(Reading time: 35 - 70 minutes)

ரியாவும் ‘தெரிஞ்சவங்கன்னு சொல்லிட்டு இது என்ன டைப் இன்ட்ரோ….’ என்ற நினைவை பின் தள்ளி….  கை கூப்பினாள்.

ஹால் வரை அடுத்த வீட்டிற்குள் வந்த அன்நியராக அமைதியாக வந்தனர் அவர்கள்…..

ஆனால் உள்ளே  மாடி படி ஏறும் அறை வரவுமே…. அதுவரை அப்பாவியாய் வந்த சௌந்தரி…. 

லெஃப்ட் லெக்க சுவத்தில வச்சு ரைட்டால ஒரு சர்ர்ர்ர்ர்……

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз…!

படிக்க தவறாதீர்கள்..

சைனீஸ் மூவிலலாம்  சுவர்ல சரக் சரக்கென தாவி தாவி நடக்காங்களா பறக்காங்களான்னு புரியாம நாம முழிக்கிற மாதிரி ஏறுவாங்களே…அப்டி ஒரு பறக்கிற மாதிரி நடை…

 மாடி படி மாடிக்குள் திறந்த இடத்திற்கு பக்கத்தில்…...இவள் கை பட  ……. ரூஃப் போல தெரிந்த அது கதவாய் திறக்க….உள்ளே ஏறிப் போய்விட்டாள் அந்த சௌந்தரி… “கேமிராஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு….” போகிற போக்கில் தன் ஆக்க்ஷனுக்கு ரீசனும் சொல்லிவிட்டுப் போனாள் அவள்.

பார்க்கிறது நிஜமா இல்ல எதுவும் மேஜிக்கா என மிரண்டு +அசந்து போய் பார்த்துக் கொண்டு நின்றது ரியா.

“தென்காசில பொதுவா கெஸ்ட் உள்ள வரவும் கதவை மூடுற வழக்கம் கிடையாது விவன் சார்….. ஸ்டில் நீங்க சென்னைல இருந்து வந்திருக்கதால நீங்க மூடி வைக்கலாம் நார்மல் போல தோணும்…. அதனால நங்க இங்க வர்றப்ப கதவை மூடுங்க….தென் நாங்க பேசுவோம்…..ஆனா நீங்க எங்க வீட்டுக்கு வர்றப்ப…..நாங்க நேட்டிவ் தென்காசி பீபுள் போல ப்ரொஜெக்ட் செய்றதால  கதவ திறந்து தான் வச்சுறுப்போம்….. இன்னர் ரூம்க்கு வந்தா மட்டும் தான் பேச முடியும்….அதில் எப்பவும் அலர்டா இருங்க…

பைதவே ஆதிரன் சார்ட்ட சொன்னபடி எல்லா அரேஞ்ச்மென்ட்டும் செய்தாச்சு…..  இப்ப பார்த்தீங்கல்ல மங்கை  எப்டி டோர் இல்லாத இடம் வழியா மாடிக்கு போனா…..அது போல இந்த வீட்டோட ஃப்ரென்ட் கேட்ல இருந்து வீட்டோட எந்த ரூம்க்கும் வாசல் தவிரவும் வர வழி செய்து வச்சுட்டோம்….

இன் கேஸ் யாரவது உங்கள உள்ள வச்சு லாக் செய்துட்டா கூட… உங்க மொபைல்ல எங்களுக்கு இன்டிமேட் செய்தீங்கன்னா அடுத்த நிமிஷம்  ரெஸ்க்யூ செய்ய வந்துடுவோம்….. 

பக்கத்து வீடு எதிலிருந்தும் இந்த வீட்டு மொட்டை மாடிக்கு  யார் என்டர் ஆனாலும் மானிடர் செய்ய கேமிராஸ் ஆன்ல இருக்கு….. பேக்யார்ட் லேம்ப் போஸ்ட் கேமிரா இப்பதான் ஆன் செய்தீங்க…..  ஃப்ரென்ட் கேமிரா நீங்க வரவும்   கைய வச்சு க்ளோஸ் செய்துட்டீங்க போல…. நம்ம பாய்ஸ் என்னமோன்னு அலர்ட் ஆகிட்டாங்க…..நான் அங்க ஸ்ட்ரீட் தான் இருந்ததால வேற யாரும் வரலைனு ஸ்டாப் செய்தேன்…. அதாவது 24/ 7 இங்க வீட்டுக்குள்ள யாரும் வர்றாங்களான்னு மானிடர் செய்துட்டுதான் இருக்கோம்….அதையும் தாண்டி இஷ்யூ ஆனாலும் வி ஆர் ஆல்வேஸ் ரீச்சபிள்….” என அந்த ப்ரைவேட் டிடக்டிவ் ஜெபர்சன் இன்னேரம் ஒரு  ஸ்பீச் கொடுத்தான்.

அதே நேரம் விவன் ஒருவிதமாய் ரியாவைப் பார்க்க…..ஃப்ரென்ட் கேமிரா மொமன்ட் எது என்பது உட்பட ரியாவுக்கு எல்லாம் புரிகிறது…. இவள் அவன் பின் தலையில் கொடுத்ததை அவன் திருப்பி கொடுத்த நேரம் ஒரு கையால் இவள் கையை பிடித்தவன் அடுத்த கையால் இந்த மறைக்கிற வேலையை செய்தான் போல…..

சேஃப்டிக்காக இவ்ளவு அரேஞ்ச்மென்ட் என்பது அவளுக்கு ஒரு நிம்மதியை தர….. அதை கண்டு கொள்ளாமல் விட்டு…..தன்னவனை முறைக்கவா இல்லை பார்த்து சிரிக்கவா என்ற குழப்பத்தை மட்டும்  கொண்டாள் இப்போது…. சின்னதாய் வெட்கம் வேறு வந்து எட்டிப் பார்த்தது ரியாவுக்கு…..

 “ஹனி அவங்களுக்கு இந்த என்விரான்மென்ட் அலர்ட்னெஸ் எல்லாம் புதுசு….. அதில் நீங்க வேற ஏன் டென்ஷன் சேர்க்கிறீங்க…. அவங்க ரிலாக்‌ஸா இருக்கட்டும்…..சீக்கிரம் பழகிடுவாங்க….எப்டியும் நாம கேமிராவ மட்டும் டிபென்ட் ஆகி இல்லையே எக்ஸ்டெர்னல் மானிடரிங்கும் செய்றோம் தானே…” இப்போது அந்த ஜெபர்சனுக்கு கவ்ண்டர் கொடுத்தது அந்த சௌந்தரி.

 வீட்டின் பின் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்தாள் அவள்…..

“ப்ரியா மேம் உங்க வீட்டுக்கு வெளிய நாலு பக்கமும் 100% சர்வேலன்ஸ்….வீட்டுக்கு உள்ள 100% உங்களுக்கு ப்ரைவசி…..நீங்க ஃப்ரீயா இருங்க மேம்….. மீதி வேலைய பார்க்கதான நாங்க இருக்கோம்….. மார்னிங் பார்க்கலாம்…. குட்நைட்”  என்றபடி அந்த சௌந்தரி தன் கணவனுடன்  விடைபெற…. அலையடித்து ஓய்ந்த உணர்வில் ரியா.

“எதிர் வீடு எனக்கு தூரத்து சொந்தமான ஒரு அத்தை வீடு ரியு….. அவங்க தான் நம்ம வீடையும் மெயின்டெய்ன் செய்துட்டு இருந்தாங்க…. அவங்க வீடு ரினவேஷன் போய்ட்டு இருந்துது….. இப்ப அந்த வீட்டுக்கு கிரக ப்ரவேசம் போல செட் செய்து ஜெபர்சன் சௌந்தரி  டீம அங்க தங்க வச்சுறுக்கு….. இப்டி எல்லா அரேஞ்ச்மென்ட்டும் செய்றதுக்காகதான் டூ டேஸ் டிலே செய்து வந்தோம்…. சென்னையில் நம்ம செக்யூரிட்டிய மட்டும் நம்பி ஒன்னும் சரியா வரல….அதான் இங்க ப்ரொஃபெஷன்ல்ஸ் ஹெல்ப் எடுத்துறுக்கோம்” முழு பேக்ரவ்ண்டை விளக்கினான் விவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.