(Reading time: 28 - 55 minutes)

ரவில் நிலவினியின் வருகைக்கு காத்து நின்றவனுக்கு….அவளது ஒவ்வொரு குணாதிசயமும் ஞாபகம் வர….அதே நேரம் இந்த அணில் அங்கு அவன் மீது ஓடி ஏற….சட்டென அப்போதுதான் அவனுக்கு உறைக்கிறது வினி எதற்கு பயந்திருக்க கூடுமென…..

எப்படியும் அது அவனது முதலிரவு….அவன் ஒரு விதமான உற்சாக சாந்தோஷத்திலிருந்தவன்….. இருந்த எக்‌ஸைட்மென்டில் கிண்டலாக அணிலை கொஞ்சிக் கொண்டிருந்தான்  அவ்வளவே….

 “ஓய் நீதான் என் குட்டிப் பொண்ண பயங்காட்டின ஆளா…? நீ பண்ண அட்டகாசத்துல தனி தனியா குடித்தனம் போவோம்னு சொல்லிட்டு இருந்த பொண்ணு என்னைவிட்டு தனியா எங்கயும் போறது இல்லைன்ற அளவுக்கு வந்தாச்சு…. இன்னைக்கு மாதிரி இன்னும் நாலுநாள் அவ என்னைவிட்டு அசையாம பார்த்துக்கோ….அதுக்கப்புறம் அவளே என்னைவிட்டு போகாத மாதிரி பார்த்துகிறது என் பொறுப்பு…” இதுதான் அவன் சொன்ன டயலாக்….இதன் பின் பகுதியை கேட்டுவிட்டு வினி அப்படி வெளியே போவாள் என அவன் கனவா காண?

ஆக அவளுக்காக காத்திருந்தவன் ஓரளவுக்கு மேல் ஓரேடியாய் அவளைக் காணமல்….கீழே இறங்கி வந்தால்….’இன்னுமா கிளப்பி அனுப்பாம இருக்காங்க என்ற நினைப்பில் தான்’….வீட்ல யாருமே இல்லை….அம்மா அப்பா இன்னைக்கும் பால்பண்ணைக்கு கிளம்பி போயாச்சு போல….

அப்போ வினி????? அவசர அவசரமாக மீண்டும் இவன் போர்ஷனுக்கு வந்தவன்….ஒவ்வொரு அறையாய் தேடினான்……எங்க போய்ருப்பா? ஏன்???

இவ எப்ப சந்தோஷமா இருப்பா? எப்ப மூட் அவுட் ஆகி என்ன செய்து வைப்பா????

இவ்ளவு நேரம் நல்லாதான இருந்தா? இப்ப என்னாச்சு???

அறையில் தேடும் போது எதற்கும் என கார் சாவிகளைப் பார்த்தான். ஒருவேளை காரை எடுத்துட்டு எங்கயாவது போயிருக்காளா? எல்லா கார் சாவியும் இங்கதான் இருக்குது…… இப்போது வேறு வழி இல்லை வீட்டிற்கு வெளியே வந்து இவர்கள் இடத்தில் தேடினான்…

இந்த நேரத்தில் இவனை வெளியில் பார்த்தாலே ப்ரச்சனை……என்ன ஏது என எத்தனை கேள்வி வரும்??? ஆனால் எல்லாத்தை விட அவள் பத்ரமா இருப்பது முக்கியம்.

முடிந்தவரை அடுத்தவர் பார்வைக்கு படாமல் அவசர அவசரமாக தேடினான்…..வீட்டோட பின்னால தோட்டம் உண்டு….ஒரு வேளை அங்க போய் இருப்பாளோ……அவ வீட்ல கிணத்தடி அவளுக்கு பிடிக்குமே…..அங்கும் அவன் பார்த்த எங்கும் அவள் இல்லை…..நேரம் போய்க் கொண்டே இருந்தது. கார்பார்க்கிங்கில் அத்தனை காரும் நிற்கிறது. அவள்தான் இல்லை…

ஐயோ சின்னி கிணத்துல கைப்பிடி சுவர் கூட கிடையாதே….அது இங்க இருந்து பக்கமே….இவ தெரியாம அந்த பக்கம் போயிருக்க கூடாதே…. அங்கு தேடி ஓடினான்… இரவு பண்ணை நேரம் முடியவும் ஊர் உறங்கிப் போகும் என்பதால் ஆள் நடமாட்டம் என எதுவும் இல்லை…..அரவம் இன்றி அமைதியாய் கிடந்தது அதன் உள்ளே நீர்…. கடவுளே!!!!!!

இனி என்ன செய்ய? தெய்வமே அவ சேஃபா இருக்கனுமே…ஊர்ல ப்ரச்சனை இல்லைதான்….ஆனா அவளா எதாவது செய்து வச்சுக்க கூடாதே…. சின்ன சின்ன விஷயத்துக்கும் பயப்படுவாளே…. எப்டி தைரியமா இந்த நேரத்துல வெளிய போனா? அப்டி அத்தனை பயத்தை தாண்டி போற அளவுக்கு அவளுக்கு இங்க என்ன ப்ரச்சனை?

இனி இதுக்கு மேலயும் இங்க  சுத்திகிட்டு இருக்றதுல ப்ரயோஜனம் இல்லை….. கார எடுத்துட்டு போய் தேட வேண்டியதுதான்….என்னன்னு இப்ப இந்த ப்ரச்சனையை வீட்ல சொல்ல?

மணியைப் பார்த்தான் இரவு ஒன்று என்றது அது. வீட்ல புது மண தம்பதிகள் தங்குகிறார்கள் என யாரும் இன்று இரவு வீட்டிற்கு வரவில்லை போலும்…..

துடிக்க தவிக்க இவன் கார் கீயை எடுக்க போனால்….இப்போது மூன்று கார்களின் சாவிகளில் இரண்டு தான் இருக்கிறது.…..அப்படின்னா வினி இப்ப இங்க வந்து ஒரு கீய எடுத்துறுக்கா….. காரை எடுத்துட்டு எங்க போகப் போறா?

கார் நிறுத்தி இருக்கும் இடத்துக்கு விரைந்தான். காணாமல் போயிருந்த கார் கீக்கு உரிய Ford Ecosport அங்குதான் நின்று கொண்டிருந்தது. அப்போ வினிய எங்க? இப்போதுதான் அவன் கண்ணுக்கு படுகிறது  ஒரு இஞ்ச் அளவு திறந்து இருக்குது வின்டோ என…..ஓராயிரம் எதிர்பார்ப்புடன் உள்ளே எட்டிப் பார்த்தான் அவன்…

 அந்த நொடி மனம் வேண்டியது போலவே அவன் வினி அங்குதான் சுருண்டு தூங்கிக் கொண்டிருந்தாள்…. அவனுள் இருந்த அத்தனை புயலும் தவிப்பும் அடங்கி இப்போதுதான் அவனுக்கு உயிரே திரும்ப வந்தது….

ஆனால் ஏன்?? அப்படி என்ன செய்துவிடுவான் இவன் என இப்படி செய்தாள் இவள்??? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி செய்துவிட முடியும் இவளால்? அப்படி என்ன இவன் கண்ணியத்தை நம்பாமல் இவள்????

அவள் கிடைக்கும் வரை அவள் கிடச்சுடனுமே என இருந்த தவிப்பு….இப்பொழுது அவள் கிடைக்கவும் காரணம் ஆராய்ந்து கோப கோபமாக ஏறுகிறது…

ஆனாலும் இது நின்று சண்டை போடும் இடமும் அல்ல நேரமும் அல்ல…. யாரும் பார்க்க முன்னால முதல்ல வீட்டுக்குள்ள போகனும்….

காரின் கதவை மெல்ல தட்டினான்….வின்டோவில் இருந்த இடைவெளி வழியாய்  சிறு குரலில் கூப்பிட்டான்….. “வினி….”

உடனேயே எழுந்துவிட்டாலும் இரண்டு செகண்ட் என்னவென எதுவும் தெரியாதவள் போல் முழித்த பின்பே சூழ்நிலை புரிய “நான்லாம் அங்க வரலை….” என ஆரம்பித்தாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.