(Reading time: 39 - 78 minutes)

வளுக்கு அடுத்தாய் வந்திருந்தவர் புறம் திரும்பி அவள் செய்ய முயன்ற இந்த செயலில்

எதிரும் புதிருமாய் நின்றிருந்த மானகவசர் கண்களில் ஒரு சிலீர் காற்றும் சிறு மின்னலும்… சற்றாய் குனிந்து இப்போது கை நீட்டினார்….

அதன் நிமித்தம் இவளும் குனிய….. இருவரின் வதனமும் மிக மிக அண்மையில் காணக் கிடைக்க….. நிலவொளி மாத்திரம் சிந்தும் அம் மனோவசிய சூழலில்…. மானகவசர் கண்கள் இவளை கண்ட  வகையில்….

எத்தனை ஆழ காதலிருக்கிறதாம் அதில்????!!!!!

ருயம்மா தேவிக்கு தீவிரமாய் மனக்கண்ணில் உதிக்கிறது அவரிடம் இவள் என்னை பாண்டிய தேசம் அழைத்து செல்லுங்கள் என வேண்டிக் கொண்ட காட்சி….

அப்பொழுது அவர் கண்களில் கண்டது காதலின்றி என்னதாம்?

சர சரவென புதிர் அவிழ்வது போல் அனைத்து சூழல்களிலும் மானகவசரிடம் கசிந்தும் கவிழ்ந்தும் கிடந்த இவள் பாலான காதல் இவளுக்கு கருத்தில் புலப்பட…

என்னை நான் என அறிந்தேதான் பாண்டிய தேசம் அழைத்து வந்திருக்கிறார் இவர்…அதுவும் அத்தனை அத்தனை காதலுடன் என்ற புரிதல் உண்டாகிறது பெண் பாவைக்கு…

வெடித்து புறப்பாடு செய்கின்றது புது வித தாண்டவம் ஒன்று இவளது உள்ளான அறைகளில்…..அதன் சாயை இவள் வதனம் தொட்ட காலம்…

மானகவசர் இவள் முக பாவத்தில் முகிழ்ந்த முக்கிய மாற்றம் உணர்ந்து….காரணம் விசாரிக்கவென ஏன்? என்பது போல் புருவம் உயர்த்திய மணிதிவாலை

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பூஜா பாண்டியனின் "நானும் அங்கே உன்னோடு" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“ஏதேது மைத்துனரின் கவனிப்பு இன்று அமர்க்களப்படுகிறது…?” என்ற வரதுங்கரின் வினா இவள் செவியில் விழுகிறது…. பராக்கிரமனுக்கு அடுத்து தற்போது வந்து நின்ற வரதுங்கன் இவள் பார்வை வட்டத்துக்குள்ளும் வருகிறான்…

இருண்ட வானத்தில் சட்டென முளைக்கும் ஒற்றை வெள்ளி போல் பட்டென தோன்றுகிறது மற்றுமொரு புரிதல் காகதீய இளவரசிக்கு……

மானகவசரும் வரதுங்கரும் அடிப்படையில் நல்லவர்களே…ஒருவர் மீது ஒருவருக்கு ஏராள பற்றும் பாசமும் குவிந்தும் கிடக்கின்றனதான்…..ஆயினும் சில வேறுபாடுகளும் உள்ளன.

 சூழலை வளைத்து வசதி செய்து கொள்ளும் சற்று புரட்சிகரமான, போரளித்துவமுள்ள பெண்ணை மணவாட்டியாக எதிர் பார்க்கிறார் மானகசவசர்….

வரதுங்கருக்கோ மும்மி போன்று வரும் சூழலுக்குள் வளைந்தமைந்து எச்சூழலிலும் மகிழ்வுறத் தெரியும் பெண் மீது வாஞ்சை….

இந்த வித்யாசம்…….இதன் நிமித்தமே மானகவசர் ருயம்மா குறித்து தனக்கு தெரியும் என வெளிப்படையாக அறிவித்திருக்க மாட்டாராய் இருக்கும்…. வரதுங்கர்தான் எப்போதும் பாதுகாப்பின் நிமித்தம் பக்கத்திலேயே இருக்கிறாரே…..

வரதுங்கருக்கு நான் பெற்றவர்களுக்கும் கொற்றவனுக்கும் தெரியாது, இவ்வாறு நாடு தாண்டி  வந்த விஷயம் ஏற்புடையதாய் தோன்றும் வாய்ப்பு குறைவு….

மானகவசருக்கோ இவள் நடவடிக்கைகள் மீது தாழ்வான பார்வை இல்லை என்றாலும்….தன் மனைவியாக வர இருப்பவளை தன் சகோதரன் குறையாக எண்ணிவிடக் கூடாதென்ற எண்ணம்…

அத்தோடு தேச மகராணியின் மீது மற்ற அனைவருக்கும் கண மரியாதை இருப்பது ஆட்சி நிர்வாகத்தில் முக்கிய தேவையும் கூட…..

ஆக இவளது ரகசியம் மனகவசருக்கு தெரிந்தே இருந்தாலும்….அதை வெளியிட்டிருக்க மாட்டாராய் இருக்கும்….. இவள் இப்போது சமீப காலமாய் மனம்வருந்த துவங்கவும்….மானகவசர் மறைமுகமாக தனக்கு இவள் மீது எவ்வித மனதாங்கலும் இல்லை…முழு காதலே  என தெரியப் படுத்த முயல்கிறார் போலும்…

இந்த வகையில் புரிதல் உண்டாகவும்

உண்டாகிய செந்நிலை வெட்கத்தையெல்லாம் உதடுகளின் ஓரமாய் ஒழித்து வைத்து…. ஒரே ஒரு கீற்றாய் மட்டும் செவ்விழியில் அதை படரவிட்டு….. புருவம் உயர்த்தி வினா அம்பு எய்த தன்னவனைப் பார்த்து ஒன்றுமில்லை என்பது போல் ஒரு தலையாட்டலுடன் அந்நிகழ்ச்சிக்கு முற்றிட்டாள்…

அதன் பின் ஒருவித புன்னகையுடனே இரவைக் கழித்தாள் ருயம்மா தேவி…

அவள் இதயத்தில் தீராத சாந்தி நிலவிக் கிடந்தது….. விவாகத்திற்குப் பின்னே தன்னவனிடம் மனம் விட்டு பேசிக் கொள்ளலாம் என முடிவு செய்து கொண்டாள் அவள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.