(Reading time: 28 - 55 minutes)

காலைல விடியுறப்ப உங்க அப்பா இங்க வந்து நிப்பாங்க….அவங்கட்டயே காரணம் சொல்லிக்கோ….” பல்லைக் கடித்து சத்தம் ஏறாதவண்ணம் அடக்கி சீறியவன் விடு விடு என திரும்ப நடக்க ஆரம்பித்தான். கெஞ்சினா இவட்ட வேலைக்கு ஆகாது….இதுக்கு கண்டிப்பா எஃபெக்ட் இருக்கும் என அவனுக்கு நிச்சயம்.

‘திரும்பவும் மிரட்டுறானாமா இவன்? ….இவன் என்ன மிரட்டுறது நான் என்ன பயப்படுறது’ என அந்த நொடி வினிக்கு ஈகோவில் ஏறினாலும் அவன் சொன்ன காட்சி மனகண்ணில் வர….ஆட்டமெட்டிகாக கதவை திறந்து வீட்டை நோக்கிப் போனாள்.

ஆயிரம் கோபம் அவளுள்ளும்……கொதித்துக் கொண்டுதான் இருந்தாள் அவளும்…..இப்டி இவளை எதுக்கெடுத்தாலும் மிரட்டுற ஒருத்தன்ட்ட வந்து மாட்டிக்கிட்டு இருக்காளே…..வேக வேகமாக அவனை முந்திக் கொண்டு தங்கள் போர்ஷனுக்குப் போய் அடுத்த ரூமில் நுழைந்து கதவை அறைந்து பூட்டினாள்.

வீட்டுக்குள் வரவும் அவளை இழுத்து பிடித்து வைத்தாவது என்ன விஷயம் என பேசியாக வேண்டும் என்ற முடிவில்தான் யவ்வன் வந்திருந்தான். அதற்குள் இப்படி போய் அவள் பூட்டிக் கொண்டால்?

அவன் தன் முன் மூடி இருந்த கதவைப் பார்த்து ‘என்ன இவள்?’ என்றபடி நிற்க அவசரமாக கதவை மீண்டுமாக திறந்த நிலவினி….. “நாளைக்கு உங்க ஜல் ஜல் மோகினி என் கையால சட்னி…” என கத்திவிட்டு மீண்டுமாக மூடிக் கொண்டாள்.

ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை எனினும் புரிந்த நொடி….. வாய்விட்டு சிரித்தான் யவ்வன்….

சே இதுக்குத்தானா….? இந்த அணிலுக்கு பயந்துதானா இவ்ளவும்? இப்டி குழந்தையா இருக்காளே என்றிருந்தது அவனுக்கு……

தற்கு இடையில் நிலவினியின் கேள்வியில் இந்த காதலுக்கு அபயன் வீட்டில் சம்மதம் இருக்காது, நிலவினிக்கும் ப்ரச்சனை ஆகும் என நினைத்து இறங்கி ஓடிய பவிஷ்யா…..தங்கள் வீட்டுக் காரில் கொண்டல்புரம் வந்திருந்ததால் டிரைவரை அழைத்து காரை எடுக்கச் சொல்லி தன் வீட்டிற்கு கிளம்பிப் போய்விட்டாள்.

பவிஷ்யா நிச்சயமாக மனம் குழம்பிப் போயிருப்பாள் என தெரிந்தாலும் அவளுடனேயே ஓடி வந்து அவளை சமாதான படுத்த அபயனும் முயலவில்லை…..காரணம் யார் கண்ணுல அது மாட்டினாலும் பெரிதாக ப்ரச்சனை ஆகக்கூடும்…..

‘எப்படியும் இப்ப அவ வீட்டுக்குத்தான் போயிருப்பா….ஒன் ஆர் டூ டேஸ்ல அண்ணி அவட்ட பேசிட்டாங்கன்னா எல்லாம் சரி ஆகிடும்….’ என தன்னை சமாதானப் படுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று அவனுக்கு.

ஆனால் அப்படி சமாதானமாக வழியே இல்லாதபடி இனி நிலவினியுடன் தொடர்பில் இருக்க கூடாது என முடிவு செய்திருந்தாள் பவிஷ்யா….ஆனாலும் ஆனாலும் அவள் இந்த கொண்டல் புரத்திற்கே வந்து சேர்ந்தாள் கூடிய சீக்கிரமே….. கூட்டி வந்தது யாராம்?????

Friends இந்த episode பத்தி என்ன தோணுதுன்னு சொல்லுங்க…..அபயன் பவிஷ்யா அதி FB அடுத்த epiல சொல்றேன்….நன்றி

தொடரும்!

Episode # 13

Episode # 15

{kunena_discuss:929}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.