(Reading time: 39 - 78 minutes)

ங்கே விவனுக்கோ சில நொடிகள் நடப்பதை நம்ப கூட முடியவில்லை…… அவசர அவசரமாக சுற்றி சுற்றிப் பார்த்தவனுக்கு அவள் அவனை வேண்டும் என்றே விட்டு விட்டு போய்விட்டது புரிகிறது…

ஆனா ஏன்? இவ்ளவு நேரம் என் மேலதான் கோபமா? ஆனா கோபம் வர்ற மாதிரி நான் என்ன…. செய்தேன் என நினைத்து முடிக்கும் முன்…..

அவள் “ப்ளீஸ் ப்ளீஸ்பா என்ன விட்டுட்டுப் போய்டாதீங்க” என கெஞ்சியபடி இவன் மீது வந்து அப்பியது நியாபகத்திற்கு வந்து விட்டது…..இவன் அவளை விலக்கி நிறுத்தியதும் கூட

 இது எதுவும் ஃஸ்பிரிட் வர்க்னு நினச்சு பயந்துட்டா போல…….அந் நேரம் விட்டுட்டுப் போனதுக்கு கோபம் போல….என ஓரளவு விஷயத்தை புரிந்து கொண்டாலும் முழு ப்ரச்சனை அவனுக்கு தெரியவில்லை…..

‘அச்சோ இதுக்காடி இவ்ளவு அப்செட் ஆகிட்ட? ஏய் ஜி கே என்னைப் பத்தின ஜி கே உனக்கு ரொம்ப கம்மியா இருக்கே…. நான் ஏன் உன்னைய வேணும்னு விட்டுட்டுப் போகப் போறேன்…..அதுவும் நீ அப்டி ஹக் பண்ணி கரண்ட் ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்றப்ப’ என மானசீகமாக அவளிடம் பேசியபடி மொபைலில் அவள் எண்ணை அழைத்தான்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

அவன் எதிர் பார்த்தது போலவே அதை அடுத்த நொடி கட் பண்ணினாள் ரியா…

‘சரி ஜிலேபி கெண்ட செம்ம ஃபார்ம்ல இருக்குது…… விவன்க்கு இன்னைக்கு oven டே…..’  என நிலமையை உணர்ந்தவன்

‘குட்டிப் பொண்ணு எவ்ளவு கோபம்னாலும் நேர்ல நல்லா சண்டை போடுவியாம்….. தனியா கூட்டிட்டுப் போய் நாலு சாத்து கூட சாத்துவியாம்….. எங்க இருக்கன்னு சொல்லு வந்து வாங்கிக்கிறேன்…’ என முதல் சரண்டர் மெசேஜ்…

அடுத்ததாய்

‘அப்றம் கூட அம்சமா ஐ லவ் யூ தான் சொல்வேன் பாரேன்.. test and see’ என செகண்ட் சகலகலா  சரண்டர் மெசஜ் அனுப்பி வைத்தான்…

சில நொடிகள் நரகத்தில் நிற்பது போல் அவள் ரிப்ளைக்காக காத்திருந்தவன்…..ஒவ்வொரு ஃப்ளோராய் தேடுவது  என்ற முடிவுக்கு வந்தான்….

அங்கு ரியாவோ மெசேஜ் யாரிடம் இருந்து வருகிறது என கூட தெரிந்து கொள்ள விரும்பவில்லை……இவன் வேலையாத்தான் இருக்கும் என்பது அவளுக்கு தெரியுமே….

‘இவன் கூப்டுட்டா இவ ஓடிடுவான்னு நினைப்பு போல… பெரிய இவன்’ மனதிற்குள் அவனிடம் கொம்பு சீவியபடி கடகடவென கால் போன திசையில் நடந்து கொண்டிருந்தவள்….திடீரென தன் கைப் பற்றி யாரோ இழுப்பதை உணர்ந்து….. வந்த வேகத்தில் நிற்க முடியாமல் தடுமாறி நின்றாள்..…

‘சே இதுக்குள்ள கண்டு பிடிச்சுட்டானா இவன்…’ என்ற நினைப்போடு…

“கைய விடுங்க…பப்ளிக் ப்ளேஸ்…..கத்தி மாட்டி விட்டுடுவேன்….” அடி குரலில் உறுமிய படி இவள் திரும்ப அங்கு நின்றது செபின்.

ஹாய் ப்ரியா….” என்றவன் முகத்தில் கொஞ்சம் கூட கில்டி கான்ஷியஸ் இல்லை…..கூல் ப்ளசன்ட் ஸ்மைல் மட்டுமே……

 “கூப்டுட்டே வந்தேன்….நீ தான் கவனிக்கல…அந்த பொறுக்கி விவன்ட்ட இருந்து தப்பிச்சு ஓடுற கவனத்தில இருந்துட்ட….. உன்னை அடச்சு வச்சு டார்ச்சர் செய்றான்னு புரியுது…. “ அவன் சொல்லிக் கொண்டே போக….. கார் பார்க்கிங்கிலிருந்து இவள் பின்னால் வந்திருந்தான் அவன்…. இதற்குள் அவன் பிடியிலிருந்து கையை உருவி இருந்த ரியா அவனை வினோத ஜந்து போல பார்த்தாள்..

‘இவன் என்ன லூசா? கன்னா பின்னானு அவனா கற்பனை செய்து உளர்றான்?’

அடுத்தும் இவள் எதுவும் சொல்ல கூட நேரம் தராமல்… I know everything அப்ரோச்சில்

“அவன்ட்ட இருந்து  நீ தப்பிக்க நான் ஹெல்ப் பண்றேன் ப்ரியா… எனக்கு தெரிஞ்ச கேர்ள் நீ…. இன் ஃபேக்ட் என் ஃபியான்சி நீ…. நான் அப்பவே இதை செய்துறுக்கனும்…பட் இந்த ப்ளான் strike ஆகல… என் பார்ட்னர் இப்போ தான் இந்த ஐடியா குடுத்தான்…its true நான் உன்னை எப்டி கான்டாக்ட் பண்றதுன்னு உன் ஃப்ரெண்ட் ராகாவ கேட்கிறதா இருந்தேன்… see நீயே வந்துட்ட…a positive oman…” அவன் ஒரு வித ஐஸ் வைக்கும் டோனில், கூடவே நான் உனக்கு பிச்சை போடுறேன்னு சத்தமில்லாமல் சொல்லும் ஒரு மறைமுக தொனியில் பேச

ரியாவுக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என  பொறுமையாக கேட்க தோன்றுகிறது…. இவன் எதோ ஐடியால முன்னால மேரேஜ்  ப்ளான் செய்துறுக்கான்..…இப்பவும் நெக்‌ஸ்ட் ப்ளானோட வந்திருக்கான் போல…

இவனுக்கு என்ன வேணும்?

ஒரு வேளை இவன் தான் இவ ப்ரச்சனையோட மையப் புள்ளியோ?

அவனை என்ன என்பது போல் பார்த்தாள்.

ஒரு கணம் சுற்றிப் பார்த்துக் கொண்டவன்… ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு மூலையைப்  பார்த்து நடந்தான்….. “வா தனியா பேசலாம் ப்ரியா…”

ஒரு ஓரமாய் போய் அவன் நிற்க…அடுத்தாய் இவள் நிற்க..

“look ப்ரியா…. இங்க இதெல்லாம் எப்டி புரிஞ்சுப்பாங்கன்னு இல்ல…. இன்ஃபேக்ட் அங்கயும் இதை நிறைய பேர் சரின்னு சொல்றதுல்ல…. ஆனா இது தப்பு இல்ல….அதோட நீ இதை புரிஞ்சுப்பன்னு இப்ப நம்புறேன்….” என பீடிகை போட்ட செபின்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.