(Reading time: 39 - 78 minutes)

ப்ப என்ன உங்க அடிமைய வந்து பிடிச்சாச்சுதானே…..இந்தாங்க கழுத்த பிடிச்சு இழுத்துட்டு போங்க… ” ரியாவுக்கு இருந்த எத்தனையோ உணர்வில் எதையெல்லாமோ கொட்டி அவள் குமுற….கழுத்தை வேறு இவன் புறமாய் நீட்ட…

முழு மொத்தமும் ஸ்தம்பித்துப் போய் நின்றான் விவன்…. முழு நொடி அப்படியே கடந்து மடிந்தது…

கண் மூடி…. மூச்சிழுத்து……இரு கைகளையும் குவித்து தன் முகத்தை ஒரு கணம் தடவி…. தன்னை சமனப் படுத்த முயன்ற விவன்…அடுத்த  செகன்ட்  அவள் கையைப் பற்றிய படி நடந்து கொண்டிருந்தான்…

ரியா அதற்கு எந்த மறுப்பும் காட்டவில்லை…. அவன் இழுப்புக்குட்பட்டு அவனோடு அவள்…..இவனும் எதுவும் பேசவில்லை..

காரிலும் முற்றிலும் மௌனம்…. ஓரிரு முறை அவனை திரும்பிப் பார்த்துக் கொண்ட ரியா அவன் இவள் புறம் திரும்பவே இல்லை எனவும் அடுத்து இவளும் அவன் புறம் திரும்பவில்லை….

கார் சீட்டில் சாய்ந்து கண் மூடிக் கொண்டாள்….. அங்கு….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "சக்ர வியூகம்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

மானகவசர் முன் மண்டியிட்டிருந்த ருயம்மாவின் காதில் விழுகிறது சரக் சரக்கெனும் காலடி ஓசை…..தனிமையில் பாண்டிய வேந்தன் இவளை சந்திப்பதே இல்லை என கூறிவிட இயலும்…. அந்த அளவிற்கு இவர்கள் சம்பாஷணைகள் செவிக்கு எட்டா தொலைவு எனினும் எப்போதும் பார்வை படும் தொலைவில்தான் இருப்பார் வரதுங்கர்…. குறையாக சுட்ட இயலா வண்ணம் எதோ தேவையான பணி போல எதாகிலும் செய்து கொண்டிருப்பார்….

முதலில் அது புரியவில்லை எனினும்….அந்நிய நாட்டினனுடன் தன் தமையனை தனியே விட மனதின்றி வரதுங்கன் ஏறெடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை இதுவென அவள் பின்பு உணர்ந்து கொண்டாள்…

மற்ற வகையில் ஊர் காவல் ஏறுதழுவல் என மற்ற மக்களும் உடன் இருக்கும் சூழலில் மாத்திரமே வரதுங்கர் இவர்களை விட்டு விலகுவது உண்டு… ஒருவேளை அங்கும் இவள் அறியாமல் அவர் பின் தொடர்ந்தும் இருக்கலாம்…

சட்டென இது உறைக்க….சரேலென எழுந்து கொண்டாள் ருயம்மா தேவி… அதே கணம் அக் காலடி ஓசையில்  கண் விழித்த மானகவசர் தன் முன் மண்டியிட்டு எழும் இவள் செயலை கண்ணுற்றாரா இல்லையா என ருயம்மாவுக்கு அனுமானிக்க இயலவில்லை…

அதைக் குறித்து அடுத்து எதுவும் பேசும் முன்னம் அங்கு வரதுங்கர் வந்து நிற்க….எதோ ராஜ்ய காரியம் என பராக்கிரமர் சற்று நேரத்திற்கெல்லாம் தன் தம்பியானவன் உடன் கிளம்பிவிட்டார்….

மேற்கொண்டு அத் தினம் ருயம்மாவைப் பொறுத்தமட்டில் எவ்வித காரியங்களும் இன்றி வெறுமையாகவே கழிந்தது….

மீண்டுமாய் மானகவசரை இரவு போஜன வேளையில்தான் காணும் வாய்ப்பு கிட்டியது….அத்தனை நபர்கள் சூழ்ந்திருக்க இவள் என்னவென்று சொல்வாளாம் தன் மனதை அவரிடம்…?

ஆக கூடுமான மட்டும் தன் செயல்களின் மூலம் தன் மன இனிமையை அவருக்கு உணர்த்த முயன்றாள் அவள்…

போஜன இருக்கை அவருக்கு அடுத்தது தானே இவளது….. ஆக  கவன கவனமாய் அவருக்கு தேவையானதை கவனித்து பரிமாறிக் கொண்டிருந்தாள் அவ்வப்போது…. இத்தனை நாளில் ஓரளவு அவரது போஜன விருப்பு வெறுப்புகள் இவளுக்கு தெரியுமாதலால் இதில் அவள் தடுமாறவும் நேரிடவில்லை…

அத்தோடு அவருக்கு அருகில் இருந்த சூழலைப் பயன்படுத்தி அவரது செவிக்கருகில் “மனம் வருத்தியதற்கு மன்னித்து விடுங்கள்…” என்று மட்டும் சிறு குரலில் முனங்கி வைத்தாள்…

தப்பி தவறி யார் செவியில் விழுந்தாலும் கூட பெரிதாய் தவறாக தோன்றாது என்பது இவளது எண்ணம்…

அவ்வாறு இவள் உரைக்கவும்  இவள் வதன புறமாய் திரும்பிய மானகவசர் கண்களால் மறுப்பாக மட்டும் ஒரு சைகை செய்தார்…. அவர் இதழில் மட்டுமல்ல முழு முகத்திலுமாய் வியாப்பித்திருந்தது இளநகை…

அம் மறுப்பின் பொருள் என்ன..? மனம் வருத்தவில்லை என்கிறாரா? அல்லது மன்னிப்பு தேவை இல்லை என்கிறாரா என்று கூட இவளுக்கு விளங்கிக் கொள்ள இயலவில்லை எனினும், அதன் பின் ஒரு வகையில் சற்றாய் இலகுவாகவே உணர்ந்தாள் ருயம்மா….

இருப்பினும் ஏற்ற சூழலில்  தன் மனதை தெரிவித்து விடுவது என்றே அப்பொழுதுக்கு நினைந்திருந்தாள்..

இதில் போஜன வேளை முடிய…. பாண்டிய உணவு முறையில் உணவருந்திய தாலாவில் கை கழுவும் வழக்கம் இல்லை என்பதால்….அதற்கான ஸ்தலத்திற்கு மானகவசர் செல்ல….அவரோடு இணைந்து எழுந்து கொண்ட ருயம்மா அவருக்கும் சற்று முன்பாக சென்று தன் கைகளை அலம்பிவிட்டு….

அங்கிருந்த செப்பு லோட்டாவில் அவருக்கு நீர் வார்க்க முயன்றாள்……

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.