(Reading time: 39 - 78 minutes)

காதல வெளிப்படுத்த காமம் வேணும்றத என்னால ஒரு நாளும் ஒத்துக்க முடியாது….. ஆனா மேரேஜ்  லைஃப்ல…..இதுக்கு ஏன் இவ்ளவு இம்பார்ட்டன்ஸ் கொடுத்து வச்சுறுக்காங்கன்னு இப்ப புரியுது……. உனக்கு நான் உரிமை தரலைன்னு சொல்லிட்டல்ல….” அவன் சொல்ல….

இப்போது ரியா அவன் பிடியிலிருந்து திமிறி வெளிவர முயன்றாள்…

நான் சொன்ன உரிமைய இவன் என்னதா புரிஞ்சு வச்சுறுக்கான்???

“நான் உன்னை ஒழுங்கா மேரேஜ் செய்யலையா…..இல்ல எந்த விஷயத்திலாவது உன்னை நான் வயலேட் செய்தனா….? உரிமை தரலன்னா….வேற என்ன நான் செய்யல…..இது …..கன்சீவா இருக்கியேன்னு யோசிச்சேன்…. “

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்..

இன்னுமே பிடியை விடாமல் அவன் சொல்ல…

‘ஐய்யோ அவன் சொல்றதும் சரிதான…..வேற எதுல அவன் என்ன வைஃபா ட்ரீட் பண்ணாம இருந்தான்….? ‘ என்கிறது ரியாவின் மனசாட்சி…

“ஸ்கூல் டேஸ்ல உன் மேல லவ் இல்லைனு சொன்னா அதுக்காக பொண்ணு கேட்டு வந்ததும் லவ் இல்லைனு அர்த்தமா உனக்கு…? வேற என்ன கட்டாயத்துக்கு நான் உன்ட்ட அத்தனை தடவை வந்து கேட்கனுமாம்?” காரில் வரும் போது வேறு எதெல்லாம் தப்பாக போயிருக்கும் என விவன் யோசித்திருந்ததின் விளைவு இது…..

“ஐ லவ் யூன்னா சொன்னா மட்டும்தான் அது காதல்…. உரிமை  ஹஃஸ்பண்ட் அண்ட் வைஃப் எல்லாமா?”

அவன் பேச பேச உள்ளுக்குள் அவளை அதுவரையும் தரையோடு கட்டி இருந்த அனைத்து  விலங்கும் உடைந்து எதோ அந்தரத்தில் பறக்கும் நிலைக்கு இவள் போனாள்….

தொடரும்

Episode # 19

Episode # 21

{kunena_discuss:1063}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.