(Reading time: 28 - 55 minutes)

துமட்டுமா? இங்கயும் அபயன் பவிய விரும்புறதை ஒத்துப்பாங்களோ என்னமோ? ஒத்துகிட்டாலும் ஒத்துகிடலனாலும் எப்டியும் அபயன் நாளப் பின்ன லவ் ஃபெயிலியர்னு அழுறப்ப……இவதான் இவ ஃப்ரெண்டுட்ட அபயனை இழுத்துவிட்டுட்டா….இன்னைக்கு என் பையன் இப்டி நிக்கானேனு இவளதான் நினைப்பாங்க….இவ இந்த வீட்டு மருமகளாச்சே…. எது தப்பா போனாலும் பழி சுமக்கன்னே உள்ள உறவு முறையாச்சே….இவளைத்தான் தப்பா பேசுவாங்க…..இவளைதான் திட்டுவாங்க….ஏன் இவ வீட்டோட கூட அது சண்டையாகலாம்…..

எப்படியும் அபயனும் பவியும் பிரிஞ்சுதான் போய்டுவாங்க…..அதுக்கு எதுக்கு  இத்தனை குடும்பம் ஒருத்தர்க்கு ஒருத்தர் அடிச்சுக்கனும்…..? அதோட பவிக்கும் இவளுக்கும் உள்ள ஃப்ரெண்ட்ஷிப் வேற பெர்மனட்டா காலி ஆகிடும்…. ஆக இதை முளையிலேயே கிள்ளி எறியனும்…..அது தான் நிலவினியின் இப்போதைய மனநிலை……. ஆக கதவைத் திறந்து கொண்டு கத்தினாள்.

“ஏய் பவி முதல்ல நீ இங்க இருந்து கிளம்பு”

நிலவினியை நிச்சயமாய் அந்த நேரத்தில் அந்த விதத்தில் எதிர்பார்த்திருக்கவில்லை பவியும் அபயனும்.

தான் அபயனை திருமணம் செய்வதை நிலவினி வெறுக்க கூடும் என்று பவிக்கு அதுவரை தோன்றி இருக்கவும் இல்லை….பொதுவாக நிலு திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே அவநம்பிக்கையாகவும் சற்று எரிச்சலாகவும் பேசுவாள்தான். ஆனால் அதற்காக காதலுக்கு எதிரான ஆள் என்று சொல்வதற்கு இல்லை…..

தெரிஞ்ச பொண்னு யாராவது லவ் மேரேஜ் செய்தால் “சந்தோஷமா இருந்தா சரி தான்” எனதான் சொல்வாள்….இவள் விஷயத்தில் இவள் அபயனை திருமணம் செய்து நிலவினி வீட்டிற்கே வருவது என்றால் அவள் சந்தோஷப் படத்தான் செய்வாள் என அந்த நொடி வரை நினைத்திருந்தாள் பவிஷ்யா…. இவளும் அபயனும் அரேஞ்ச்ட் மேரேஜ் மாதிரியே  முறையாய் பெண்கேட்டு திருமணம் செய்யும் திட்டத்தில் இருப்பது நிலவினிக்கு தெரியாது என்பதும் இவளுக்கு உறைக்கவில்லை.

ஆக இப்போது நிலவினியின் கோபத்தில் அதிர்ந்தும் தவித்தும் போனாள் பவி…. ‘என்ன ஆச்சு? நான் அபைய விரும்புறது நிலுவுக்கு எதுவும் ப்ரச்சனையாகுமோ?’ கடகடவென ஓடுகிறது அவள் மனது….

ஆமா உண்மைதானே…..இவ அம்மா அப்பாட்ட அபயன் தன் குடும்பத்தோட வந்து பொண்ணு கேட்கிறப்ப இவ வீட்டுக்கு அது அரேஞ்ச்ட் மேரேஜாதான் தெரியும்….ஆனா அப்டி பொண்ணு கேட்க அபயன் தன் அம்மா அப்பாட்ட, “நான் பவிய லவ் பண்றேன்”னு சொல்லித் தானே ஆக வேண்டி இருக்கும்…..? அப்போ அவங்களுக்கு அது எப்டி ஃபீல் ஆகும்?

நிலவினி வீடு மாதிரி ரொம்பவே வசதியான வீட்ல இருந்து பொண்ணெடுத்துக்கிற அபயனோட அம்மா அப்பா…. அபயனுக்கும் அதே அளவு வசதியான வீட்டு பொண்ணு வேணும்னு தானே நினைப்பாங்க…..? என்னதான் இவ வீடு வசதியான குடும்பம்னாலும்….நிலு வீடு அளவுக்கு கிடையாதே….அதோட நிலு ஒரே பொண்ணு…..மொத்த சொத்துக்கும் ஏக வாரிசு…..ஆக இவ வீட்ல இருந்து எவ்ளவுதான் கொடுத்தாலும் நிலு வீட்டு அளவுக்கு அது வராது……

அப்டின்னா அபயன் வீட்ல பவிஷ்யா வேண்டாம்னு நினைச்சாங்கன்னா??? என் பையனை போய் இப்டி ஒரு இடத்துல இழுத்துவிட்டுடான்னு நிலுவதான திட்டுவாங்க……? நிலுவோட ஃப்ரெண்டுன்றப்ப நிலுவுக்கு தெரியாம இது நடந்திருக்கும்னு யார் நினைப்பா?

இன்னைக்கு ஒரு நாள் தான் பார்த்திருக்க அபயன் அம்மா அப்பா பத்தி இவளுக்கு என்ன தெரியும்….? பொதுவாவே மாமியார்னா மருமகளை குத்தி குடஞ்சுகிட்டுதான இருப்பாங்க…. அதுல இவ வேற நிலுவுக்கு இப்டி ஒரு ப்ரச்சனையை உண்டு பண்ணா?

ஆக இவளால இப்பதான் கல்யாணம்  ஆகி இருக்கிற நிலு மேரெஜ் லைஃப்ல ப்ரச்சனை வர போகுது….அதோட அபயன் வீட்ல இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறதும் கஷ்டம்….’ பதறிய பவிஷ்யாவின் மனம் இப்படி ஓட … 

அதற்குள் நிலவினி மீண்டுமாக அதட்டினாள்…. “அறிவிருக்கா உனக்கு லவ் பண்றேன்னு போய் உங்க அப்பாட்ட சொல்லிடுவியா நீ? அப்டியே நீ சொல்லிட்டாலும் உங்கப்பா ஒத்துப்பாங்களா?....இன்னொரு தடவை இங்க உன்னை பார்த்தேன்……இன்னொரு தடவை இங்க இப்டி வந்துடாத…. ” வினி சொல்லி முடிக்கும் முன்னமே பவி இறங்கி ஓடி இருந்தாள்.

பொரிந்து கொண்டு போன நிலவினிக்கு சட்டென ஷாக் அடித்தது போல் மனதில் ஓர் வலி…அவமானம். சொல்லிவிட்ட பின்புதான் அது உறைக்கிறது…. இவள் யார் பவியை இங்கு வராதன்னு சொல்றதுக்கு? இது அபயனுக்கும் வீடுதானே? அவன்  ‘என் வீட்டுக்கு பவி வருவா… நீங்க யாரு அவள வரவேண்டாம்னு சொல்ல’ என கேட்பான்தானே?

இவள் மனம் இப்படி நினைக்க ஆரம்பிக்கும் நேரமே அபயனின் குரல் அவள் நினைவுக்கு நேர் மாறாய் கெஞ்சுகிறது “ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்  அண்ணி…..உங்க வாயால அப்டி சொல்லிடாதீங்க அண்ணி…. பவி இங்க வரனும் அண்ணி…… ஆனா இப்டி இனி வர மாட்டா…..நீங்க தான் முன்னால நின்னு முறையா கூட்டிட்டு வரனும்….ப்ளீஸ் அண்ணி கோப படாதீங்க….”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.