(Reading time: 35 - 69 minutes)

விண் விண் என தெறித்த தலையில் கை வைத்து அழுத்தியபடியே அமர்ந்திருந்தவளை

“மேடம் நீங்களும் உங்களுக்கு அடுத்து இருக்கிற ஃப்ரெண்டும் காஃபி சாப்ட கேண்டீன்க்கு வாங்க….ஃபங்ஷன் முடியும் வரை அங்கயே வெயிட் செய்யலாம்…” என அழைத்தார் அருகிலிருந்த அந்த பெண் காவலர்.

அவளையும் அறியாமல் அவள் கண்கள் அவனை நிமிர்ந்து பார்த்தன. ‘போ’ என்பது போல் மெல்லியதாய் கண் அசைத்தான்.

இதுதான் ஆதிக். அடுத்தவரின் கவனம் இவள் புறம் திரும்பாதபடிக்கு அதே நேரம் அவளுக்கு தேவையான அனைத்தையும் கவனித்து செய்வான்.

அவள் தலைவலியை கவனித்திருக்கிறான். ஆனால் அவளுடையவன் இல்லை அவன். கண்களீல் நீர் முட்ட மங்கிய பார்வையுடன் எழுந்துவிட்டாள்.

“வா சுகன் காண்டீன் போய் காஃபி சாப்டலாம்”

இங்கயே அவன் பார்வையில் உட்கார்ந்திருப்பதை தவிர்க்கலாமே…அதுவே தலைவலியை குறைக்கும்.

 “ஆமாம்  ரேயு “ என்றபடி நடந்து கொண்டிருக்கும் எதுவும் தெரியாத சுகந்தியும் இவளுடன் கிளம்பிவிட்டாள்.

கேண்டினில் தோழியர் இருவரும் ஒரு மேஜையை பகிர்ந்து கொள்ள, அந்த பெண் காவலர் அடுத்த மேஜையில் அமர்ந்து கொண்டார்.

இவள் காஃபி பருகி முடிக்கும் வரை பொறுத்திருந்தாள் சுகந்தி

“ நீயே எல்லா அவார்டையும் வாங்கினதும் சேர்மன் ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிட்டார் என்ன…? ரொம்ப சந்தோஷமா பேசிட்டு இருந்தார்தானே….எஸ் பி சார் கூட நல்லா பேசின மாதிரி தெரிஞ்சிது…”

பதிலேதும் சொல்லாமல் மௌனம் காத்தாள் ரேயா.

“எதோ சஜஸ்ட் செய்த மாதிரி இருந்துது….எதுவும் ஸ்பஷல்….? நீயா சொல்லுவன்னு நினைச்சேன்…சொல்ல பிடிக்கலைனா வேண்டாம்….”

“அதெல்லாம் ஒன்னுமில்லை…சேர்மன் சாரும்…ஆதிக்கும் எங்கப்பாவுக்கு ஃபாமிலி ஃப்ரெண்ட்ஸ்…ஒரு வகையில் ரிலடிவ்ஸும் கூட… ஆனால் அப்பா நான் இங்க படிக்றதை கூட சேர்மன் சார்ட்ட சொல்லலை போல…ஆதிக் தான் என்னை சாருக்கு இன்ட்ரோ செய்தது…சார் எங்கப்பாவ சந்தோஷமா திட்டினாங்க…”

ஆதிக்கா…? சுகந்தி மனதில் குறித்துக் கொண்டாள். “எஸ்பி சார் முன்னமே பழக்கமோ…?”

இதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என ரேயா யோசிக்கும் போதே அந்த பெண்காவலர் இவள் மொபைலை இவளிடம் நீட்டினார்.

அதை வாங்கி காதில் வைத்தாள் ரேயா. சுகந்திக்கு நடப்பது எதுவும் புரியவில்லை.

“என்ன ஆதிக் இது?” சீறினாள் ரேயா.

 பார்த்திருந்த பெண் காவலர் ஒருவித வெட்க புன்னகையுடன் எழுந்து சென்று காண்டீன் வாசலில் நின்று கொள்ள, சுகந்திக்கோ நொடியில் விஷயம் புரிந்து போனது.

“நீ கூட லவ் பண்றியா….? சரியான அமுக்குனி….இரு கவனிச்சுகிறேன்.. “ சுகந்தி மனதிற்குள் சந்தோஷ சங்கல்பம்.

ரேயா கேட்ட தொனியும் முகபாவமும் இப்படித்தான் நினைக்க தூண்டியது அருகிலிருந்தவர்களை.

“ஏய் கே.டி….நாளைக்குள்ள ஆபீஸ் முழுக்க, நான் ஒரு எம் பி ஏ ஃஸ்டூண்டை லவ் பண்றதா நியூஸ் பரவிடும், பக்கத்தில பத்மா இருக்காங்க தான..?” அவன் வார்த்தையில் இருந்த எச்சரிக்கைக்கு மாறாக குரல் முழுவதும் சீண்டல். மென்குரலில் கேட்டான்.

அருகிலிருக்கும் தன் மாமனாருக்கு பயந்து போய் சிறு குரலில் பேசுகிறான் போலும். எண்ணம் சுட

“அப்டி பயம் இருக்கவங்க இப்டி நடந்துக்க கூடாது…” முன்பை விட கோபமாக சொன்னாள்.

“பயமா? எனக்கென்ன பயம்?”

“உங்க மாமனாருக்கு பயந்து பயந்து தான பேசுறீங்க…”

“மாமனாரா…? யாரு..? உங்கப்பாவை சொல்றியா? அப்பவே நான் உங்கப்பாவுக்கு பயப்படலை…இப்ப எதுக்கு பயப்படனும்..?”

பழசை கிளறுகிறான்.

சட்டென இணைப்பை கட் செய்தாள்.

அந்த நாளை மீண்டும் நினைக்க கூட இவள் விரும்பவில்லை. யார் யாருக்கு மாமனாராம்? இன்னுமா? இவன் என்ன பேசிக்கொண்டு இருக்கிறான்?

கொதித்தவளுக்கு சட்டென ஒன்று புரிந்தது. ஒ இவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை போலும். மாமனார் என்றதும் பழைய ஞாபகம் தான் வருகிறது அவனுக்கு.

அந்த காவலர் பத்மா கூட கேலியும் வெட்கமுமாகதானே எழுந்து போனார் கேவலமாக பார்க்கவில்லையே….ஆக இவன் இன்னும் எலிஜிபிள் பேச்சிலர்.

மனதிலிருந்த பெரும் பாரம் இறங்கியது ஒரு கணம். மறு நொடியே தன் மேல் அவளுக்கு கோபமும் வந்தது.

அவன் தேவை தெரிந்த பிறகும்………..

ஃபோன் மீண்டும் சிணுங்க, அதையே வெறித்தாள். அந்த காவலர் பத்மா வேகமாக இவளிடம் வந்தார் “ மேம் எந்த சண்டைனாலும் பேசி தீர்த்திடுங்க….இப்டி நீங்க பேசாம இருந்தா சார் அடுத்து என் நம்பரைத்தான் கூப்பிடுவார்…”

சுகந்தியோ நமட்டு சிரிப்புடன் இவளிடம் இருந்து பார்வையை விலக்கிக் கொண்டாள் “டிபார்ட்மென்டே அலறுதே” என்று முனங்கியபடி..

இதுக்கு மேலயும் பேசாம இருந்தால் எதோ ஊடல் நாடகம்னு உலகத்திற்கே தோணும்…மனம் அறிவுறுத்த இணைப்பை ஏற்று “என்ன?” என்றாள் மரத்த குரலில்.

“ரேயுமா….நீ இன்னும் சின்ன பொண்ணு இல்லைடா…சும்மா சும்மா உங்க அப்பாவுக்கு பயப்பட….அதோட முன்ன செய்த தப்ப நான் திரும்ப செய்ய மாட்டேன்…எதுனாலும் இனிமேல் கல்யாண விஷயத்தில் நான் என் அம்மா அப்பா வழியா கூட டீல் செய்ய மாட்டேன்……டைரக்ட்லி நானே ஹேண்டில் செய்வேன்…ப்ளீஸ் உன்ட்ட பேசனும்…கொஞ்சம் வெயிட் பண்னு….பட் இங்க வேண்டாம்…”அருகில் ஈசிஆரில் இருந்த ஒரு மேரிப்ரவுனுக்கு வழி சொன்னான். “உன் கார்ல சுகந்தியையும் பத்மாவையும் கூட்டிட்டு போ….”

இவன் என்ன சொல்றான்……இனிமேல் கல்யாண விஷயமா…? அதோட இவன் கூப்டா இவ போய்டனுமா? அதுவும் சேர்மன் வேற வர சொல்லிருக்காரே

“சேர்மன் சார்ட்ட சொல்லாம நான் கிளம்ப முடியாது ஆதிக்.”

“ஓகே அங்கிள்ட்ட பேசி கன்வின்ஸ் செய்துட்டு கிளம்பு…பட் அங்கிளை உன்னால கன்வின்ஸ் செய்ய முடியலைனா….நான் நாம மீட் பண்ண போறதை அங்கிள்ட்ட சொல்லிடுவேன்…”

“மிரட்டுறீங்களா?”

“இல்லடா எம்.கே ஐ’ம் சீரியஸ் அபவ்ட் திஃஸ் மீட்டிங்னு சொல்றேன்…”

“சேர்மன் சார்ட்ட சொல்லிகோங்க….நானும் நீங்க என்னை அரெஸ்ட் செய்து கூட்டிட்டு போறீங்கன்னு சொல்றேன் “

“அதுவும் நல்லதுக்குதான்…அங்கிள் சீக்கிரமா அடுத்த ஸ்டெப் எடுப்பாங்க…”

அடுத்த ஸ்டெப்பா…? அது என்னது…?

“அங்கிள்ட்ட பேசனும்னா அவங்க ரூம்க்கு வா……நானும் அங்கதான் இருப்பேன்…இல்லைனா மேரி ப்ரவ்ன் கிளம்பு…”

அடுத்த ஐந்தாம் நிமிடம் சேர்மன் அறையில் இருந்தாள் அவள்.

வளை கண்டதும் தன் வீட்டிற்கு இவளை அழைத்துப் போவதுதான் அந்நாளின் முக்கிய வேலை என்பதுபோல் சேர்மன் பேச, தன்னால் முடிந்தவரை கெஞ்சினாள் ரேயா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.