதான் சொல்லிட்டேன்… என்று சொன்ன ஹரீஷிடத்தில், இல்லன்னா என்னடா டாக்டர் பண்ணுவ என்று ஆதி கேட்க..

என் நண்பன் நான் சொன்னா கேட்பான்… அதும் என் ஆதி மச்சான் கண்டிப்பா கேட்பான்… என்று சொல்ல… ஆதி அவனை அணைத்துக்கொண்டான்…

லூசு… ஏண்டா… இப்படி… எங்களுக்காக உன் சந்தோஷத்தை நேற்றும் இன்றும் குறைச்சிக்கிட்ட… அப்பாகிட்ட கல்யாணம் முடிஞ்சு நேரா மண்டபத்துக்கு கூட போக வேண்டாம்… வீட்டிற்கு போயிடலாம்.. எனக்கு நீங்க எல்லாரும் கூட இருந்தா போதும்னு ஏண்டா சொன்ன நீ?... என்று முகிலன் சற்றே கலங்கியவாறு கேட்க…

நான் உண்மையைதானே சொன்னேன்… எனக்கு உங்ககூட இருக்கணும்… உங்களை எப்பவும் இப்படி சந்தோஷமா பார்க்கணும்… அது போதும்டா என்று சொல்ல…

ஆதியை ஹரீஷ், முகிலன், அவ்னீஷ் மூவரும் தழுவிக்கொண்டனர்… அப்போது அங்கே தினேஷும், ஷ்யாமும் வர, போச்சுடா வந்துட்டாங்க… என்று அவ்னீஷ் சொல்லிக்கொண்டே முகம் திருப்பிக்கொள்ள….

அவங்க வந்தா வரட்டும்… நீ கண்டுக்காதேடா… என்ற முகிலன், என்ன எப்படி எங்களை ஆதியிடமிருந்து விலக்கன்னு யோசிக்கிறீங்களான்னு கேட்க…

இல்லையே… என்றவர்களும் ஓடி வந்து ஆதியை அவர்களுடன் சேர்ந்து அணைத்துக்கொண்டு, இதுக்குத்தான் வந்தோம் என்றனர் சிரித்துக்கொண்டே…

சுந்தரம் கோதையைப் பார்த்து புன்னகைக்க, அவர் கணவரின் தோளில் சாய்ந்து கொண்டார் அழுது கொண்டே…

அப்போது,

கல்யாணத் தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு

பெண் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு

பாருங்கடிபொண்ணை பாருங்கடி

வெட்கத்தில் அவ கன்னம் சிவந்திருச்சு…”

என்று மயூரியும், மைத்ரியும் சாகரியின் கன்னம் பற்றி பாட…

அனைவரின் கவனமும் பெண்களிடத்தில் வந்தது…

ஹேஇடிச்ச பச்சரிசி

புடிச்ச மாவிளக்கு

அரைச்ச சந்தனமும் மணக்க…”

என ஷன்வி சாகரியின் கைப்பிடித்து சுற்றிப் பாட…

மதுரை மல்லிகைப்பூ

சிரிக்கும் செவ்வந்திப்பூ

செவந்த குங்குமமும் மயக்க…”

என அனுவும் காவ்யாவும் சாகரியின் தோள் தொட்டு பாட…

தை மாசம் வந்துருச்சு

காலம் நேரம் சேர்ந்திருச்சு..

ஜோடி ஒன்னா ஆயிடுச்சு

மேள சத்தம் கேட்டிருச்சு

என தினேஷும், ஷ்யாமும் பாடியபடி ஆதியை சாகரியின் அருகில் இழுத்து செல்ல… சாகரி முகத்தில் வெட்கம் நிறைந்தது…

மேகம் கருத்துருச்சு

மாரி மழை பெஞ்சிருச்சு

மண்ணில் மணம் ஏறிடுச்சு

மஞ்சள் நிறம் கூடிருச்சு…”

என ஹரீஷ், முகிலன், அவ்னீஷ் பாடியபடி வந்து ஆதியை இடிக்க… அந்த பக்கம் சாகரியை வாலு பெண்கள் இடித்தனர்..

தந்தன தந்தன…. தந்தனதந்தன

தந்தானன்ன தந்தானே

தந்தன தந்தன…. தந்தனதந்தன

தந்தானன்ன தந்தானே…”

என அனைவரும் ஆதர்ஷையும் சாகரியையும் சுற்றி வட்டமிட்டு ஆடி பாட…

டேய்… எங்க கல்யாணம் முடிஞ்சிடுச்சுடா… நாளைக்கு உங்களுக்கு தான் கல்யாணம்… என்றவன், அக்கா நீங்களுமா இவங்க கூட சேர்ந்து எங்களை கேலி பண்ணுறீங்க… நியாயப்படி நீங்க இவங்களை தான் கேலி செஞ்சு இப்படி ஆடணும்… என்று சொல்ல…

தம்பி அது எங்களுக்கு தெரியும் என்றனர் காவ்யாவும் அனுவும் நகைத்தபடி…

போச்சுடா.. என்றபடி ஆதர்ஷ் அங்கிருந்து அகல…

இப்போ என்ன எங்களை கிண்டல் பண்ணி அவங்க ஆடி பாடணும்… அவ்வளவு தானே… அதற்கு எதற்கு அவர்கள்?... நாங்களே போதும்… என்ற முகிலன்… ஆனால், அதற்கும் முன், நீயும் கூட ஆடி பாடுவேன்னு எனக்கு ப்ராமிஸ் செய் என்று சொல்ல, ஆதியும் சிரித்துக்கொண்டு லூசுப்பயலே… ப்ராமிஸ்… என்றான்…

உடனே ஆண்கள் மூவரும் ஜோடீஸ்… ரெடியா… என்று கேட்க… பெண்கள் மூவரும் ரெடி என்றனர்…

 

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.