(Reading time: 35 - 70 minutes)

சொல்லுங்க மேடம்ஜி என்ன கதை சொல்லனும்….பராக்கிரமரோட லவ் ஸ்டோரிய கன்டின்யூ செய்யட்டுமா?” அவன் ஆஃபர் கொடுக்க..

“அதெல்லாம் வேண்டாம்…..ஒரிஜினல் இருக்க ஒய் இமாஜினரி….. உங்க லவ் ஸ்டோரியவே சொல்லுங்க கேட்போம்” அவள் டாபிக் டிசைட் செய்தாள். “எப்ப இருந்து என்ன லவ் பண்றீங்க ஜெரோம்?...”

‘ஜெரோம்’ அதை அவள் திரும்பவுமாக சொல்வதில் விவனுக்கு அப்படி ஒரு விடுதலை சுகம்.

“ஆக்சுவலி டூ இயர்ஸ் முன்ன உங்க ஃபேமிலி நம்ம ஏரியால இருந்து வீடு ஷிஃப்ட் செய்து சிட்டிக்குள்ள போனீங்கல்ல….. அப்பவரை அல்மோஸ்ட் தினமும் உன்னை பார்த்திருப்பேன்…..” அவன்  சொல்ல ஆரம்பிக்க..

“தினமும் பார்த்தீங்களா…?” என ஆச்சர்யமாய் ஆரம்பித்து….” திருட்டுத்தனமா சைட் அடிச்சீங்களா..?....நல்ல பையன்னு நினச்சு ஏமாந்துட்டேன் போலயே” எனும் போது முகம் Blush செய்ய சற்று பூரிப்பும் ஆசையும் கலக்க அவனை வம்பிழுத்துக் கொண்டிருந்தாள் ரியா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தெய்வாவின் "காதல் கீதம்" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

சின்னதாய் ரசனையாய்  சிரித்தான் அவன்…”இப்ப யோசிச்சா சைட் அடிச்சுறுக்கேன்னு புரியுது……ஆனா அப்ப அப்டி தோணல….  பாரு நான் எவ்ளவு நல்ல பையனா இருந்திருக்கேன்….இப்ப நீ வந்துதான் ரொம்ப கெட்டு போய்ட்டேன்..” என்றபடி கீழ் படியிலிருந்தவளை தன் மடி மீது அவன் இடம் மாற்ற….

ஏனோ அடுத்து எதுவும் பேச வேண்டும் என்று கூட ரியாவுக்கு தோணவில்லை…..

பால் கொண்டு கழுவியது போல் ஒரு வெளிச்சத்தை கொட்டிக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்த வானத்து நிலா,  அந்த ரூஃபின் க்ரில் வழியாய் கொட்டிய வெண் நீல வெளிச்சத்தை தவிர அங்கு வேறு வெளிச்சம் இல்லை….

“அப்பல்லாம்  டெய்லி நிமுவ காலேஜ்ல இருந்து பிக் அப் செய்ய போவேன்…… வர்ற வழியில் நீயும் உன்  பூர்விக்காவும் வெஜிடபிள் வாங்குவீங்களே அந்த மார்கெட் ப்ளேஸ்லதான் நிமுவும் எதாவது வாங்குவா….. சோ நான் கார்ல ரோட் சைட் வெயிட் பண்ணுவேன்…… அப்ப தினமும் உன்ன பார்ப்பேன்…. உன் அக்காதான் எப்பவும் எதையோ உன்ட்ட பயங்கர இன்ட்ரெஸ்டிங்கா பேசிட்டே வருவாங்க… நீ ஒரு மாதிரி கொஞ்சம் அமைதியா ரொம்ப கம்மியாதான் பேசுவ…… அங்க கடைசியா ஒரு குட்டி பூக்கடை இருக்கும்…. டெய்லியே அங்க பூ வாங்குவ…. பார்க்க ரொம்ப பாந்தமா தோணும்… என்ன  நம்ம கிலுகிலுப்ப இவ்ளவு சைலண்ட் ஆகிட்டேன்னும் சில டைம் தோணி இருக்கும்….. கேர்ள்ஸ்னா வளர வளர கொஞ்சம் அமைதி ஆயிடுறாங்க போலன்னும் நினச்சுப்பேன்….. நிமு அப்டித்தான் இருந்தா…” இடையோடு பஞ்சு போல் பிடித்திருந்தவன்…..அவள் தோள் மீது தன் நாடி பட்டும் படாமலும் பேசிக் கொண்டு போக….

நிலவுக்கு அருகில் ஒற்றைக் கண் சிமிட்டிக் கொண்டிருந்த   ஒரு நட்சத்திரமிடம் போய் நின்றது ரியாவின் பார்வை.

சூழ்நிலை மனோகரம் இருவருக்குள்ளும் ஏகாந்தத்தை உண்டு செய்ய சில நொடி மௌனம்.

“ ரொம்ப  ஆசை இது ரியு…. இங்க இருந்து இப்டி உன்ட்ட கதை பேசனும்னு “ சொல்லியபடி அவள் விரல்களுடன் அவன் விளையாட துவங்க…. 

இவள் இப்போது அவன் மீது சாய்ந்து கண்மூடிக் கொண்டாள்…. இரவுக்கும் இவனுக்கும் இந்த காற்றுக்கும்…….  

“அப்பல்லாம் உன்ன மேரேஜ் செய்யனும், லவ் பண்றேன் அப்டின்லாம்  யோசிச்சது இல்ல ரியு…..ஆனா நிமுக்கு மேரேஜ் ஃபிக்‌சாகி  மஹி கூட அவ பேச பழக ஆரம்பிக்கவும் she bloomed you know….அப்ப அவ மாறின விதத்தை பார்க்கவும்… நானும் உன்ன அப்டித்தான் சந்தோஷமாக்கி வச்சுக்கனும்னு தோணிச்சு…..அத தான் லவ் பண்றதுன்னு சொல்லனுமா…..இல்ல அது கூட  காதல்  இல்லையோ தெரியாது……ஆனா அதுதான் எனக்கு ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் வந்த மேரேஜ் தாட்….  

அடுத்து என் மேரேஜையும் உன்னையும் எனக்கு ரெண்டா பிரிச்சு பார்க்க முடிஞ்சதில்ல…. உங்க வீட்ல வந்து பெண் கேட்டேன்….. நீ என்ன லவ் பண்றதால்லாம் எனக்கு எப்பவுமே தோணியது கிடையாது…..ஆனா உனக்கு என்னை பிடிக்காதுன்னும் எனக்கு ஒரு சின்ன தாட் கூட கிடையாது…… அதான் உங்க வீட்ல வேண்டாம்னு சொல்லவும்  கொஞ்சம் குழப்பம் ஆகிட்டு…. 

உங்க அக்காதான் வேண்டாம்னு சொல்றாங்களோன்னு நினச்சுட்டேன்…… என் ஃபினான்சியல் பேக்ரவ்ண்ட் பார்த்து கூட அவங்க வேண்டாம்னு சொல்லி இருக்கலாம்…..இல்ல வேற காரணம் இருக்கலாம்…..

சில நேரம்……சிலரோட சொந்த பேரண்ட்ஸே பிள்ளைங்க ஏர்னிங் அது இதுன்னு எதாவது காரணம் வச்சு கல்யாணத்தை தள்ளிப் போடுறது இல்லையா…..அது போல….. அது போலன்னு தான் சொல்றேன்….அதேன்னு சொல்லல….. எதாவது ஒரு ரீசன்காக உன் அக்கா ஃபேமிலியே இந்த மேரேஜ வேண்டாம்னு சொல்லி இருக்கலாம்னு யோசிச்சேன்…..

அதான் உன்னை நேர்ல பார்த்து பேசிட்டா எல்லாம் தெளிவா ஆகிடும்…..அடுத்து உன் அக்கா வீட்ட கன்வின்ஸ் செய்யலாம்னு நினச்சேன்…..” அதோடு தன் விளக்கத்தை நிறுத்தியவன் இப்போது தன் இதழால் அவள் இளங்கழுத்தை அளக்க….

ரியாவுக்குள் சுக நதி ஊறாமல்….மூடி இருந்த அவள் கண்களுக்குள் வெடித்து அழும் அவளது அக்காதான் காட்சிக்கு வருகிறாள்…. தன்னைத்தானே அடித்துக் கொண்டு அக்கா இப்படி அழுத இந்த காட்சியை இவள் நிச்சய நிச்சயமாய் பார்த்திருக்கிறாள்…….ஆனால் ஏன் ?? எப்ப?? எங்க?? எதுவும் எத்தனை முயன்றாலும் நியாபகம் வராமல் வெடிப்பது போல் வலிக்கிறது இவள் தலை….

“தூங்கலாம் வாங்க விவன்…..”  கடகடவென எழுந்து போய் படுக்கையில் சுருண்டு கொண்டாள்.

விவனா?!  அவளை யோசனையாக பார்த்தான் விவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.