(Reading time: 39 - 78 minutes)

I’m a gay….அதாவது I’m secretly married to a man… என் அம்மாக்கு இதெல்லாம் புரிய வைக்க முடியாது ப்ரியா… ஒரே பிடிவாதம் நான் ஒரு இன்டியன் கேள மேரேஜ் செய்தாகனும்னு….thats  why I arranged our wedding…அப்ப உன்ட்ட சொன்னா புரிஞ்சுக்க மாட்ட….பட் லேட்டர் அக்செப்ட் செய்துப்பன்னு நினச்சேன்…. பூர்வி வீட்ல உன்னைப் பார்க்கப்ப அப்டிதான் தோணிச்சு….simple innocent girlநு….திடீர்னு வெட்டிங் ரெஜிஸ்ட்டர்ட்…உன் ப்ரெக்னென்சி  இப்படி எல்லாம் தெரிய வரவும் நான் ஷாக்ல பயந்துட்டேன்…. எனக்கு எதுவும் இஷ்யூ ஆகுமோன்னு ஒரு ஃபியர்… சோ கிளம்பி போய்ட்டேன்..

ஆனா அப்றம் தான் என் பார்ட்னர் சொன்னான்… innocent girl and she is pregnant … அவள மேரேஜ் செய்து உன் அம்மா கூட வச்சுடு….அம்மா ஹேப்பி ஆகிடுவங்க….குழந்தைய உன் குழந்தைன்னு சொல்லிடு… அவங்க அடுத்து உன்னை எதுவும் கேட்க போறதே இல்ல…

இந்த கேர்ள் அண்ட் பேபிக்கும் இது சோசியல் செக்யூரிட்டி…..சோ அவளும் உன்ட்ட வேற மேரிட்டல் ப்ளஷர்……வைஃப்ன்ற ரிலேஷன்ஷிப் எதையும் எதிர் பார்க்க கூடாதுன்னா ஒத்துப்பா….. நம்மள டிஸ்டர்ப் செய்ய கூடாது……உன் அம்மாட்டயோ இல்ல யார்ட்டயோ நம்மளைப்பத்தி சொல்ல கூடாதுன்னா அக்சப்ட் செய்துப்பா….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்..

அவளுக்கு நீ லைஃப் கொடுத்துறுக்கியே…  லைஃப் இன் US…வித் டீசண்ட் ஸ்டே அண்ட் ஃபூட்….எல்லாம் நல்லா இருக்கும்னு சொல்றான் அவன்……லீகல் சைடை சமாளிச்சிடலாமாம்….ஒரு H1B visa உனக்கு வழி பண்ணிடலாம்….அங்க அம்மா முன்னால மட்டும் மேரேஜ்… லீகலி செய்துக்க வேண்டாம்னு ப்ளான்…..

எனக்கு இது பெஸ்ட் ப்ளானா படுது…. பாரு என் பார்ட்னரும் இன்டியன்தான்….நம்ம கல்சரை, உன் நிலையை அவனும் நல்லாவே புரிஞ்சு வச்சுருக்கான்…..சோ ஒரு நாளும் வி’ல் நாட் ஹார்ம் யூ…. அதோட அந்த பொறுக்கி விவன் மாதிரி இல்ல நான்…… என் விரல் நகம் கூட உன் மேல படாது…..” அவன் விவரித்துக் கொண்டே போக

ஆயிரம் டன் அருவருப்பும்…..அதோட அத்தனை வலியுமாய்….. ஆமா பார்க்கும் எல்லோருக்கும் இவள இழுக்க நினச்ச டைரக்க்ஷன்க்கு இழுக்கலாம்னு தோணி இருக்கே…. இவள் கொதித்தேறும் கோபமுடன் நிமிர்ந்தாள்.

அவனோ அதற்குள்… “நான் என் அம்மா நிம்மதிக்காக கேட்கிறேன் ப்ரியா…..I know நீ அக்செப்ட் செய்துப்ப… lets get married” என்றபடி இவள் கையை இரு கையாலும் பற்ற வந்தவன்…

“ஆ..” என்றபடி அப்படியே ஒரு அடி பின்னாலும் ஒரு அடி உயரத்திலுமாய் நகர…..பின்னே இவள் இங்க நிற்பதைப் பார்த்து வந்திருந்த விவன் காதில் கான்வர்சேஷனின் பின் பார்ட் தெளிவா விழுந்திருந்ததே….

செபின் காலரோடு பிடித்து விவன் அவனை சுவரோடு மோதி தூக்கிய வேகத்தில்…. தரையிலிருந்து அரை அடி உயரத்தில் அவன் கால்கள் ஆட…. தன் கைகளால் தன் கழுத்தை விடுவித்துக் கொள்ள போராடிக் கொண்டிருந்தான் அவன்…

பேச நினைத்தாலும் அவனால் பேச முடிகிறதாமா…?

“நாயே உனக்கு எவ்ளவு திமிர்டா….. அவள என்னன்னு  நினச்ச நீ….”விவனுக்கோ கோபம் உச்சத்தில் கொதிக்க…கண் சிவக்க….மொத்த அவனும் தகிக்க….

“என்ன தைரியம் இருந்தா என் வைஃப்ட்ட ப்ரபோஸ் செய்வ…” இன்னுமாய் கர்ஜித்தான்.

ரியாவுக்கோ மனம் கண் எல்லாம் சட சடவென அங்கு கலெக்ட் ஆகும் கூட்டத்தின் மீது போகிறது…

அங்குமிங்குமாய் நடந்தவர்கள் சட் சட்டென நின்று இவர்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தானே…

இவளோட கதை இவங்க எல்லோருக்கும் தெரியனுமாமா?

‘விட்டுட்டு வாங்க விவன்…. நம்ம வீட்டுக்கு போவோம்….” சின்ன குரலில் பல்லை கடித்தபடி இவள் முனங்க…..

இரண்டு கையெடுத்து கும்பிட்டான் செபின்…. அவனுக்கு ப்ரியாவுடன் விவனுக்கு மேரேஜ் ஆகி இருப்பதே தெரியாது….. பார்க்கிங்கில் அவன் பார்த்த காட்சி விவனிடமிருந்து ரியா ஓடி வருகிறாள் என்பதே….

நம்ம வீடு என ப்ரியா சொன்ன பிறகுதான் அவனுக்கு விஷயம் ஓரளவு புரிகிறது…

செபின் இவள் பேசியதை கவனித்தான் தான்…

ஆனால் விவனோ அதை சட்டை செய்ததாகவே இல்லை….. செபின் கழுத்தை பிடித்திருந்த அவன் பிடி இன்னுமாய் இறுகத்தான் செய்கிறது….. விழி பிதுங்கியது செபினுக்கு….

இப்போது ரியாவோ….. “விடுங்க விவன் விடுங்க….” என்றபடி விவனின் அடுத்த கை  பற்றி இழுத்தாள்….. அவனோ இருந்த கோபத்தில் இவள் கையை வெடுக்கென  உருவிக் கொண்டு அந்த செபினுக்கு மூக்கில் அடுத்த குத்தை களமிறக்க படு ஃபாஸ்ட்டாய் கை ஓங்க….

அவ்வளவுதான் ரியா உக்கிரத்தின் உச்சத்தை ஒரே மூச்சில் அடைந்தாள்…. எப்ப தொட்டாலும் வெடுக்கென உருவிக்கிறான் தானே…. முந்தைய விலகல்கள் எல்லாம் மூச்சுமுட்ட நியாபகம் வர….

விடுங்கன்னு சொல்றேன்ல….. உங்களுக்கும் அவனுக்கும் என்ன பெரிய வித்யாசம்…. ரொம்ப ஓவராத்தான் ஆடுறீங்க…” அப்படி ஒரு குரலில் அப்படி ஒரு வார்த்தை ரியாவிடமிருந்து விவன்  எதிர்பார்த்திருப்பானாமா என்ன?

முழு ஷாக்கில் மொத்தமாய் ஒன்னும் புரியாமல் தலையை மட்டும் திருப்பி அவளைப் பார்த்தான்….

“அவன் அவனோட அம்மாக்காக என்ன கூட வந்து இருக்க சொல்றான்….நீங்க இந்த குழந்தைக்காக கூட்டிட்டு போய் வச்சுறுக்கீங்க…. Same so called wife status…..மத்தபடி உங்கட்ட மட்டும் எனக்கு வைஃப்ன்னு என்ன ரைட் இருக்கு…? உங்க ரெண்டு பேர் டீல்லயும் என்ன பெரிய வித்யாசம் கண்டுட்டீங்க….?” இவள் அரட்டலாய் கேள்வி கேட்க…

விவன்  இவ என்ன சுய நினைவுலதான் பேசுறாளா? என்பது போல் பார்க்க….அதற்குள் அவன் கவன சிதறலை பயன் படுத்தி சற்று இளகி இருந்த விவன் கையிலிருந்து விடுபட்டு ஓடிப் போனான் அந்த செபின்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.