(Reading time: 39 - 78 minutes)

கையில் கிடைக்கவும் அவனை கடித்து குதறிவிடும் எண்ணத்தில்தான் காத்திருந்தாள் ரியா… ஆயிரம் கேள்வி அப்படியே மைன்டில் மாறி மாறி ஓடிக் கொண்டிருக்கிறதுதான் அவனை பிச்சு பிடுங்க….

ஆனா அவன் வந்து அமர்ந்த விதம்…. அவன் முகம்…..குரல்….அவள் காலருகில் வந்து அமர்ந்த நிலை…. வெகு அன்யோன்யமாய்….. உரிமையாய்…..அம்மாவ தேடுற குழந்தை…. இல்ல…. ஃப்ரெண்ட்ட தேடுற ஒரு ஃப்ரெண்ட் போல…. இல்ல ரெண்டும் போல….

இவள் மனம் அந்தர் பல்ட்டி அடிச்சு ஐய்யோ அவன் இப்டி ஃபீல் பண்றானே என்ற நிலைக்கு தானாக போக…

ஆனால் அடி விழுந்திருப்பது தன்மானத்தில் அல்லவா…..ஆக எதையும் காட்டாமல்….. அமைதியாகவே இருந்து கொண்டாள்….

கேள்வி கேட்டு எந்த பதிலும் இல்லை எனவும் தனக்கு பின்னால் அமர்ந்திருந்தவளை திரும்பி நிமிர்ந்து பார்த்தான்…..

அவன் எது கேட்டும் பதில் சொல்லும் மூட் இவளுக்கு இல்லை…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...

படிக்க தவறாதீர்கள்..

அதனால் “ எனக்கு ராகாவ பார்க்கனும் போல இருக்கு….போய்ட்டு வரட்டுமா?” என கேட்டு வைத்தாள்….. இவன் ப்ரெசென்ஸ்ஸ விட்டு வெளிய போகனும் என்கிற மனம் காரணம்…

இருந்த குழப்பம் வலிக்கு ராகாவையாவது பார்த்து பேசலாம் போல் இருக்கிறது ரியாவுக்கு….. வேற யார் இருக்கா இவட்ட பேச…

‘போய்ட்டு வரட்டுமா?” என்ற அவள் கேள்வியில் விவனுக்கு ரொம்பவுமே ஒரு மாதிரி தோணினாலும்….. இவன அவாய்ட் பண்றாதான….? ஆனாலும் அவளுக்கு ஒரு டைவர்ஷன் ரிலாக்ஸ்சேஷன் கண்டிப்பாக தேவை என இவனுக்கும் தெரிகிறது தானே…

“கண்டிப்பா நாளைக்கு போகலாம் ரியு….. இன்னைக்கு இன்விடேஷன் குடுத்துட்டு இருக்காங்கல்ல….. நாளைக்கு வர்றதா இப்ப சொல்லி வச்சுடு ராகாட்ட …. நானே ட்ராப் பண்ணிட்டு வந்துடுறேன்….தென் நீ சொல்றப்ப வந்து பிக் அப் செய்துகிறேன்….. அப்டியே அங்க இருந்து தடா கிளம்பிடுவோம்….” எதுவும் முரண்டு செய்ய முடியாதவாறு ஒரு திட்டம் சொன்னான் அவன்.

“ம்…” இவ கேட்டது இப்பவே போறேன் என்ற அர்த்தத்தில் தான்…..ஆனால் இன்விடேஷன் கொடுத்துட்டு இருப்பாங்க என அவன் சொல்லவும் அதை யோசித்தவள் இவன் சொன்னதற்கு  ஒத்துக் கொண்டாள்…

“ட்ரிப்க்கு என்ன பேக் செய்யனும்னு பாரு ரியு….எதுவும் ஷாப்பிங் செய்யனும்னாலும் இப்ப செய்துடுவோம்…. நீ டயர்ட்டா இல்லைனா இப்பவே ஷாப்பிங் போலாம்…….” இது இம்மீடியட் டைவர்ஷனுக்கான அவனது ஐடியா…

மறுப்பு சொல்லாமல் ரியாவும் கிளம்பினாள்….

ஆம் இருவரும் தடா போகத்தான் எண்ணினார்களே தவிர தென்காசி போக வேண்டும் என யோசிக்க கூட இல்லை….  விவனைப் பொறுத்தவரை கல்ப்ரிட் கூப்டுற இடத்துக்கு போய் வலிய ஆபத்தில்  மாட்டிக்கொள்ளவா என நினைப்பு….

ரியாவுக்கு பில்லி சூன்யம் மந்த்ரம் ஆவின்னு எதெல்லாமோ சொல்ற இடத்துக்கு போக கூடாது என முடிவு..…

காரில் வெளிபுறமே கவனமாக வேடிக்கைப் பார்த்தாள் ரியா… விவன் அவளிடம் பேச முயன்ற எதற்கும் அரை வார்த்தை ஓர் எழுத்து என்ற ரேஞ்சிலேயே பதில் சொன்னாள்…..இந்த தீ விஷயத்தில் இவள் அப்செட் என நினைத்துக் கொண்டான் அவன்….

அவளை cheer up செய்யவென முடிந்தவரை இவன் பேசிப் பார்க்க…. அவள் மௌன குழலே ம்…ம்ஹூம் என முக்கி விக்கி ஊத…. இதற்குள் ஃபீனிக்‌ஸ் மால் வந்து சேர்ந்திருந்தார்கள்….

கார் பார்க்கிங்கில் இவன் காரை நிறுத்தவும்  இறங்கிக் கொண்ட ரியா…….அவன் அதை ப்ராபர் பொஷிஷனில் நிறுத்தி இறங்கி வரும் முன்…..கடகடவென பார்க்கிங்கின் எந்த பக்கத்திற்கோ ஓடி இருந்தாள்….

அதுவும் அந்நேரம் பார்த்து லிஃப்ட் வர…… விவன் இவள் எங்கு போனாள் என பார்க்கிங்கில் தேடிக் கொண்டிருக்கும் போது……லிஃப்டில் போய்க் கொண்டிருந்தாள் ரியா….

ஆம் இவன விட்டுட்டுப் போய்ட்டு பொண்ணு….

அவன் இவளை எவ்வளவு கேவலமா ட்ரீட் பண்ணிட்டான் இன்னைக்கு…..எவ்வளவு  மோசமா நினச்சுட்டான் இவளப் பத்தி…. அதுக்கு பிறகு கூட இவள் மனம் அவனிடம் தழைந்து போகிறதென்றால் எப்படி இருக்கிறதாம் இவளுக்கு…

அடிமையாகவா போனாள் இவள் அவனுக்கு?

ஒரு வகையில் அப்படி அடைத்துக் கொண்டும் அழுத்தி துடித்துக் கொண்டும் வருகிறது….. ஆனால் கண்டிப்பாக அவன் பார்வையில் இருக்கும் வரைக்கும் இவளால நார்மலா இருக்கவே முடியல…. கோபத்த கூட காட்ட வர மாட்டேங்குதே….

அவன் பார்வையை விட்டு எங்காவது போகனும்……அதுக்குத்தான் இப்போது இவள்  வந்திருப்பதே…

மத்தபடி ஷாப்பிங் செய்ய எதுவும் தேவை இருப்பதாக அவளுக்கு நியாபகமும் இல்லை….இவள் கையில் பெரிதாய் பணமும் இல்லை….அவன் கையால எதையும் வாங்கிக் கொள்ள சம்மதம் துளி கூட இல்லை…

குழந்தை அவனோடது இல்லை…..இவளுக்கு மனைவின்ற எந்த உரிமையோ உறவோ அவன் மேல கிடையாது….. அப்றம் அவன் காச எதை வச்சு இவள் ஏத்துக்கவாம்? மொத்தமாகவே கூட எங்காவது ஓடி விடலாம் என தோன்றுகிறதுதான்……

பாழும் மனம் அவன லவ் பண்றதால அந்த முடிவுக்கு ஒத்துக்க மாட்டேங்குது….கூடவே குழந்தையோட எதிர்காலம்….

எதை எதையோ யோசித்தபடி லொங்கு லொங்கு என ஓடாத குறையாக மாலுக்குள் நடந்து கொண்டிருந்தாள் ரியா….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.