(Reading time: 39 - 78 minutes)

யோ விடு..…என்னை விடு….. அம்மா……ஐயோ விட சொல்லுங்கம்மா….” பலமின்றி சோர்ந்திருந்த அவ்விளம் பெண்ணோ…. இவள் கையை மீற தெரியாமல் கதறியபடி இவளோடு வர……

எதிர் புறத்தில்  இருந்த கூட்டத்தினர் எதோ என்னவோ களேபர பட…. அவர்களிடம் சிக்கினால் திரும்பவுமாய் இப்பெண் சிதை ஏறுவது உறுதி என்பதால்…. அப்பெண்ணை இழுத்தவண்ணம் மரங்களுக்கு இடையில் வளைந்து வளைந்து பராக்கிரமர் இருக்கும் சாலையை நோக்கி ஓட துவங்கினாள் ருயம்மா தேவி…

மானகவசரிடம் சென்றால் போதும்…பின் யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை….

“உதவி…..உதவி…..” என அழைத்தபடியே இவள் ஓட….. மானகவசரை என்னவென்று அழைக்கவாம்? வேந்தர் என வெளிப்படுத்த விரும்புவாரோ இல்லையோ?

மானகவசரும் இவளை வெகுவாகவெல்லாம் காக்க வைக்கவில்லை…..

அதோடு வந்தது அவர் மட்டுமல்ல….. வரதுங்கர், படை வீரர்கள் மற்றும் வாணிகர் கூட்டமும் ஏராளமானோர் தங்கள் கை ஆயுதங்களை ஆயத்தமாய் ஓங்கியபடி ஓடி வர….

இப்பொழுது இவள் இழுத்துக் கொண்டு ஓடி வந்த பெண் கதறினாள்…..”என் உயிரை கப்பாற்றி என் மானத்தை கொலை செய்வீரோ?”

அப்பொழுதுதான் அப்பெண்ணை திரும்பிப் பார்த்தாள் ருயம்மா…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "கிருமி" – காதல் கலந்த விறு விறு தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

தீயில் அமர்ந்திருந்தாள் அல்லவா…..அதில் அவள் மேலாடையில் அக்னி ஆக்ரமிப்பின் அடையாளங்கள்…அங்கங்கு சிதைந்திருந்தது அது…. ஒரு கையால் முடிந்தவரை  தன்னை மூடிக் கொள்ள போரடிக் கொண்டிருந்தவள்….

இவள் பார்வையில் இன்னுமாய் சுருள…. கண நேரம் யோசிக்காமல்…. முன்பிருந்து உதவிக்கு வரும் மானகவசரின் கூட்டத்திற்கும்……பின் இருந்து துரத்தும் இறுதி சடங்கு மக்களுக்கும் சம்பந்தமில்லா மூன்றாம் திசையில் சற்றாய் ஓடி…. அருகில் புதராய் தெரிந்த ஒரு குட்டி செடி கூட்டத்திற்குள் அவளை திணித்த ருயம்மா தேவி…

“பதறாதே நானும் பெண்தான்….என்னை உன் சகோதரியாக இல்லை உன் தாயாக எண்ணிக் கொள்…” என்றபடி….தன் தலையில் வட தேச தலைப்பாகை போல் அணிந்திருந்த நீண்ட துகிலை உருவி அப் பெண் மீது போர்த்தினாள்…..

சரிந்து விழுந்து கலைந்தது காகதீய கன்னியின் நீண்ட கூந்தல்…

அத்தனை நிலையிலும் வியப்பு மேலுற இவளை பார்த்தாள் அவ்விளம் விதவை…

“என்ன பார்க்கிறாய்….நானும் ஒரு காலத்தில் உன்னைப் போல் மரணத்தை வாஞ்சித்தவள்தான்….. வரும் சூழல் அனைத்தையும் நமக்கு வாகாக வளைத்துக் கொள்ள வேண்டும் என நான் கூற மாட்டேன்…..ஆனால் வந்துவிட்ட சூழலுக்குள் வளைந்து கொள்ள நம்மால் இயலாமல் போகும் போதாவது….அதை நம் வகைக்கு வளைக்க போராட வேண்டும்…..அதற்கு காலமும் தெய்வமும் நிச்சயம் துணை செய்யும் என இப்போது அறிந்திருக்கிறேன்”..... என அவளுக்கு சொல்லிய ருயம்மா…..

அதற்குள் இவர்களுக்கு உதவிக்க வந்த கூட்டமும் எதிராய் நின்ற கூட்டமும் கலக்க…வன் முறை ஏதுமின்றி வாய் தகராறு பெரிதாய் வெடிக்க…

“நம் தேசத்தில் இல்லாத ஒரு ஈன செயல்….” என வகை உரையே பெரும்பாலும் ஒலிக்க….

ஒருவாறு அமளி ஓய்ந்தது…. ஆனாலும் இன்னுமாய் பலவித பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டும் இருந்தது….

இதற்குள் மானகவசர் இவர்கள் புறம் வருவது புதர்களின் மறைவில் இருந்த ருயம்மாவுக்கு தெரிகிறது…..

“வேந்தே” என்ற ஒற்றை வார்த்தையை பெண் குரலில் அழைத்தாள் ருயம்மா… சட்டென நின்றுவிட்டான் மானகவசன்…. அவன் முகபாவம் இலைகளுக்கு இடையில் வெகு தெளிவாக தெரிகின்றது இவளுக்கு…

முதலில் தோன்றியது வியப்பு… பின் சிலாகிப்பு அதோடு தொடராய் பூரிப்பு…..இறுதியின் இறுதியில் ஒரு குறும்போ??

மறைவிலிருந்தாலும் அருகிலிருந்தவளுக்கு அதில் ஆனந்தமும், அழகான வெட்கமும், ஆயிரம் ஆயிரம் உச்ச சந்தோஶமும்…பறவையாய் பறந்து கொண்டிருக்கிறது அவளது பெண்மை வான் வீதி மண்டலத்தில்….

விடுகதையாய் துவங்கி இருந்த இவள் பயணம் விடுதலையின் மொத்த பொருளாய் மாறி இருக்கின்றதே…..

என்னை நானகவே ஏற்றிருக்கிறார் இவர்!!!!

“தேவி”!! என்ற அவன் பதில் வார்த்தை அதை நிகரிலி முடிவிலியாய் ஊர்ஜிதப்படுத்த…..

மேலும் எதுவும் சிந்திக்கும் முன்னும் தன் மேல் வஃஸ்திரத்தை எடுத்து இவள் புறமாக நீட்டினான்..

சூழ்நிலை என்னதாய் இருக்கும் என்பதை தெளிவாகவே யூகித்திருந்தான் மானகவசன்…. மீண்டுமாய் முழு ஆண் வேடத்தில் தான் ருயம்மா மானகவசரை சந்தித்தாலும்……அவரை கண்ணோடு கண்ணோக்க படாத பாடனுபவித்தாள்…

ஆனாலும் இருவரும் அவர்களது அக துறையை அப்பொழுதுக்கு கவனிக்காமல்  அரச துறையையே கவனித்தனர்…

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.