(Reading time: 28 - 55 minutes)

டப்பாவி வினி இருந்தாலும் நீ இப்டி எதிராளிக்கு எகிறி எகிறி கோல் போடக் கூடாதுமா……அந்த காலில்லா மம்மியும் அம்மியும் கூட எந்திரிச்சு நின்னுடும் போல….நீ இப்டி குப்ற குப்ற விழுறியேமா…’ என பதிலுக்கு ஈகோ இடிக்க….

இரண்டு நினைவுக்கும் நடுவாக…. ‘காவல் வச்சுட்டு தூங்கப் போனா இப்டித்தான் சொல்லாம கொள்ளாம ஓடிப் போய்டுவியா நீ…..? இதுல இது லவ் மேரேஜ்னு தம்பி விடு தூது வேற..’ என்பது போன்ற ஒரு லுக்கை அவனுக்கு கொடுத்துட்டு ஏதோ பயம்னா என்னன்னே தெரியாதவ மாதிரி கெத்தா அவர்களது ரூமுக்கு திரும்பிப் போனாள்.

‘எப்டியும் பின்னால வருவான்ற தைரியம்தான்…..’ அதுவும் இவ அடுத்த ரூம்க்கு போய் அங்க இவன் வராம இருந்துட்டா? சோ நேரடியா முதல்ல இவங்க இருந்த ரூம்க்கே போயாச்சு பொண்ணு….

அவ கால்குலேஷன் மிஸ்ஸாகம அவ பின்னாலயே வந்து நின்றான் யவ்வன்.

“சாரிமா என் அஃபீஷியல் ஃப்ரெண்ட் வந்திருந்தாங்க…..நீ தூங்கிட்டு இருந்த…. அதான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு போக வேண்டியதாயிட்டு…” அவன் சொல்ல சொல்ல திரும்பிப் பாராமல் பதில் கூறாமல் அவனுக்கு முதுகு காட்டி நின்றபடி…

தன் தலையில் அலங்காரத்திற்காய் அங்கங்கு வைத்திருந்த கோல்டன் பீட்ஸ் இன்ன பிற எல்லாவற்றையும் ஒவ்வொன்றாய் உருவி….மீண்டுமாய் சிம்ப்ளாய் தலை வாரி பின்னலிட்டுக் கொண்டு இவள் கிளம்ப…..வைத்த கண் வாங்காமல் இவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.  

‘சைட் அடிக்றத மட்டும் இப்டி ஸ்ட்ரெயிட்டா ஸ்ட்ரெயிட்ஃபார்வாட அடி….…..சம்மதம் கேட்கிறதுக்கு மட்டும் டான் ரேஞ்சுக்கு ஆயிரம் கோல்மால் பண்ணு என்ன…..?’ மானசீகமாய் மண்டகபடி மணந்திருந்தவனுக்கு கொடுத்தபடி…..  சற்று விலகி நிற்கும் அவன் முகம் இவள் பார்த்திருக்கும் கண்ணாடியில் தெரிகிறதுதானே இவளுக்கு…. அதில் அவன் உணர்வுகளை படித்தபடி இவள்….

“நீ இங்க என் கூட இருக்கன்றதே ரொம்பவும் சந்தோஷமா இருக்கு வினி” ஆர்பாட்டமாயோ ரொம்ப எம்ஷோனலாயோ எப்படியும் சொல்லமல் வெகு இயல்பாய் சொல்லிவிட்டு அங்கிருந்து விலகி அடுத்த வேலையைப் பார்க்க போனான் அவன்….

அதிலிருந்து மனதில் ஒருவித இலவம்பஞ்சு உணர்வு அவன் புறம்.. மெல்லத்தான் எனினும் அது ஏறுமுகம். .

டுத்தும் மதிய உணவில் அவன் இவளை கவனித்த முறையிலாகட்டும்….மறுவீடு முடிந்து கிளம்பும் போது அழுத இவள் அம்மாவிடம் அவன் பேசிய வகையிலாகட்டும்…..காரில் அழுத இவள் கையை தன் கைகளுக்குள் பொதிந்து கொண்டதிலாகட்டும்….

இப்போது கொண்டல்புரம் திரும்பிய போது, முறை அதுதான் என்றாலும் யவ்வனின் அம்மா இவளுக்கு நகை கொடுத்து வரவேற்ற போதிலாகட்டும்…..அப்படியெல்லாம் முறையே இல்லை என்ற போதும்  யவ்வனது அப்பாவும் அண்ணன் தம்பியும் அவளுக்காய் வாங்கி வைத்திருந்த பரிசுகளை கொடுத்து வரவேற்ற செயலிலாகட்டும்…….அந்த இலவம் பஞ்சு உணர்வு அப்படியே மேகக் கூட்டமளவு விரிந்து பெருகி இவளை மிதக்க வைத்தது.

அடுத்துமாய் அவர்கள் கொடுத்ததை கொண்டு வந்து வைக்க என மாடிக்கு இவர்கள் போர்ஷனுக்குள் கதவை திறந்து கொண்டு  இவள் நுழைந்தபோது…..’கூட யவியும்தான் வந்தான்…இவளாவது தனியா வர்றதாவது….?’

‘மம்மி பயந்துடும்ல…’ என அந்த ஈவன்ட்க்கு தனக்கு பிடிச்ச மாதிரி இவள் காரணம் சொல்லிக் கொண்டு உள்ளே நுழைய…… இவர்களது மொத்த வீடும் பூமணத்தால் மிதந்து பஞ்சு மேகத்தில் பயணித்திருந்தவளுக்கு பதிதார கடலின் அடுத்த பக்கத்தை அழகாய் சுட்டியது.

 இரவு சாயங்காலம் மேல் சாயம் பூச தொடங்கி இருந்த அந்த நேரமும்…..இந்த சம்பந்தமுள்ள பூவாசமும்…பூட்டி வைக்கப் பட்டிருந்த இவர்கள் இதற்கு முன் இருந்த அந்த அறைக் கதவும்…..

 குப்பென எதையோ கொண்டு வருகிறது இவள் அடிவயிற்றில்……என்னவகை பயமிது???

விஷயம் புரியாமல் இருக்க இவ என்ன அவன் கூப்டுற மாதிரி குட்டிப் பொண்ணா? முதலிரவுக்கு இப்போதே அறையை தயார் செய்தாயிற்று போலும்….மெல்ல நிமிர்ந்து அதே பயக் களையுடன் அவன் என்ன யோசிக்கிறான் என அவன் முகம் பார்த்தால்…..

இவள் பார்வை அவன் முகம் தொடும் நேரம்….குறும்பும்….ரசனையுமாயுமாய் இருந்தது அவன் முகம்….

 இப்பொழுது இவள் பார்வையை சந்திக்கவும்….மறுப்பாக ஆறுதலாக….. இவள் நோக்கி கண்ணால் மறுத்து தலை அசைத்து சகை செய்த அவன்….அதோடு அங்கு நின்று இவள் பதற வேண்டாம் என்பது போல் இவள் கையை பற்றி சற்று வேகமாக இன்னொரு அறைக்குள் கூட்டியும் சென்று விட்டான்….. இலவம் பஞ்சு மேகத்திலிருந்து இறங்க முடியவில்லை இவளால்…..

கைல உலக்கையோட போகனும்….பால்ல பத்து அவில் போட்டு குடுக்கனும்…. ஓட ஓட விரட்டனும்…..செய்ற ஆர்பாட்டத்துல அவன் இன்னொரு டைம் என்னை திரும்பிக் கூட பார்க்க கூடாது….. இப்டில்லாம் இவள் என்னவென்னமோ யோசித்து வைத்திருந்ததை நினைத்து இப்போது இவளுக்கே சிரிப்பாக வருகிறது….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.