(Reading time: 39 - 78 minutes)

ந்நிலையில் மறுதினம் அதிகாலை குலசேகர பட்டணத்திலிருந்து செண்பக பொழில் வழியாக மதுரை மாநகார் நோக்கி பயணம் துவக்கிய வணிக சாத்துடன் பிரயாணப்பட்டது இவர்களது கூண்டிட்ட வண்டிகளும்….

அக்காலத்தில் சில சில பட்டிணங்களும்….அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த கிராமங்களுக்கும் இடைப்பட்ட  பகுதி எங்கும் மரங்களடர்நது வனங்களாய் பூமி செழித்திருக்கும்…..

அவ் வனப்பகுதிகளுக்கு ஊடாகத்தான் பிரயாண சாலைகள் அமைந்திருக்கும்…. அவ்வடர்ந்த வனங்களில் காட்டு மிருகங்கள் மட்டுமல்ல…கள்வர்களும் பதுங்கிக் கிடப்பர்….

சாத்துவர்கள் அதாவது வணிகர்கள் தங்கள் வண்டிகளில் ஏற்றி வரும் பண்டங்களையும்…… வழிப்போக்கர்களின் தங்கம் முதலான பணம் மற்றும் விலையேறப் பெற்றவைகளையும் வழிப்பறி கொள்ளை செய்யும் இந்த கள்ளக் கூட்டம்…. கொலை பாதகத்திற்கும் அஞ்சாத கூட்டமது…

அவர்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள ஏற்பட்ட அமைவே இந்த வணிக சாத்து….. ஒவ்வொரு ஊரின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அன்று பிரயாணம் கிளம்பும் வண்டிகள் வந்து  காத்து நிற்கும்….

ஒவ்வொரு முறை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வண்டிகள் சேரவும்….அவர்கள் அனைவரும் கூட்டமாக பயணத்தை மேற்கொள்வர்… இதற்குத்தான் வணிக சாத்து என்று பெயர்…

பொதுவாக வணிக நோக்கில் சந்தைக்கு பண்டம் ஏற்றிச்  செல்லும் வண்டிகளே பிரதானமாயும்….ஸ்தலயாத்திரை செல்லும் பிரயாணிகள் குறைவாகவும் இருப்பதனால்….இது வணிக சாத்து என்றே வழங்கப்படும்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

இவ்வாறு கூட்டமாக செல்வதனால் சிறு எண்ணிக்கையிலான  கள்வர்கள் இவர்களிடம் மோதுவதில்லை……அதோடு இவ்வாறு செல்லும் ஒவ்வொரு வணிக சாத்திற்கும் உதவ என வழியில் ஆங்காங்கு மன்னரின் ஒரு சிறு படைப் பிரிவும் நிறுத்தப்பட்டிறுக்கும்….

ஆக அவர்களுடன் இணைந்தே பிரயாணப்பட்டது இவர்களது வண்டிகளும்…. ருயம்மாவுக்கு தனியாக ஒரு வண்டி ஒதுக்கப் பட்டிருக்க….வீரர்கள் மற்றுமொரு வண்டியில் பயணப்பட….வரதுங்கரும் மானகவசரும் தத்தம் புரவிகளில் வந்து கொண்டிருந்தனர்…..

பயணானுபவம் படு சுவரஸ்யமாக இருந்தது ருயம்மா தேவிக்கு… பக்கத்தில் காணக் கிடைக்கும்  வன மரங்களை ரசிப்பதும்… பறைவகளின் ஒலியில் ஆனந்திப்பதுமாய் அவள்…. அதையும்விட சுவாரஃஸ்யத்திற்கு மிக முக்கிய காரணம்…. மானகவசர் அவ்வப்போது இவளது வண்டிக்கு பின்னாக புரவியில் வருவார்..

அந் நேரங்களில் சிறு சிறு சம்பாஷணைகள் நடந்தேறும்…. விஷயம் இவளுக்கு புரிந்து விட்டதென அவருக்கு தெரியுமோ தெரியாதோ என சில சில நேரங்கள் நினைவுகள் தோன்றினாலும்….வாதையாய் எதையும் உணரவில்லை என்பதால் ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ந்தே சுகித்தாள்.

பயணம் அப்படியே நான்கு கால் பாய்ச்சலில் நடந்தேறவில்லை என்பது இன்னுமொரு காரணம்…

ஏனெனில் பார வண்டி இழுக்கும் மாடுகளுக்கு ஓய்வு எனவும்…. இவர்களுக்கு உணவு வேளை எனவும் சில பல முறை நின்று தங்கியே தொடர்ந்தது பிரயாணம்…

அவ்வோய்வு நேரங்களில் ருயம்மா வண்டியைவிட்டு இறங்கி அருகிலிருக்கும் வன பகுதியில் காலாற நடக்க….அங்கு சம்பாஷணை துணையாக இவள் நாயகன்….

சில சமயங்களில் ஒரு ஆனந்த அவஸ்த்தை அவளை அலை கழித்தது…… தெரிந்து கொண்டே தெரியாதது போல் பேசுவது எப்படி இருக்கிறதாம்? இத்தனை காலம் எவ்வாறுதான் சமாளித்தாரோ இந்த தவிப்புகளை…..?

தன் மனதை ஒரு மடலாய் வரைந்து அவரிடம் சொல்லிவிடலாமா எனவும் தோன்றுகிறது…. அரை தினம் கழியும் முன்னம்….அடேங்கப்பா இன்னும் எத்தனை திங்கள் காத்திருக்க வேண்டி இருக்கின்றது விவாகத்திற்கு என்று வந்து விட்டதே மனநிலை…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.