(Reading time: 35 - 69 minutes)

ன்னொரு நாள் கண்டிப்பா வாரேன் சார், அப்பாவையும் கூட்டிட்டு….”

“சாரா….? பாருங்க மாப்ள, ராஜ்குமார் பொண்ணு என்னை சார்னு கூப்டுறா…. மோளே நான் உனக்கு பெரியப்பாவாக்கும்…”

ஆதிக் தன் வாட்ச் டயலை ஒற்றை விரலால் தொட்டுக் காண்பித்தான்.

நேரமாகிவிட்டதாம்…..

தைரியமாக சொன்னால் சொல்லிக்கோ என்று சவால் வேறுவிட்டிருக்கிறாள். ஆனால் இப்பொழுதோ ஆதிக் அப்படி எதையும் சேர்மனிடம் உளறிவிடுவானோ என பயம் பக்கென்கிறது.

டென்ஷன்.

இப்படி இக்கட்டில் நிறுத்தி மிரட்டுகிறானே….அழுகை கண்ணில் எட்டிப் பார்க்கிறது.

“பெரியப்பா….ப்ளீஸ் இன்னைக்கு நான் வீட்டுக்கு போகனும்…நாளைக்கே அப்பா கூட வீட்டுக்கு வர்றேன்…இன்னைக்கு ஏதோ முக்கிய விஷயம்னு அப்பா சொன்னாங்க….” குரல் பிசிறியது.

“ஏன்மா….வீட்ல ஏதும் விஷேஷமா?...முக்கியம்னா…..பொண்ணு பார்க்க எதுவும் வாறாங்களோ….? மகளுக்கு வரன் பார்க்கிறியானு உங்கப்பாட்ட கேட்டேன்….பார்க்கப் போறேன்னு சொல்லி இருந்தான்….அதுக்குள்ள அமஞ்சிட்டா….? “

அப்பா முக்கியமான விஷயம்னு சொல்லி இருந்தது நிஜம் தான். ஆனால் அதற்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்குமோ என்று இப்பொழுதுதான் இவளுக்கே தோன்றுகிறது. அது அடுத்த அணுகுண்டு என்றாலும் இப்போதைக்கு சேர்மனிடமிருந்து தப்பிக்க ஒரு வழி. முகத்தில் கொஞ்சம் நிம்மதி வந்து சேர்ந்தது.

“இந்த மாதிரி விஷயத்தை நிச்சயம் ஆகுற வரை வெளியே சொல்லாம இருக்கிறதும் சரிதான்….அதான் உங்கப்பா என்ட்ட சொல்லி இருக்க மாட்டான்…நீ கிளம்புமா….இந்த நேரத்தில் தேவையில்லாம  டென்ஷன் வேண்டாம்…..ஆனால் நாளைக்கு டின்னர் உனக்கும் உங்கப்பாவுக்கும் நம்ம வீட்ல தான்…” என்றவர் ஆதிக்கிடம் திரும்பி

“மாப்ள….நாளைக்கு நீங்களும் டின்னர்க்கு நம்ம வீட்டுக்கு வந்துடுங்க…அப்பதான் நல்லா இருக்கும்” என்று முடித்தார்.

தப்பித்தேன் பிழைத்தேன் என எழுந்தவள் “ரொம்ப தேங்க்ஸ் பெரியப்பா” என்றுவிட்டு ஆதிக்கின் புறமாக திரும்ப அவன் கண்களில் செவ்வரிகள்.

கை முஷ்டி இறுக இவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“பை…சார்..” ஆதிக்கிற்கும் ஒரு பை சொல்லிவிட்டு வாசலை நோக்கி நடந்தாள். இங்கு வைத்து வேறு என்ன செய்ய முடியும்?

அவனோ இதற்குள் தன் அலைபேசியில் இவள் கேட்கும் விதமாக“ பத்மா  நீங்க ஸ்டேஷன் போங்க” என்றுவிட்டு இவளிடமாக வழி அனுப்பும் விதமாக தலை அசைத்தான்.

“எனி டைம் எனி ஹெல்ப் யூ கேன் கால் மீ….இப்போ ஸேஃபா வீட்டுக்கு போங்க…”

ஓ இவளை பெண்பார்க்கும் படலம் அவனால் குழப்பமாகி விட கூடாதென்று நினைக்கிறான் போலும்……அதோடு இவளுக்கே கல்யாணம் என்றதும்…..விஷயத்தையும் புரிந்து கொண்டிருப்பானாய் இருக்கும்…

மனம் வலிக்க வலிக்க அறையின் வாசலை அடைந்தாள்.

என்ன வாழ்க்கை இது…. கிடைக்காத ஒன்றின் மீதே எல்லோர்க்கும் ஆசை……

அவனோடு இருக்கமாட்டேன் என அழுத மனது இப்பொழுது அவனைப் பிரியவும் அழுகிறது. திரும்பி அவனைப் பார்த்தாள். இது அவள் அவனைப் பார்க்கும் கடைசி முறையாக இருக்கலாம்….

அவனும் அதே நேரம் அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.

இப்படித்தான் இப்படியேத்தான் இருந்தான் அன்று கோவாவில்.. அதே உடல் மொழி இப்பொழுதும் அவனிடம்.

எதையோ பெருசா இழக்ற மாதிரி இருக்குது ரேயு… அப்பொழுது அவன் சொன்னது ஞாபகம் வருகிறது. அன்று அவன் எதைச் சொன்னான் என்று இன்று புரியவில்லை.  ஆனால் அன்று போல் இன்று தவிக்கவோ தவிர்க்கவோ அறிவுரை சொல்லி விலக்கவோ தோன்றவில்லை…..

மாறாக ஓடிச் சென்று அணைத்துக் கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது. விரும்பியவரை இழக்கும் வலி இவள் அறியாததா…? இவனே வலிக்க வலிக்க இவளுக்கு கற்று கொடுத்திருக்கிறானே…

உருகி பாய்கிறது உயிர் அவனிடமாக…..அவனை நினைக்கும் போதெல்லாம் இவள் மனம் இப்படித்தான் என்றாலும்….இப்போதைய அதன் அளவு எல்லை கடக்க….

அறையை விட்டு வெளியே வந்தவள் “நீங்க சொன்ன மேரி ப்ரவ்ன் போறேன்…இப்படி தனியா போய் பழக்கமில்லை…..சீக்கிரம் வாங்க…” அவன் எண்ணிற்கு எஸ் எம் எஸ் அனுப்பிவிட்டு தன் காரை நோக்கி நடந்தாள்.

அவனுக்கு என்ன ஆறுதல் சேர்க்க முடியும் என்றெல்லாம் தெரியவில்லை….ஆனால் அவனைப் பார்க்க வேண்டும்….

அதோடு இவனைப் பார்த்ததை அப்பாவிடம் இவளே சொல்லிவிட வேண்டும்.

இவள் தன் காரை ஸ்டார்ட் செய்த சமயம் இவள் காரை கடந்து மெயின் ரோட்டை அடைந்தது ஆதிக்கின் ஜிப்சி.

“தேங்க்ஸ், ஃபாலோ மீ” என்றது அதே நேரம் அவன் எண்ணிலிருந்து வந்த எஸ் எம் எஸ்.

காரில் இவள் முன்னாக அவன். மனதில் கடந்த காலத்தின் நினைவுகள்.

ப்பொழுது அவள் 11 முடித்து இருந்தாள். இவள் அக்கா ஷாலுவிற்கு எம் டெக் அட்மிஷன் சென்னையின் பிரபல யுனிவர்சிட்டியில். பயோ டெக் டிபார்ட்மென்ட் வளாகத்தின் முதல் தளத்தில் இவள் தன் அப்பா மற்றும் ஷாலுவோடு காத்திருந்தாள். எவ்வளவு நேரம் தான் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க? கேம்பஸ் எவ்ளவு அழகா இருக்குது? ஒரு வாக் போய்ட்டு வரலாம். இவ அப்பா விடுவாங்களா என்ன?

மெல்ல எழுந்து நின்றாள்.

“என்ன எந்திரிச்சு நின்னுகிட்டு….உட்காரு…” வேற யாரு அப்பாதான். எந்திரிச்சு நின்னா அடுத்தவங்களுக்கு இவள பார்க்கனும்னு தோணிடுமே….

“அப்பா…..கேண்டீன் போய்ட்டு…..” அப்பாவின் பார்வையில் வாக்கியம் பாதியில் நின்றுவிட்டது.

நம்ம ட்ரைவர்ட்ட எதாவது வாங்கிட்டு வர சொல்றேன்….என்ன வேணும்…?”

நம்ம டிரைவர் அதுல விஷம் கலந்து எல்லோரையும் மொத்தமா கொன்னுட்டா…..அப்டில்லாம் யோசிக்கனுமே இன்நேரம் நீங்க….இல்லனா முன்னெச்சரிக்கை முத்துப்பாண்டிங்கிற உங்க  பட்டம் என்னாகிறது…

“சரி…அது எதுக்கு…அவனை போய் நம்ம சாப்ட்ல நம்பிக்கிட்டு….இங்க பீஃஸா டெலிவர் செய்வாங்களான்னு கேட்டு பார்க்கேன்….ஸ்ப்ரைட்டும் கொண்டு வர சொல்றேன்…..ஓகேவா…”

“ம்…” எனக்கு உட்கார முடியலைனா பீஃஸா காரனை பைக் ஓட்ட சொல்றேன்னு சொல்றீங்களேப்பா….

“இன்னும் என்ன…உட்காருன்னு சொல்றேன்ல…”

இதற்குள் ஷாலு பதறி பயந்து விழிப்பது இவளுக்கு உறைக்கிறது.

இவ ஒருத்தி அப்பாக்கு ஏத்த பிள்ள….அவர் பயம் பயம்னு சொல்லுவாரு….இவ பாஞ்சுபோய் பதுங்கிகிடுவா

“அது….இந்த காரிடார்ல ஒரு வாக் போறேன்பா….இங்க இருந்து நீங்க பார்த்தீங்கன்னாலே….” இவள் கெஞ்ச ஆரம்பிக்க அதற்குள் ஷாலு டைரக்டரை சந்திக்கும் முறை வர

“சரி…இந்த காரிடாரை விட்டு எங்கயும் போகாத…இப்ப வந்துடுறோம்…மொபைல கைல வச்சுகோ…பத்ரம்…கவனமா இரு…யார்ட்டயும் பேசாத…” அட்வைஸ்களை அடுக்கிவிட்டு அப்பா ஷாலுவுடன் அறைக்குள் நுழைய

ஹப்பாடா என்றிருந்தது ரேயாவிற்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.