(Reading time: 25 - 49 minutes)

"பிக்கு தங்கை இருக்கானு சொல்லவே இல்லையே"

"அன்னிக்கு சொல்ல சந்தர்ப்பம் அமையல. பக்கத்துக்கு வீட்ல இவர் கூட வேலை பார்பவர் குடும்பம் இருக்காங்க. அங்க தான் நிலாவை அன்னிக்கு பார்த்துக்க சொல்லி விட்டுட்டு வந்தேன்" ரத்னாவதி பதிலுரைத்தார்.

அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

விஜயகுமார் கிருஷ்ணமூர்த்தி இருவரும் தங்கள் பணிகளைப் பற்றி பகிர்ந்து கொள்ளவும் பேச்சு வாக்கில் சுசீலாவின் சொந்த ஊரும் மதுரையே எனவும் விஜயகுமாரை உரிமையாக “அண்ணா” என்று அழைத்தார் சுசீலா .

சுசீலாவுக்கு உடன் பிறந்தோர் யாரும் இல்லை. அவர் பெற்றோரும் சுசீலா கிருஷ்ணமூர்த்தி திருமணம் முடிந்த சில மாதங்களில் ஓர் விபத்தில் காலமாகி விட்டனர்.

இதை அறிந்ததும் விஜயகுமாரும் தங்கச்சி என்று பாசத்துடன் சுசீலாவைக் கொண்டாடினார்.

"சித்து எங்க….." அபூர்வா சுசீலாவை எப்படி அழைப்பது என்று தெரியாமல் மொட்டையாக கேட்கவும், "இனிமே என்னை அத்தைன்னு கூப்பிடனும் அபி...சித்து ரூம்ல இருக்கான்...நீ போய் அவனைக் கூட்டிட்டு வரியா" என சுசீலா கூறவும்

"சரி அத்தை" என்று கூறியவள் அந்த அறையை நோக்கிச் சென்றாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷா லக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

பி அந்த அறையின் கதவை ‘டொக்’, ‘டொக்’ என்று தட்டி திறக்கவும்  இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு கைகளை குறுக்கே கட்டிக்  கொண்டு விட்டதை வெறித்துப் பார்த்தபடியே கட்டிலில் அமர்ந்திருந்த சித்தார்த் ‘யாரது’ என்று கோபமாய் திரும்பி பார்த்தான்.

பார்த்தவன் அகம் புறம் சட்டென மலர “பில்லி” என்று கட்டிலில் இருந்து துள்ளிக் கொண்டு இறங்கினான்.

அவளைப் பார்த்தவன் இன்றும் வாய் விட்டு சிரித்தான். கனமான முழுக்கை ஸ்வட்டர் மேல பட்டு பாவாடை அரைக்கை சட்டை அணிந்திருந்தாள். கை நிறைய கண்ணாடி வளையல்கள் வேறு. தொடை வரை மூடியிருந்த நீளமான கனமான சாக்ஸ் மேல கொலுசு. தலையில் அன்று போல இன்றும் மங்கி குல்லா...

அவனுடன் சேர்ந்து அபூர்வாவும் சிரிக்க அந்த சிரிப்பொலி ஹாலில் அமர்ந்திருந்த பெரியோருக்கு நிம்மதியை அளித்ததென்றால் அபூர்வா சித்தார்த் கைப் பிடித்து இழுத்து வந்து செய்த செயல் அனைவரையும் திக்பிரம்மை அடையச் செய்தது.  

பெண் குழந்தை குலப் பெருமை என்று போற்றிய ஜனகர் வாழ்ந்த பூமியில் இடைப்பட்ட காலத்தில் அது குலையும் வண்ணம் பெண் சிசுக்கொலைகள், பால்ய விவாகம்,பெண் அடிமைத்தனம் போன்றவை நிகழ்ந்தேறிய சமுதாயம் இன்று பெருமாற்றம் கண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது. பாரதியார், ராஜா ராம் மோகன் ராய் போன்றோர் சமுதாயத்தில் மாற்றம் கொண்டுவந்த அதே பொழுது ஒவ்வொரு வீட்டிலும் மகள்களின் தந்தைகளின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது. பெண் குழந்தைகளைப் பொக்கிஷமாக போற்றி மேன்மை அடையச் செய்த, செய்து கொண்டிருக்கும் (என் தந்தை உட்பட) அனைத்து தந்தைகளின் பிரதிநிதியாக மணியன், விஜயகுமார் கதாபத்திரங்களை சித்தரித்து அவர்களுக்கு நன்றி கூறுவதாக இந்த அத்தியாயம்

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:1080}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.