(Reading time: 25 - 49 minutes)

"ன் ஏன் ஏன் ன்னு உங்க பொண்ணு ஆரம்பிச்சுட்டா. ஒரு வாரமா என்னடா அமைதியா இருந்தாளேன்னு பார்த்தேன்" ரத்னாவதி கூற சிரித்துக் கொண்டே விஜயகுமார் மனைவியின் பொய் கோபத்தை ரசித்தார்.

"நாளைக்கு நியூ இயர் அதனால தான் கோயிலுக்கு போறோம்" மகளிடம் பதில் சொல்லியவர் மனைவியைப் பார்த்து " நீயும் ஏன் ஏன்னு கேளேன் உனக்கும் பதில் சொல்றேன்" என்று ரகசியமாக கண்ணடித்தார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்...

பூர்வா குழந்தையாக இருந்த போதே விஜயகுமார் அவளை வெளியில் அழைத்துச் செல்வார். அப்போது சுற்றுப்புறத்தை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டே வருவாள்.

"இது மரம் பூக்குட்டி.  இது தான் நம்ம பெரிய சொத்து. இது இல்லைனா மனுஷனே இல்ல" மரத்தின் பெருமைகள் பற்றி சொல்லிக் கொடுப்பார்.

தந்தை முகத்தையே கவனமாக பார்த்துக் கொண்டிருப்பாள் குழந்தை.

கொஞ்சம் நன்றாக பேச ஆரம்பித்ததும்," இது என்ன அது என்ன" என்று கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பாள். பதில் சொன்னால் “ஏன் அப்படி இருக்கு ஏன் ஏன்” என்று அடுக்கிக் கொண்டே போவாள்.

"மத்த குழந்தைகள் எல்லாம் இப்படி கேள்வி கேட்கறதில்ல... நானும் கவனிச்சேன். ஏன் இவ இப்படி இருக்கா" ரத்னாவதி மகள் நார்மல் குழந்தையாக இல்லையோ என்று பரிதவித்தார்.

"ரதி. திருஞானசம்பந்தர் ஐந்தே வயதில் தேவாரம் பாடலையா... அதை தெய்வத்தின் அருள்ன்னு கொண்டாடுறோம். நம்ம குட்டிமாவும் அப்படி தான்" அதற்கும் விளக்கம் வைத்திருந்தார் அபூர்வாவின் தந்தை.

“தோடுடைய செவியன் பாடு பூக்குட்டி” தந்தை கூறவும்

“தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்

காடுடைய சுடலைப் பொடிபூசி யென்னுள்ளங்கவர் கள்வன்

ஏடுடைய மலரான் முனை நாட்பணிந்தேத்த அருள்செய்த

பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மானிவனன்றே”

முழுப் பாடலையும் மழலையில் பாடி முடித்திருந்தாள் அபூர்வா.

“எவ்வளவு அழகா பாடுறா என் பொண்ணு” மகளுக்கு திருஷ்டி கழித்தார் ரத்னாவதி.  

"சொல்லிக் கொடுத்தது என் ரதி ஆச்சே" மனைவி புகழ் பாடினார் விஜயகுமார்.

றுநாள் காலை குழந்தைகளைக் கோயிலுக்குச் செல்ல ஆயத்தம் செய்து கொண்டிருந்தார் ரத்னாவதி.

"ரதி என்ன இது" அவர் குழந்தைகளுக்கு அணிவித்திருந்த ஆடைகளைக் கண்டு விஜயகுமார் சிரிக்கவும்

"வெளியே எவ்வளவு குளிரா இருக்கு..உங்களுக்கு என்ன மிலிட்டரி மேன். குழந்தைங்க தாங்குவாங்களா" ரத்னாவதி கணவருக்கு பதில் அளித்துக் கொண்டிருக்க  தந்தைக்குத் தன் உடை பிடிக்கவில்லையோ என்று தன் உடையையும் தந்தையையும் மாறி மாறிப் பார்த்தாள் அபூர்வா.

"என் பூக்குட்டி அழகா இருக்க" மகளை உச்சி முகர்ந்தார் விஜயகுமார்.

இதைக் கேட்டதுமே "பூனைக்குட்டி அழகா இருக்கே" சித்து நினைவில் வந்தான்.

"டாடி, நாம சித்து வீட்டுக்குப் போலாமா இப்போ" தந்தையின் கரம் பிடித்து கேட்க என்ன என்று மனைவியைப் பார்த்தார் விஜயகுமார்.

சுருக்கமாக கணவரிடம் சுசீலாவை சந்தித்தது பற்றிய விவரங்களை ரத்னாவதி  கூறவும்,"அவங்க வீடு ரெண்டு தெரு தள்ளி தான் இருக்கு... நாம கோயிலுக்குப் போகும் போது அவங்களையும் கூட்டிட்டுப் போகலாமே. நீ போன் பண்ணி கேளு ரதி" என்றார்

"நான் இந்த அட்ரஸ் கீழ போன் நம்பர் இருந்ததையே கவனிக்கல...அன்னிக்கு பிறகு அவங்ககிட்ட பேசவும் இல்ல" ரத்னாவதி சுசீலா கொடுத்திருந்த நம்பருக்கு டயல் செய்யவும் எதிர் முனையில் சுசீலாவே பதில் அளித்தார்.

வீட்டிற்கு வரலாமா என ரத்னாவதி கேட்க எதற்கு அனுமதி எல்லாம் கேட்டுகிட்டு என்று கடிந்து கொண்ட சுசீலா அவர்கள் வரவை எதிர்பார்ப்பதாகச் சொன்னார்.

"யாரு சுசீ போன்ல" கிருஷ்ணமூர்த்தி கேட்க

"அபூர்வா அம்மாங்க... அவங்க இப்போ வீட்டுக்கு வரேன்னு சொன்னாங்க" சுசீலா பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

"சித்து எங்க சுசி "

"அவன் காலையில் இருந்தே ரூமிலேயே உக்கார்ந்திருக்கான். சாப்பாடும் வேணாம்னு சொல்லி அடம் பிடிக்கிறான்"

"வீட்டுக்கு வேற கெஸ்ட் வராங்க. இவன் இப்படி இருந்தா எப்படி சுசி"

"விடுங்க அவனுக்கு இன்னிக்கு நியூ இயர்ன்னு தெரிஞ்சு போன வருஷம் நடந்த எல்லாமே நியாபகம் இருக்கு. அபி வந்தா அவளோட விளையாடவேணும் வெளில வருவான்"

ரியாக ஒரு மணி நேரத்தில் அபூர்வா குடும்பம் சித்தார்த் வீட்டிற்கு வரவும் வாசலில் நின்றே சுசீலா கிருஷ்ணமூர்த்தி இருவரும் வரவேற்றனர்.

குழந்தை நிலாவைப் பற்றி அன்று ரத்னாவதி எதுவும் சொல்லியிருக்கவில்லை. எனவே சிறு குழந்தையைப் பார்த்ததும் சுசீலாவுக்கு ஆனந்த ஆச்சரியம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.