(Reading time: 39 - 78 minutes)

ப்பெண்ணை விசாரித்தான் மானகவசன்…. பாண்டியத்தில் இது அரிதிலும் அரிதான செயல்…. ஊர் மக்களே இவ்வாறு நடை பெற போவதாக தகவல் அறிந்தால் தேடிசெ சென்று சண்டையிட்டு தடுத்துவிடும் வழக்கம் உண்டு….

ஆக அப்பெண்ணின் விருப்பம் இல்லாமல் இது இத்தனை தூரம் வந்திருக்க இயலாது என்பது பராக்கிரமரின் எண்ணம்…..

அவளும் அதை ஆமோதித்தாள்… ஆனால் அவளது கதைதான் கண்ணீரை வரவழைத்தது……

“வேந்தே தங்களுக்கு இது  தெரிந்திருக்கும் என்றே எண்ணுகின்றேன்…. எங்கள் சமூகத்தவர்களில் இப்படி ஒரு நம்பிக்கை நிலவுகின்றது….

ஒரு பெண் விதவை ஆகிறாளென்றால் அக்குடும்பத்தின் மீதிருக்கும் சாபமே அதற்கு காரணமாயிருக்கும்….. அச் சாபம் அக் குடும்ப மக்களை இனியும் பாதிக்காமல் இருக்க…..அப் பெண்ணிற்கு பெண் குழந்தைகள் இருந்தால் அதில் ஒன்றை தேவதாசியாக்கும் படி தேவதாசிகளுக்கு தத்து கொடுத்துவிட வேண்டுமாம்.

தேவதாசி முறையை புண்ணியம் என்றும் கலாச்சாரம் என்றும் அங்கீகரிக்கும், சிலாகிக்கும், கொண்டாடும் மக்கள் இருக்கிறார்கள்தான்….ஆனால் என்னால் அவ்வாறு எண்ணவோ ஏற்கவோ இயலவில்லையே…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா Vயின் "உன் நேசமதே.. என் சுவாசமாய்..!!" - காதல் கலந்த குடும்பத் தொடர்

படிக்க தவறாதீர்கள்..

இவ்வளவு ஏன் என் மூத்த சகோதரியை இவ்வாறுதான் ஏழாம் அகவையில் தேவதாசியக்க தாசிகளிடம் கொடுத்துவிட்டார் என் தந்தை…. விட்டு வந்த சில தினங்களில் .இரண்டு முறை அங்கிருந்து அவள் தப்பி ஓடிவந்து நானே பார்த்திருக்கிறேன்…… என் தந்தையே அவளை மீண்டுமாய் அங்கு கொண்டு போய்விட்டுவிட்டார்….

அதுவும் முதல் முறை வந்து போனபின்பு…அவள் ஓடக் கூடாதென…உள்ளங்காலில் சூட்டு கோலால் இழுத்திருப்பதையும் கண்டேன்…….

வேறு இடத்தில் சூடிட்டால் அவளது அழகு கெட்டுவிடுமாம்…. அடுத்து அவள் வரவுமில்லை…அவள் பற்றி எதுவும் தெரியவுமில்லை……

இன்று நான் இரு பெண் குழந்தைகளுக்கு தாய்…இரண்டாமவள் பிறந்து பதினேழாம் தினம் இன்று….அவளை யார் இனி விட்டு வைப்பார்கள்? நிச்சயமாய் தாசியாக்கி விடுவார்கள்…. அதையெல்லாம் அனுபவிக்க என் இதயத்தில் வலுவில்லை வேந்தே…..அதற்கு இதுவே மேல் என்று தோன்றிவிட்டது…” ஒருவித விரக்தியும் தன் முடிவில் தவறேதும் இல்லை என்ற வகையிலும் அவள் பேச…

ருயம்மாவிற்கு வேந்தன் என்ன வகை சமூக மாற்றங்களை அவனது நோக்கம் என பேசினான் என தெளிவாகவே  புரிகின்றது…..

அப் பெண்ணிற்கு அரண்மனையில் உதவியாளாக பணி கொடுத்து…..அவள் குழந்தைகளுடன் அரண்மனையில் தங்கவும் வழி செய்து கொடுத்து அப்ரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தான் மானகவசன்….

மெல்ல கண் திறந்து பார்த்த ரியாவுக்கு ரொம்ப ஸ்லோவாதான் அவள் என்ன  சிட்டுவேஷன்ல தூங்க போனாள் என்பதே நியாபகத்துக்கு வர…. திரும்பி விவனைப் பார்த்தாள்….அவன் அப்படியேதான் இன்னும் இருந்தான்..

அமைதியாய்…படு படு அமைதியாய்…

‘சே ரொம்ப ஓவரா பேசிட்டனோ…. ?’ இவளுக்கு முதல் தாட் இதுதான்…. யாருக்கா இருந்தாலும் இது ஹர்ட் ஆகும்தானே…..அடுத்தும் மைன்ட் அந்த பக்கமே போக…

அவன் என்ன செய்தான்றத மறந்துட்டு…திரும்பவும் அவன் கால்லயே போய் விழு…என இப்போது அவள் தன்மானம் சதக் என குத்தியது…

இரெண்டையும் நினைக்க வேண்டாம் என்ற முடிவில் அட்டன்ஷன் டைவர்ஷனுக்காக அவள் கையிலிருந்த மொபைலை குடைந்தவளுக்கு…. அவனது இரண்டாவது மெசஜ் முதலில் படுகிறது…..

‘அப்றம் கூட அம்சமா ஐ லவ் யூ தான் சொல்வேன் பாரேன்.. test and see’ அனுப்பி இருக்கிறது இவன் தானா என திரும்ப திரும்ப கன்ஃபார்ம் செய்து கொண்ட ரிய முதல் மெசேஜையும் படிக்க….

கண்டிப்பா இந்த செபினை பார்க்கும் முன்னால அனுப்பின மெசேஜ் என்பது வேறு சேர்ந்து புரிய…..

எதையும் உணர முடியா செம டென்ஷன் நிலைக்கு போயிருந்தாள் அவள்…

கடகடவென டே ஒன்ல இருந்து எல்லா சீனும் இப்ப ரிடெலிகாஸ்ட் ஆக… நான்தான் மாத்தி மாத்தி புரிஞ்சுகிட்டனா….என இவள் புரிந்து முடிக்கும் போது…

வீட்டு வாசலில் நின்றிருந்த காரின் கதவை திறந்து கொண்டு இறங்கிய விவன்….. நேராக இவள் புறம் வந்து கதவை திறந்து அவளை கைப் பற்றி அழைத்துப் போனான்….

இவ அவன்ட்ட என்ன சொல்லி எப்டி பேசி அவனுக்கு புரிய வைக்கனும் இவ நிலமைய…???

கிடுகிடுவென ஒரு நடுக்கம்….அது அவள் உணர்வின் உச்சத்தால் உண்டாவது…..

ஐயோ அவன ஹர்ட் பண்ணிட்டனே என தவிப்பு….அது காதலின் வியாதி….

என்ன செய்யன்னு தெரியலையே….. அது அவன் மௌன மூஞ்சு பார்க்கிறதால வர்ற கான்சிக்யூயன்ஸ்….

இப்டி எல்லாத்தையும் இவள் இழுத்துப்போட்டு அனுபவிக்க… நேர தன்னோட ரூம்க்கு போன விவனோ….இவளை இழுத்து தன் மீது போட்டான்…..

முழு முதலாய் அணைத்திருந்தான்….

இதுவரைக்கும் இவள் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்த எல்லாம்…க்..யூஊஊம்……டேஷ்ஷ்…… காணாம போச்சே….. அத்தனை அத்தனை நிம்மதி… calm…. Quietness…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.