(Reading time: 16 - 32 minutes)

'ன்டா... இங்கே என்ன பிரச்சனை???" அபர்ணாதான் காரணமாக இருக்க வேண்டும் என ஓரளவு யூகித்து இருந்தான்தான் விஷ்வா

'முடியாது விஷ்வா .. உள்ளுக்குள்ளே அப்படியே எரியுது... ' கண்களை திறக்கவில்லை பரத்.

'என்னது???'

'வெயில்டா... இந்த ஊர் வெயில்... முடியலை... நான் கிளம்பறேன்...' சாவியை அவனிடம் கொடுத்து விட்டு எழுந்து விட்டான் பரத்,

'சரி இரு கொஞ்ச நேரம் பேசிட்டு...'

'இல்ல விஷ்வா... வரேன்...' என்று புன்னகையுடன் தலை அசைத்து விட்டு நகர்ந்தவன் மறுபடியும் விஷ்வாவிடம் வந்தான்.

'விஷ்வா... அடிக்கடி போன் பண்ணுவே தானே???.'

'தினமும் பேசறேன்டா. ஏன்டா இப்படி கேட்கிறே???'

'இல்ல சும்மாதான்... வரேன் நான்'  திரும்பி பார்க்கமல் நடந்தான் பரத். சாய்ந்துக்கொள்ள தோள் தேடும் அவனது தவிப்பு புரியாமல் இல்லை விஷ்வாவுக்கு.

விமானத்தில் ஏறி அமர்ந்தான் பரத். அருண் ஏறியதும் அதே விமானத்தில்!!!! கண்களில் தென்படாத ஒரு தூரத்தில் அவன் அமர்ந்தது ஒரு வகையில் நிம்மதியை கொடுத்திருந்தது பரத்துக்கு.

பெங்களூர்!!!! மறுநாள் காலை!!!!

'ஜீன்சும்..... டி ஷர்ட்டும்.... காதுகளில் ஊஞ்சலாடும் பெரிய வளையங்களும்... தோள்களை உரசி விளையாடும் கூந்தலுமாக தாயாராகி வெளியே வந்தாள் அந்த பெண்!!!  தான் தங்கி இருக்கும் இடத்திலிருந்து தனது ஸ்கூட்டியை முழு வேகத்தில் கிளப்பிக்கொண்டு உற்சாகமாக பறந்தாள் அவள்!!!

பெங்களூர்!!!! அன்று மாலை... நேரம் ஏழை தாண்டிக்கொண்டிருக்க...

அந்த நட்சத்திர ஹோடேலின் மாடியில் அவனது வாரந்திர மீட்டிங்கை முடித்துவிட்டு அந்த அறையில் தனியாக அமர்ந்திருந்தான் பரத். கையில் இருந்த சூடான காபி தொண்டைக்குள் இறங்க.... நேற்றிய நிகழ்வுகளின் பலனாக மனத்திரையில் சிரித்தான் விஷ்வா.

கைப்பேசியை எடுத்து விஷ்வாவின் எண்ணை தேடி அழுத்தினான். அவனாக விஷ்வாவை அழைத்து பல நாட்கள், ஏன் வருடங்கள் ஆகின்றன!!! மறுமுனையில் ஒலித்தது. அழைப்பு ஏற்க படவில்லை.

விஷ்வாவின் கைப்பேசியின் திரையில் பரத் என்ற பெயரும் அவனது புகைப்படமும் ஒளிர்ந்தன. அது ஒரு மேஜையின் மீது இருக்க, அதனருகே அமர்ந்திருந்தான் அருண்!!! அங்கே விஷ்வா இல்லை!!!

அருணுகுள்ளே அலையடித்தது. ஒலிக்கும் அந்த கைப்பேசியை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தான். விஷ்வாவுக்கும் பரத்துக்கும் என்ன சம்மந்தம் என்று யோச்சித்தபடி!!!!

அழைப்பு ஏற்கபடவில்லை. 'ஒரு வேளை  ஏதாவது அறுவை சிகிச்சையில் இருப்பானோ???' என்ற எண்ணத்தில் மறுபடியும் அழைக்கவில்லை பரத்.

சில நிமிடங்கள் கழித்து ஒலித்தது பரத்தின் கைப்பேசி!!! திரை விஷ்வா என ஒளிர்ந்தது!!!

'பிஸியா இருக்கியா விஷ்வா... விசேஷம் ஒண்ணுமில்லை. அப்புறம் கூட பேசறேன்...'

இல்லைடா .. அது வந்து.... பெங்களுர் வந்திருக்கேன்டா... நீ கொஞ்சம் இங்கே வரியா??? அவன் குரலில் ஏதோ ஒரு பதற்றம் இருந்தது போலே தோன்றியது பரத்துக்கு.

'எங்கேடா இருக்கே??? ஏதாவது ப்ராப்ளமா???

'ம்??? அது நேரிலே வா சொல்றேன்....' என்றான் விஷ்வா தான் இருக்கும் அந்த மருத்தவமனையின் பெயரை  குறிப்பிட்டபடியே.

அடுத்த சில நிமடங்களில் அந்த இடத்தை அடைந்திருந்தான் பரத். அந்த மருத்தவமனை வளாகத்தை அடைந்து உள்ளே நுழைந்த பரத்துக்கு பேரதிர்ச்சி!!! அங்கே அப்படி ஒரு காட்சியை பரத் எதிர்பார்த்திருக்கவில்லை!!! 

அங்கே இருந்த இருக்கையில் அருண் அமர்ந்திருக்க அவன் தோளில் கை போட்டுக்கொண்டு அவனருகில் அமர்ந்திருந்தான் விஷ்வா. இருவர் கையிலும் காபி கோப்பை!!! பரத் அவர்கள் அருகில் செல்ல அவனை நிமிர்ந்து பார்த்த அருண் கண்களில் என்ன இருந்தது என புரியவில்லை பரத்துக்கு!!!!

Episode # 04

Episode # 06

தொடரும்......

{kunena_discuss:982}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.