(Reading time: 31 - 61 minutes)

ன் மாப்பிள்ளையை வர சொல்ல நான் யாரைக் கேட்கணும்?...” என கோகியும் பதிலுக்கு முறைக்க

“என்னைக் கேட்கணும்… இதுல சம்மந்தப்பட்டிருப்பது என் வாழ்க்கை… சோ நீ என்னை கேட்டிருக்கணும்… அவரை இங்க வர சொல்லுறதுக்கு முன்னாடி….” என்றாள் ருணதியும்…

“உன் வாழ்க்கையா?... அது உனக்கு இப்போவாச்சும் கண்ணுக்குத் தெரியுதா?... ரொம்ப சந்தோஷம்….” என அவர் எகத்தாளமாய் சொல்ல

“பாட்டி….” என கத்தினாள் அவள்…

“என்னடி பாட்டி?... என்ன பாட்டின்னு கேட்குறேன்… படிச்சவ தானடி நீ?... படிச்சவ தான?... பிள்ளைக்கு தாய் எவ்வளவு முக்கியமோ அதுபோல தகப்பனும் முக்கியம்னு உனக்கு ஏண்டி புரியமாட்டிக்குது?...”

“புரியப்போய்த்தான், உன் அருமை மாப்பிள்ளையை நான் இல்லாத நேரம் பார்த்து துருவ் கூட நீ பேசவைக்கிறது, பழகவைக்கிறதெல்லாம் தெரிஞ்சும் நான் வாயை மூடிட்டு சும்மா இருக்கேன்….” என அவள் சொல்ல

ஒருகணம் அதிர்ந்து போனார் கோகிலவாணி…

“அய்யய்யோ இதுவும் அவளுக்கு தெரிஞ்சிப்போச்சா?... சும்மாவே சாமி ஆடுவாளே… இன்னைக்கு அப்போ எனக்கு கச்சேரி செமத்தியா இருக்கு போலேயே… ஹ்ம்ம்… சரி சமாளிப்போம்….” என கோகி தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பேச முயன்றார்…

“என்ன பேச வாய் வரலையா?... இதெல்லாம் எனக்கு எப்படித்தெரியும்னு ஆச்சரியமா இருக்கா?... சும்மாவே சாமி ஆடுவா… இப்போ இன்னைக்கு எல்லாத்துக்கும் சேர்த்து கச்சேரி வச்சிடுவான்னு யோசனையா இருக்கா?... சொல்லு கோகி…” என அவள் புருவம் உயர்த்திக் கேட்க,

கோகிக்கு “அடிப்பாவி…” என்றிருந்தது அவள் சொன்னதைக் கேட்டு…

பின்னே, மனதில் நினைத்ததை அப்படியே சொன்னால், யாருக்குத்தான் பகீர் என்றிருக்காது???...

கோகிலவாணிக்கும் அப்படியே இருக்க, வெளியே தனது உதறலைக் காட்டிக்கொள்ளாமல்,

“இப்ப என்னடி நான் செஞ்சிட்டேன்?... பெத்த தகப்பன் கிட்ட பிள்ளையை பழக விடுறது தப்புன்னு சொல்லுறீயா?...”

“அந்த பழியை எதுக்கு நான் சுமக்கணும்னு தான், நீ பண்ணுற தில்லாலங்கடி வேலை எனக்குத் தெரிஞ்சும், நான் அமைதியா இருந்தேன்…”

“தில்லாலங்கடி வேலையா?...”

“ஆமா… வேற எப்படி சொல்ல சொல்லுற?... துருவை அவர் வீட்டுக்கே கூட்டிட்டு போயிட்டா எதுக்கு இப்படி திருட்டுத்தனமா வந்து பார்க்கணும்?... இல்ல பேசணும்?... இல்ல நான் தான் என் இப்படி குதிக்க போறேன் வானத்துக்கும் பூமிக்கும்?...”

“இல்லடி நதி… நான் என்ன சொல்லுறேன்னா…”

“என்ன சொல்லப்போற?... சொல்லு… என்ன சொல்லப்போற?... உன் மாப்பிள்ளை வல்லவர், நல்லவர், நாலும் தெரிஞ்சவர்னு சொல்லப்போறீயா?... சொல்லு?...”

“ஏண்டி இப்படி பண்ணுற?...”

“ஆமா, கோகி… உனக்கு நான் பண்ணுறது தான் பெரிசா தெரியும்… நான் பண்ணுறது தான் கண்ணுக்கும் உனக்கு தெரியும்… வேற யார் பண்ணுறதும் தெரியாதுல்ல?...”

“வேற யார் பண்ணுறதும் தெரியாதுன்னு சொல்லுற நீ இப்போ?...”

“உனக்குத்தான் வேற எதுவுமே தெரிய மாட்டிக்குதே… உன் அருமை மாப்பிள்ளையைத் தவிர… உன் அருமை சம்மந்தி பேசின பேச்சு உன் காதுல விழுந்துச்சு தான?... அதைக் கேட்டுட்டும் உன் மாப்பிள்ளை குத்துக்கல்லு மாதிரி சும்மாதான இருந்தார்?.... என்ன பண்ணி கிழிச்சார்??? அவர் அப்பா பேசின வார்த்தை எல்லாமே தப்பு தான்னு தெரிஞ்சும் துருவனை தான ஒதுக்கி வச்சிருக்கார்?... அவர் அப்பாவை ஒதுக்கி வைக்கலையே… இதுலயே தெரியலை உன் அருமை மாப்பிள்ளை லட்சனம்???...”

“பாவம்டி மாப்பிள்ளை… அவர் அப்பாவுக்கும், உனக்கும் இடையில மாட்டிக்கிட்டு முழிக்கிறார்… அவராலயும் பாவம் என்ன செய்ய முடியும்?...” என கோகி சொன்னதும் ருத்ரதாண்டவம் ஆடினாள் ருணதி…

“என்ன செய்ய முடியுமா?... நீ ஏன் சொல்லமாட்ட?... அன்னைக்கு அவர் அப்பா அதான் உன் அருமை சம்மந்தி சொன்ன சொல்லை நீ வேணா மறந்திருக்கலாம்… ஆனா நான் செத்தாலும் அதை மறக்கமாட்டேன்… வார்த்தைகளை இஷ்டத்துக்கு அன்னைக்கு வீசி எறிஞ்சாரே உன் அருமை சம்பந்தி… அது மத்தவங்க மனசுல எவ்வளவு பெரிய காயத்தை ஏற்படுத்தும்னு கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தாரா அவர்?... அவர் தான் அப்படி கொஞ்சம் கூட மனசுல ஈரமே இல்லாம அப்படி பேசினார்னா, அதைக் கேட்டுட்டு வாய் மூடி சும்மா இருந்தாரே உன் அருமை மாப்பிள்ளை… அதை நினைச்சா தான் எனக்கு ஆத்திரம் அடங்க மாட்டேங்குது… துருவன் யார் பாட்டி?... அவரோட மகன் தான…. உன் சம்பந்திக்கு பேரன் தான… அந்த நினைப்பு கொஞ்சம் கூட இல்லாம அன்னைக்கு அப்படி பேசினாங்களே… அதை மறந்துட்டு ஜிதேந்தரை கூப்பிட்டு உபசரிக்க உன்னால முடியலாம்…. என்னால முடியாது… என் பையனுக்கு அவன் அப்பா வேணும் தான்… அதை நான் தடுக்கலை… ஆனா அதுவும் ஜிதேந்தர் வீட்டுல என்னைக்கு என் பையனுக்கு இடம் இருக்குதோ, அன்னைக்குதான் ஜிதேந்தருக்கும் இந்த வீட்டுல இடம், உபசரிப்பு எல்லாம்… இதையும் மீறி நான் இருக்கும்போது அவரை கூப்பிட்டு உபசரிச்சிட்டு இருந்தன்னு வை, அப்புறம் நான் மனுஷியாவே இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்….”

“இப்போ மட்டும் என்ன மனுஷியாவா இருக்குற நீ?.... இனியும் இந்த வீட்டுக்கு நீ இருக்கும்போது அவரும் தான் எப்படி வருவார்???...”

“ஓஹோ… அவரை நான் இல்லாத நேரத்துல அப்போ திருட்டுத்தனமா வரவழைக்கணும்னு ப்ளான் வேற பண்ணிட்டிருக்கியா நீ மறுபடியும்?...”

“கிராதகி… ஏண்டி நீ இப்படி இருக்குற?..”

“திட்டு… நீ திட்டுறேன்னு எல்லாம் நான் கவலைப்படலை…”

“உன் வாழ்க்கையில நீயே மண் அள்ளிப் போட்டுக்காதடி… நதி… சொல்லுறதைக் கேளுடி…”

“எல்லாம் கேட்டாச்சு… ஜிதேந்தருக்கு அவர் பையன் வேணும்னா, அவர் நான் சொன்னதை செஞ்சு தான் ஆகணும்…”

“ஒருவேளை அவர் செய்ய மறுத்தா?...”

“மறுத்தா வேற சாய்ஸே இல்ல… என் பையன் காலம் முழுக்க என்னோட பையனாவே வளர்வான்…”

“அதுக்கு உன் பையன் சம்மதிக்கணுமே…”

“ஏன் சம்மதிக்காம?... அவன் என் பையன்… நிச்சயம் சம்மதிப்பான்…”

“இப்போ வேணா அவன் நீ சொல்லுறதுக்கெல்லாம் தலைஆட்டலாம்… உன் முந்தானையை பின்னாடி ஒளிஞ்சிக்கலாம்… ஆனா, காலம்னு ஒன்னு வரும்… அவனும் வளர்வான்… தகப்பனை தேடுவான்….”

“இப்பவே தேடத்தான் செய்யுறான்… அப்புறம் வளர்ந்தப்பின்னாடி அவன் தனியா தேட என்ன இருக்கு?...”

“தெரியுதுல்லடி… அப்ப துருவ்க்கு எது நல்லதோ அதை மனசுல வச்சிட்டு எந்த முடிவும் எடு….

“எல்லாம் மனசுல வச்சி யோசிச்சிட்டு தான் முடிவெடுத்திருக்கேன்… இனி அதுல எந்த மாற்றமும் இல்ல…”

“உன் பிடிவாதம் உன் வாழ்க்கையைப் பாழாக்கிடுமோன்னு எனக்கு பயமா இருக்குடி நதி…”

“என் பிடிவாதம் என் பையன் வாழ்க்கையை காப்பாத்தியே ஆகணும்… அது மட்டும் தான் எனக்கு முக்கியம்…”

“வீம்பு பிடிக்காதடி நதி… சொன்னா புரிஞ்சிக்கோ…” என கோகிலவாணி அவளிடம் கெஞ்ச…

“லூசு மாதிரி செய்யாத கோகி… செய்ய வேண்டியவங்க எல்லாம் சரியா செஞ்சா நான் ஏன் பிடிவாதம் பிடிக்கப்போறேன்?...”

“உலகம் உன்னை தப்பா பேசும்டி… புருஷனை விட்டு பிரிஞ்சி இருந்தா….”

“உலகத்துல ஆயிரம் பேர் ஆயிரம் பேசுவாங்க… அதுக்காக எல்லாம் நான் என் முடிவை மாத்திக்க முடியாது… என் வாழ்க்கையில என்ன நடக்கணும்னு விதி இருக்கோ அது நடக்கட்டும்… ஆனா என் துருவ் வாழ்க்கை நான் நினைச்ச மாதிரி தான் இருக்கணும் எப்பவும் சந்தோஷமா… அது மட்டும் தான் என் மனசுலயும், புத்தியிலேயும் இருக்கு…. இருக்கவும் செய்யும்…. உலகமோ, மத்தவங்களோ பேசுறது என் காதிலேயே விழுந்தாலும் அதை என் மனசுக்கு பக்கத்துல கூட நான் கொண்டு போக தயாரில்லை… அதை நீ புரிஞ்சிக்கோ…” என சொல்லிவிட்டு விருவிருவென்று அவள் தனதறைக்கு சென்றுவிட, கோகிலவாணியோ அவள் செல்லுவதையேப் பார்த்துக்கொண்டிருந்தார் கண்ணீருடன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.