(Reading time: 35 - 70 minutes)

ந்த லீலா அத்தை ஆனந்தப்பாவின் ஒன்றுவிட்ட தங்கை….அது எப்ப வந்தாலும்  காசுதான் கேட்கும்… அப்பாவோட மிடில்கிளாஃஸ் சம்பளத்தில் எவ்வளவு செய்துவிட முடியும்? ஆனால் எல்லாத்துக்கும் அப்பன்னா அவளுக்கு மட்டும் செலவழிக்க…அவ என்ன நம்ம ஜாதியா குலமான்னு இவளபத்தி ஆரம்பிச்சுடும்…. இன்னைக்கு அது எல்லை கடந்துவிட்டது…. நைட் அப்பா எவ்வளவு சொல்லியும் இவ சாப்டல….. எதோ சாவு வீடு போல ஃபீல் ரியாவுக்கு….. அவ அம்மா அப்பா அன்னைக்குதான் இறந்தது போல்  உணர்வு…

காலையில் கூட அது இவளுக்குள் குறையவே இல்லை…..ஆக அப்பா குளிச்சுட்டு இருக்கப்ப….சாப்டாம கிளம்பி வந்துட்டா….. பேக் செய்து வச்சுறுந்த லன்ச எடுக்காம வந்தா அப்பா இவளை தேடி  ஸ்கூலுக்கு  வந்துவிடுவார் என்பதால்…..அதை எடுத்து வந்திருந்தாள்…

இன்னைக்கும் முழு டேவும் ரிகர்சல்….. நாளைக்கு ஆனுவல் டே…. என்னதான் பிசியாக இருந்தாலும் லன்சுமே சாப்பிட மனம் வரவில்லை….. இவளா எடுத்து சாப்ட்ட போளில ஆரம்பிச்சது தான வினையே…..

மதிய சாப்பாடை திறந்தவள் அடுத்து அதை தொட கூட முடியாமல் தூர போட்டாள்.. இவள் கிளாஸ் க்ரூப்போட இருந்திருந்தா இவ கேங்க் கவனிச்சு சாப்ட வச்சிருக்கும்….இவ இருந்தது எல்லா க்ளாஸிலிருந்தும் செலக்ட் செய்யப்பட்ட மக்கள் பார்டிசிபேட் செய்யும் ஸ்கிட்டில்…..

இவ க்ளாஸ்மேட் கூட யாருமே இல்ல…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

சோ ஈசியா சாப்பாட அவாய்ட் செய்ய முடிஞ்சுட்டு…. 

மனசு எப்டி இருந்து என்ன….. நேத்து நைட்ல இருந்து சாப்டலன்றப்ப……ஈவ்னிங் ட்ரெஸ் ரிகசர்ல் வரை முடிஞ்சப்ப….. இவளுக்கு தலை சுத்தாத குறை….

ப்ரோக்ராம்கான காஸ்டியூம் என ரிகர்சல்  பார்த்திருந்த ஹால்ஃப் சேரியை கூட மாத்த தெம்பில்லாமல் அப்படியே வீட்டுக்கு கிளம்பியவள்…..போய் சைக்கிள் ஸ்டாண்டில் சைக்கிளை எடுக்கும் போது அதற்கு மேல் முடியாதென சைக்கிளிலேயே உட்கார்ந்துவிட்டாள்…

ப்ரோக்ராம்ல இல்லாதவங்கல்லாம் ஏற்கனவே போயாச்சா.. சோ ஸ்டாண்ட் வெறிச்சோடிதான் இருந்துது….இவளத தவிர ஒன்னு ரெண்டு சைக்கிள்….

என்ன செய்யனும் எங்க போகனும்னு எதுவுமே புரிபடாத ஒரு சூன்ய மனநிலையில் தலை சுற்றும் கடும் பசியில் இவள் உட்கார்ந்திருந்த போது

“ஏய் கிலுகிலுப்ப….என்ன மூஞ்சே சரியில்ல…?” என்ற சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தால்…எதிரில் நின்றது விவன்…..அவனும் இந்த ஸ்கிட்டில் இருந்தான்…… அவனது கையில் ஸ்கூலுக்கு வெளியே உள்ள பேக்கரியில் இந்நேரம் கிடைக்கும்  சிக்கன் சாண்ட்விச்…

“சாப்டலைதானே….” அவனது அந்த கேள்வியில் கண்ணீர் அதுவாக எட்டிப் பார்க்க…. இன்னைக்கு முழுக்க யாருமே இவட்ட ஒரு வார்த்தை இப்படி கேட்கலையே……

“ப்ச்…..இதுக்கு போய் அழுவாங்களா யாராவது…?” என்றபடி கையிலிருந்த சான்ட்விச் ப்ளேட்டை நீட்டினான்….

“இங்க பாரு நம்ம அம்மா அப்பான்னா கூட அப்ப அப்ப நம்மள திட்ட தான் செய்வாங்க….சொந்த வீடுன்னா கூட சண்டை வரத்தான் செய்யும்......அம்மா அப்பா இருக்றவங்கல்லாம் ப்ரச்சனையே இல்லாம வளர்றாங்கன்னா நினைக்கிற…..அம்மா திட்டினா சாதாரணமா எடுத்துக்கிற மாதிரி பூர்விக்கா வீட்ல சொன்னாலும் சாதாரணமா எடுத்துக்கனும்……” அவன் விஷயம் என்னதாக இருக்கும் என யூகித்ததை சொல்ல….

இவளுக்கு அதெல்லாம் படாமல்….. அம்மா அப்பா இருக்றவங்களுக்கு மட்டும் ப்ராப்ளம் இல்லைனா சொல்ற? என்றது மட்டும் எதோ ஒரு வகையில் அந்நேர மனநிலைக்கு ஒரு தேவையான வார்த்தையாய் பட….

ஆமா ப்ரச்சனைன்றது எல்லோருக்கும் உள்ளதுதான…..என ஒரு சமாதானம் தோன்ற….. அந்த மொத்த இன்சிடென்டிலும் அவள் சின்னதாயாவது  புன்னகை சிந்திய ஒரே நேரம் அதாகதான் இருக்கும்….

“எப்பவும் கோபத்த சாப்பாட்ல காமிக்க கூடாது….. இந்த விஷயத்தில் என் தங்கையும் உன்ன மாதிரியே தான்” சொன்ன படி அடுத்தும் அவன் சான்ட்விச்சை நீட்ட…

இவள் அதை வாங்கிக் கொண்டதற்கு காரணம் பசி என்பதைவிட……அந்நேரம் அவளிருந்த மன நிலையில் அவன் வந்து பேசியதும் தோன்றிய சற்று இலகு நிலையே….

அவள் சைக்கிளில் அமர்ந்திருந்த நிலையிலேயே சாப்பிட… சற்று தள்ளி நின்று அடுத்த சான்ட்விச்சை அவன் சாப்பிட்டான்…

இவ்வளவுதான்  நடந்தது……

இன்னைக்கு இவ வீட்டுக்குள்ள நுழையுறப்பவே மதி ஆன்டி குரல்

“ முளச்சு மூனு இலை கூட விடல……அதுக்குள்ள இவளுக்கு ஜோடி தேடுது……அப்டி அந்த பையன் கூட இளிச்சு இளிச்சு பேசிட்டே தின்னுட்டு இருக்கா…..வேணும்னா பாரு கண்டிப்பா  கைல கிடச்சத சுருட்டிட்டு ஒருநாள் ஓட தான் போறா பாரு இவ….. அவ அம்மாவே அப்டித்தான்  கல்யாணம் செய்தாளோ என்னமோ..…? அதனால தான் அவ சொந்தம் ஒன்னும் இவள சேர்த்துகலை போல…..இவளுக்காக போய் நம்ம லீலாவ நீ பகச்சுகிட்டியாக்கும்?”

அதற்கு மேல் எதையும் கேட்க தெம்பில்லாமல் ரியா வீட்டின் பின் பக்கம் போய் உட்கார்ந்து கொண்டாள்…..12 வயது பெண்ணிற்கு இதையெல்லாம் எப்படி எடுக்க வேண்டும் என்றே தெரியவில்லை….

கோஎட்டில் படித்துக் கொண்டிருப்பவளுக்கு பையன்கள் கூட பேசுவது வித்யாசமான ஒன்றாக இன்னும் தோன்றி இருக்கவில்லையே…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.