(Reading time: 35 - 69 minutes)

னால் அது ஒரு ஆணுக்கு ஏற்படும் பெரிய அவமானம். வாழ்நாளுக்கும் வலிக்கும். அவனைப் பற்றி கூட கவலையில்லை.

நாளை இவளது குணசுந்தரி மேடம் ஒரு வார்த்தை “என்ட்ட சொல்லி இருக்க கூடாதா ரேயா” என கேட்டால் என்ன செய்ய?

“ஹேய்…என்ன ட்ரீம் வேல்டுக்கு போய்ட்ட….. நான் இங்கதான்பா இருக்கேன்….” ஈ என இளித்துக் கொண்டிருந்தான் அவன்.

சுற்றிலும் உள்ளவர்கள் ஆர்வமாய் பார்ப்பதை உணர முடிகிறது.

சுர் என ஏறுகிறது கோபம்.

“அப்டி இப்டி அட்ஜஸ்ட் செய்து உனக்கு லாங்க் ஜம்ப்ல நான் தான் ஃபர்ஸ்ட் ப்ளேஸ் கொண்டு வந்தேன்…..பட் ஷாட் புட் டிஸ்டன்ஸ் மெஷர் பண்ணவன் அந்த குண்டு நர்மதா ஆளாம். அதான் நான் எவ்ளவு சொல்லியும் உனக்கு ஃபர்ஸ்ட் ப்ளேஸ் மார்க் செய்ய மாட்டேன்னுட்டான்….” 

அடப் பாவி நான் ஷாட்புட்டே விளையாடலையே உனக்கு இரக்கப் படுறது தப்பு….விளையாண்டு ஜெயிச்ச அத்தனை பேரையும் ஒரே நிமிஷத்துல கேவலப் படுத்திட்டியே..

“குணசுந்தரி மேடத்..” இவள் சொல்ல வந்ததை சொல்லும் முன் பேருந்தில் விசில் சத்தம். இவள் நிறுத்தத்தில் நிற்கிறது பேருந்து.

இறங்க வேண்டிய ஒரே ஆள் இவள் மட்டும் தான்.

“சீக்கிரம் இறங்குமா…..”கத்துகிறார் கண்டக்டர்.

அவசரமாக இறங்கிவிட்டாள்.

படபட என்று பயமும் கோபமுமாய் துடிக்கிறது இதயம். அவனை நன்றாக திட்டிவிட்டு வந்திருந்தால் கூட திருப்தியாய் இருந்திருக்கும். இது ஏதோ அவனுடன் இவள் உரையாடிக் கொண்டே வந்தது போல் தானே அனைவருக்கும் தெரியும்.

கூடவே இது எப்படி கண் மூக்கு காது கொண்டு அப்பாவை அடையுமோ என்று பயம் பிடுங்கி தின்கிறது.

வழக்கமாக இவள் வந்து சேரும் முன் இவள் பற்றிய விஷயம் வீடு வந்து சேர்ந்துவிடும்.

முன்பு நடந்த அந்த குரங்கு டேனியல் விஷயம் இன்னும் ஞாபகம் இருக்குது….வழக்கமாகவே இவள் ஸ்போர்ட்ஸ் கோச்சிங் முடிந்து கிளம்பும் முன் பள்ளி பேருந்து கிளம்பிவிடும். அதனால் மாலை பெரும்பாலும் அரசு பேருந்துகளில் வீடு திரும்புவது வழக்கம்.

பள்ளிக்கு முன்பாக பஸ்ஸ்டாப். அதோட வீட்டிற்கு மிக அருகில் பேருந்து நிறுத்தம். அதனால் ஒன்றும் ப்ரச்சனையாக இதுவரை இருந்தது இல்லை.

அன்றும் இப்படி இவள் பேருந்தில் ஏறும் போது அந்த டேனியல் இவளை விகாரமாக பிடித்துவிட்டான். அதுவும் இவள் காது கேட்க தன் நண்பனிடம் பெட் கட்டி அதற்காக…

மற்ற பெண்கள் எப்படியோ…..ரேயாவிற்கு இதில் கை நீளும். இவள் அவனை அடிக்க கை நீட்ட அவன் நகர்ந்து கொண்டிருந்த பேருந்திலிருந்து இறங்கிவிட்டான். அந்த விஷயத்தை யார் அப்பாவிடம் சொன்னார்கள் என இன்று வரை இவளுக்கு தெரியாது.

ஆனால் இரண்டு நாள் கழித்து இவள் பள்ளி முடிந்து வெளியே கேட்டை அடைந்த போது ஒரு நடுத்தர வயது பெண்மணி இவள் கையைப் பிடித்துக் கொண்டார்.

“என் பையன் செய்ததது தப்புதான்மா….அப்பாவும் அசோக் ஐயாவும் வீட்டுக்கு வந்தாங்க…..அப்பா இல்லாத பையன்னு நான் அழவும் தான் கைய எடுக்காமவிட்டுட்டு போறேன்னு சொல்லிட்டு போறாங்கம்மா….இனி வம்பு தும்புக்கு வரமாட்டான்….இதோடவிட்டுட சொல்லுமா “ அந்த அம்மாவிற்கு பின் நின்றிருந்தான் பலவித கட்டு ப்ளாஸ்திரிகளுடன் அந்த டேனியல்.

இதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என அவளது 17 வயது மனதிற்கு புரியவில்லை.

இன்றும் விஷயம் தெரிந்தால் அந்த குமார்க்கும் அத்தனை கட்டுகள் உறுதி. ஆனால் அது அதோடு நிற்குமா? அவனுக்கு அப்பா இருக்கிறாரா? இல்லையா?

இவளாக குமாரிடம் சண்டை போட்டாலோ….அல்லது அவனைப் பற்றி அப்பாவிடம் கம்ளெய்ண்ட் செய்தாலோதான் கதை இப்படியாக இருக்கும்.

அல்லது இவள் ஒரு பையனுடன் பேசி சிரித்துக் கொண்டிருப்பதாக அப்பாவிற்கு தகவல் போனால் கதை என்னவாகுமோ?

அம்மா இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று இவள் அழுத இரவுகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடியது அன்று இரவு.

மறுநாள் இரு கண்களும் வீங்கி இருக்க, இவள் முகத்தைப் பார்த்த அப்பா ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் வகுப்பில் இவள் ஃப்ரெண்ட்ஸ் துளைத்து எடுத்துவிட்டனர். இவள் நடந்தவைகளை சொல்ல அவர்களுக்குமே என்ன சொல்லவென்று தெரியவில்லை.

ஆனாலும் ப்ரச்சனை அன்றோடு முடிந்தது என்று இல்லாமல் மீண்டுமாக தொடர்ந்தது. அன்று மாலையும் இவள் வந்த பேருந்தில் அந்த குமார் இவளிடமாக வந்து நின்றான். ஹாய் என்றபடி அதுவும் இவள் இறங்க வேண்டிய நேரத்திற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பாக.

இவனிடம் ஒரு வார்த்தை பேசாமல் இறங்கிப் போவது என முடிவு செய்து கொண்டாள் ரேயா. நாளை குணசுந்தரி மேடத்திடம் சொல்லி ப்ரச்சனையை முடிக்க வேண்டும். இவன் அப்பாவை பத்தி தெரியாமல் விளையாடுகிறான்.

“என்ன லேட்டா வந்தேன்னு கோபமா….? பேசவே மாட்டேன்ற…?”

உனக்கு எங்கப்பாதான்டா லாயக்கு….    

கோபமும் எரிச்சலுமாக இவள் நிமிரும் போதே இவள் முகத்தை கடந்து நீண்டது ஒரு கை. அது அந்த குமாரின் சட்டைக் காலரைப் பற்றியது.

“ரேயு….இவன் தான குமார்….நான் பாத்துகிறேன்…” நெருங்கிய உறவினன் போல் ஒரு பேச்சு தொனி…

அப்பொழுதுதான் அவனைப் பார்த்தாள்.

இதுவரை அவள் கனவில் கூட கண்டிராத ஒரு புதியவன்.

17 வயது பருவ மனதில் பற்றி எரியும் அக்கினியாய் இறங்கியது அவன் உருவம்.

ஆண் எப்படி இருந்தால் இவளுக்குப் பிடிக்கும் என் இதுவரை இவள் எண்ணியதே இல்லை. ஆனால் இப்படி இருப்பவன் மட்டுமே ஆண் என்பதாய் பதிகிறது ஒரு பதிவு அவள் உயிரில்.

எதோ ஒருவகையில் மிகவும் அன்யோன்யமாய் தெரிந்தான் அவன். ஆனால் மறுவகையில் முற்றும் புதியவனாய்….

ஆறடி தாண்டிய உயரத்தில், அரேபிய மணல் நிறத்தில், பின் கழுத்தை மட்டும் சற்றே தொடும் வித முடியுடன்……சாக்லேட் பாய்…

கண்டிப்பாக அப்பா போல் ஸ்ட்ரிட் ஆஃபீசராக இருக்க வழி இல்லை…அவன் ஹேர்ஸ்டைல் சாட்சி….

இதற்குள் அந்த புதியவனிடம் இருந்து உருவிக் கொண்டு ஓடுகிறான் அந்த குமார். ஓடும் பேருந்தில் இருந்து குதித்துவிட்டான். பின்னே யாருக்கு தர்ம அடி வாங்க ஆசை இருக்கும்?

“ இவனால உனக்கு இனி தொல்லை இருக்காது…..தேவையில்லாம இதப் போய் அப்பாட்ட சொல்லிகிட்டு இருக்காத…தேவைப்பட்டா நானே சொல்லிக்கிறேன்…..இந்தா இதை வீட்டுக்கு கொண்டு போ….எனக்கு சின்ன வேலை இருக்கு….” என்று இவளிடம் அவன் கையிலிருந்து இரு நோட்டுகளை கொடுத்துவிட்டு இந்த புதியவனும் பேருந்திலிருந்து இறங்கிவிட்டான்.

பார்த்துட்டு இருந்தவங்களுக்கு இவள் தான் வீட்டிலிருந்து யாரையோ கூட்டி வந்திருக்கிறாள் என தோன்றும். இனி குமார் இவள் இருக்கும் பக்கம் தலை வைக்க கூட மாட்டான்தான். ஆக இவளுக்கு வெளிப்பக்க ப்ரச்சனைகள் முடிந்துவிட்டனதான்.

ஆனால் இவன் யார்? இவனும் அடுத்த குமாராக மாட்டான் என என்ன நிச்சயம்? அதோடு இவனைப் பற்றியும் அப்பாவிடம் செய்தி போகாதென என்ன நிச்சயம்?

ஆனால் இதற்குள் இவள் இறங்க வேண்டிய நிறுத்தம் வர இறங்கிப் போனாள்.

வீட்டிற்குள் இவள் அறையை அடைத்துக் கொண்டு அமரும் வரையும் அந்த நோட்டுகளை திறக்கும் தைரியம் கூட இவளுக்கு வரவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.