(Reading time: 39 - 78 minutes)

ப்பொழுதுதான் அப்படியாய் ஒரு சம்பவத்தை சந்திக்க நேரிட்டது ருயம்மா தேவி….இவள் பெண்மையை துடிக்க செய்தது அக் கொடூரம்…..

வழி பயணத்தில் மடல் வரைவதென்றால் எவ்வாறாம்? என்ற ஒரு சிந்தனையுடன் அவள் பயணித்துக் கொண்டிருக்க…ஓய்வுக்கென ஒதுங்கி நின்றது சாத்துக் கூட்டம்….

வெளியே  விழாமல் சாய்ந்து கொண்டிருந்தது அந்திப் பொழுது…..

 அக்காலமும் கோலமும் படு ரம்யமாய் பாவையின் பார்வைக்கும் பங்கமற்ற காதலுக்கும் தீனி போட….. வண்டியிலிருந்து வெளிப்பட்டு…..

அருகிலிருந்த மரகூட்டங்களுக்கு நடுவில் மடல் வரைய ஏதும் ஏற்ற இலை கிடைக்குமா என்றபடி தேடிப் போனாள் இவள்…

சற்றாய் வனத்திற்குள் உள்ளாய் போக….பார்வை படும் தூரத்தில் இவள் வந்த சாலையின் திசைக்கு எதிராக எங்கோ கிளம்பி எழும்பிக் கொண்டிருந்தது புகை…

ஓ…..அப்பகுதியில் ஏதேனும் கிராமமோ ஊரோ அமைந்திருக்குமாயிருக்கும்…. எண்ணியபடி இவள் தன் பணியை தொடர….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

இப்பொழுது ஓரிருவர் நடந்து வருவது இவளுக்கு புலனாகிறது…. சங்கூதலும் மணி ஒலியுமாய்….கேட்டறியா விஷயமெனினும் இவள் மனதிற்கே புரிகின்றது வருவது இறுதி ஊர்வலம் என…

சற்றாய் ஒரு துக்கம் இவளை வியாப்பிக்க….. அப்பொழுதுதான் கண்ணில் கிடைக்கிறது அக்காட்சி…

சொற்ப்ப மக்களே சேர்ந்து வந்த அக் கூட்டத்தில் கண்ணில் படுகிறாள் அப்பெண்…. இவளது வயதினளாய் இருப்பாளாய் இருக்கும்…. அத்தனை அத்தனையாய் சோர்வு…வலி விரக்தி வெறுமை என எல்லாம் அவள் வதனத்தில் தஞ்சம்…

எதேதோ கூக்குரலிடுகிறது ருயம்மாவின் உள்ளுணர்வில்….எதோ ஒன்று மிக மிகவும் சரியில்லை….

பெண்ணிற்கு இடு காட்டில் என்ன வேலை?

ருயம்மா அவர்களை நோக்கி எப்பொழுது முன்னேற துவங்கினாள் என அவளுக்கே தெரியாது…

இப்பொழுது யாரோ ஒருவர் ஒரு பச்சிளம் பால் மழலையை அப் பெண்ணிடம் கொடுக்க….. பிறந்த சில தினமிருக்குமோ…..அக் குழந்தையை அள்ளி அத்தனை அத்தனையாய் முத்தமிடுகிறாள் அவ்யுவதி…

அவளது பிள்ளை போலும்….

அருகிருந்தோரிடம் ஏதோ சொல்லி….அங்கிருந்து விலகி இவள் நிற்பது அறியாமல் இவளிருந்த புறமாய் வந்தமர்ந்து தன் மழலைக்கு தாய்பாலூட்டினாள் அவள்….

அதற்குள் அவள் கண்ணிலிருந்துதான் எத்தனை எத்தனை கண்ணீர்….

அது எப்பொழுதிலிருந்து தன் கண்ணிலிருந்தும் வடியலாயிற்றென ருயம்மாவிற்குத் தெரியாது…..

இவளது கணவன்தான் இறந்துவிட்டான் போலும்…… வசனமின்றி செயல் புரிகின்றது தாயுள்ளம் கொண்ட தளிர் இவளுக்கு…

பாண்டியத்தில் கைம்பெண் இடுகடு வருவாளோ? இப்படியாய் எண்ணி சமாதானபட எண்ணினாலும்…எதோ ஒன்று எல்லாவற்றையும் தாண்டி இவளுக்குள் வீறிடுகிறது..

இது..????

இவள் முழுதாய்  புரியும் முன்னம்….இன்னொரு திக்கில் இருந்த அது கண்ணில் படுகிறது…. வெகு அருகில் ருயம்மா சென்றிருந்ததால் இவளுக்கு அதைக் காண முடிகிறது இப்போது…

 ஒரு அகன்ற பள்ளம் பறித்து நடுவில் ஏற்கனவே வைத்திருக்கின்றனர் இறந்தவனின் சடலத்தை….

அருகில் ஒரு நெடுங்கம்பு…..மரக்கட்டைகள் சுற்றிலுமாய் அடுக்கப்படிருக்க………. இப்பொழுது இந்த இளம்பெண் சென்று அக் கம்பம் அருகில் அமர்ந்து கொள்ள….

இதற்கு முன் இவள் பார்த்ததில்லை என்றாலும் ருயம்மாவுக்கு புரிந்து விட்டது…..இதுதான் இவள் கேள்வியுற்றிருக்கும் சதி…. உடன்கட்டை ஏறுதல் எனும் கொடூரம்…..

வட தேசங்களில் மிகவும் அதிகம்…. இங்கு தென் ப்ராந்தியங்களில் இது இல்லை என சொல்ல முடியா வண்ணம் சொற்பமா நிகழத்தான் செய்கின்றது.... வட தேச கலாசார தாக்கம்… 

பராக்கிரமரின் தேசத்திலுமா இது நிகழ்ந்து கொண்டிருக்கிறது?

புரவியும் புள்ளிமானும் தோற்கும் வண்ணம் வேங்கையும் சிம்மமுமாய் இவள் அப்பெண்ணை நோக்கி பாய்ந்தோட….

அதற்குள் அமர்ந்திருந்த அப்பெண்ணின் மடியில் அவளது கணவனின் உயிரற்ற சடலத்தை சிலர் வைக்க….. வெடித்துக் கதறிய வண்ணம் அப் பெண் கண்களை மூடிக் கொள்ள……. சுற்றிலும் அடுக்கி இருந்த மரங்களின் மேல் மூட்டப்பட்டே விட்டது தீ….

வெறி பிடித்தவள் போல் ஓடிய ருயம்மாவோ தீயைக் கூட சட்டை செய்யவில்லை….. பால் பருகும் பச்சிளம் மழலையும் அதற்கு அமுதூட்டிய அவ்வன்னையின் கோலமே அவள் கண்ணிற்குள் நிற்க…

எரிய துவங்கிய அக்கினிக்குள் யாரும் எதிரபாரா கணம் பாய்ந்தாள்

அப்பெண்ணை இரண்டு கையோடு பற்றி இழுத்துக்கொண்டு வெளியே வந்திருந்தாள்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.