(Reading time: 35 - 70 minutes)

ப்றமும் அக்கா வந்து “பெரிய பொண்ணுங்க பையன்ட்ட தனியா பேசுனாதான் ரியாம்மா எல்லோரும் தப்பா நினைப்பாங்க……உன்னை எல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க….இவங்க சும்மா சொல்லனும்னு சொல்லிட்டு போறாங்க……மனச குழப்பிக்காத” என ஆறுதல் சொல்லியும்….”லேட்டானதும் பசிச்சுட்டோ ரியாம்மா…?” என கேட்டு அதிலிருந்து தினமும் ஈவ்னிங் பேக்கரி போக என தனியாக பணம் கொடுத்து விட்டதும் நடந்தேறினாலும்…. இவளால் அதை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை….

ஆனாலும் இந்த நிகழ்வு எதுவும் இப்போது வரை நியாபகம் இல்லை…… பிடிக்காதத நினைக்க கூடாதுன்னு மறந்திருப்பாளாய் இருக்கலாம்…..

ஆனா இதனால அவளுக்கு வந்த பழக்கம் தெளிவாகவே நியாபகம் இருக்கிறது…. எவ்ளவுதான் பசின்னாலும் …பூர்விக்காவோ அப்பாவோ எடுத்து தராமல் அதன் பின் இவள் சாப்பிட்டதே கிடையாது…..

சாப்பாடு என்று இல்லை….எதையும் அப்பாவோ பூர்விகாவோ தராமல்  தொடமாட்டாள்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...

படிக்க தவறாதீர்கள்..

 இவளுக்கு என்ன பிடிக்கிறது என்பதை அக்கா அப்பாவிடம் சொல்லவும் மாட்டாள்….. இதுதான் பின் நாள்ள 12 த் ல மெடிசின் போற அளவு மார்க் வரலைனா  லோன் போட்டாவது பிஎஸ்சி நர்சிங் படித்துவிட்டு உடனடியாக வேலைக்கு போய்டனும்…. அதில் அப்ராட் சான்ஸ் ஈசின்றதால சீக்கிரம் லோன அடச்சிடலாம் என்ற இவள் திட்டத்தை கூட பூர்விக்கா மாசி அண்ணாட்ட வாய திறந்து சொல்லாமலே….. அப்ப ஆனந்தப்பா உயிரோட இல்ல…

“மெடிசின் கிடைக்காது போலயே ரியாம்மா….இஞ்சினியரிங்லயும் உனக்கு இஷ்டம் இருக்க மாதிரி இல்ல….அப்ப அடுத்து என்ன செய்ய ஆசைப்படுற……இவ்ளவு மார்க் எடுத்துட்டு அடுத்து ஆர்ட்ஸ் காலேஜா….? “ என அவர்கள் கேட்டதற்கு மௌனமாகவே நின்று….

அங்க காலேஜில் கூட பிகாம் படிச்சா பெட்டரோ என்ற இவள் நினைவை சொல்லாமல்….பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரியில் போய் சேர வைத்தது.

எதையும் எதற்காகவும் வாய திறந்து சொல்லிடமாட்டா…..அமைதியா அவ உண்டு அவ வேலை உண்டுன்னு ஒரு லைஃப்….. வர்றத அக்செப்ட் செய்துக்க வேண்டியதுதான்னு ஒரு மனோநிலை….எப்பவும் எல்லாமும் அவளுக்கு பிடித்த வகையில் இருப்பதாகவே நினைத்துக் கொள்வாள்…. பிடிக்காத விஷயத்துக்கு இருக்கவே இருக்கு LIP theory….ஆனா அக்கா மாசி அண்ணா அப்பாவெல்லாம் இவளுக்கு ரொம்ப பிடிக்கும்….

உலகத்தில் எல்லோரும் இவளுக்கு எதிரா நின்னப்பவும் ஒவ்வொரு விஷயத்திலும் இவளுக்காக இருந்தவங்க அவங்கதானே….

இப்போது விவனையும் ரொம்பவே பிடிக்கும்…..ரொம்ப ரொம்பவே…..

ஆனால் அவனிடம் இவள் முற்றிலுமே வித்யாசமாய் இருக்கிறாள்….அவள் அவளாகவே இருக்கிறாளோ? அவனிடம் ஈர இட்லி தவிர எதுவும் சாப்ட மாட்டேன் என சொன்ன நிகழ்விலிருந்து…… பெப்பரை எடுத்து அவன் வாயில் வைத்தது வரை உடனடியாய் மனதில் தோன்றி…. கொஞ்சம் கொஞ்சமா அவன்ட்ட இவ எவ்ளவு ஃப்ரீயாகிட்டே வந்திருக்கா என்பது வரை இதமாக புரிய……இதோ இப்போது கூட….இவளாகதானே அவனை இழுத்து……என்ன செய்து கொண்டிருக்கிறாளாம்? என்பது வரை  தித்திப்பாக பரவ…

இன்னுமே அவனை இன்னுமாய் பிடிப்பதாக தோன்ற… அவனை  இறுக கட்டி “ எனக்கு எப்பவும் நீங்க வேணும் ஜெரோம் “ என்றபடி அவன் மார்பில் உறைந்தாள்.

“உன்னவிட்டுட்டு நான் எங்கயும் போறதா இல்ல…”விவனும் உணர்ந்து சொன்னான்.

சரியாய் இதற்கு முந்தின செகன்ட் தான் அந்த லைட் போஸ்ட்டைப் பார்த்திருந்த அவன்…..

ரியாவின் இந்த அணைப்பிலும் ஜெரோம் என்ற அழைப்பிலும்…..போஸ்ட் விஷயத்தை அப்போதைக்கு போஸ்ட்போன் செய்தான்….

போஸ்ட்டை ஒரு செகண்ட் பார்த்தவன் பின் தன் முழு கவனத்தையும் தன்னவளுக்கே கொடுக்க….. நிச்சயமாய் அவனைப் பொறுத்தவரை இது ரொம்பவும் முக்கிய மொமன்ட்…. அவளா எதாவது சொன்னா ரொம்பவுமே நல்லா இருக்கும்….

ஆனால் அடுத்து ரியாவிடமிருந்து எந்த வார்த்தையும் இல்லை… சில நொடிகள் அப்படியே கழிய…

“உள்ள போலாமா ரியு…? கொஞ்சம் வேலை இருக்கு…..” என்றபடி அவளை வீட்டிற்கு கூப்பிட்டான்.

அவனது ‘கொஞ்சம் வேலை இருக்கு’வில் ரியாவின் அந்நேர உணர்வலைகள் வடியவில்லை என்றாலும்……சூழ்நிலை மறக்குமளவிருந்த மயக்கம் சற்றாய் குறைய….. பக்கத்தில் என்ன நடக்கிறது என பார்க்கும் அளவுக்கும் தெளிந்திருந்தாள்.

பூட்டி வைந்திருந்த பின் வாசல் கதவை திறந்து கிட்சனுக்குள் அவளுடன் நுழைந்த விவன்…..முதல் வேலையாய் கதவை பூட்டிவிட்டு…. அங்கிருந்த ஸ்விட்ச் போர்ட் பக்கம் எதையோ தேடி சின்ன ஆசுவாசத்துடன் ஒரு ஸ்விட்சை தட்ட….

ரியா அவன் முகத்தைப் படிக்க முயன்றாள்.

“நம்ம பேக்யார்டை  மனிடர் செய்ய அங்க லைட் போஸ்ட்ல ஒரு காமிரா இருக்கு ரியு…. நாம நின்ன இடம் அதில் தெளிவா வரும்….. ஆறு வழியா யாரும் வீட்டுக்குள்ள வந்துட கூடாதுன்னு இப்டி அரெஞ்ச்மென்ட்…” அவன் விளக்க….

இப்ப அவ ‘பே’ ல இருந்து ‘ஆங்’ போய் அழுமூஞ்சி பாவத்துக்கு மாற…… 

அதற்குள் அவன்…..”ஹேய் அது இப்ப வரை ஆஃப்ல தான் இருந்திருக்கு……அப்போ கன்ஃபார்மா தெரியல….. அதான் கொஞ்சம் டென்ஷனாகிட்டு…..” என அவள் டென்ஷனை குறைத்து….

 “ அந்த ஒரு இடத்தில் உள்ளது மட்டும் நம்ம கன்ட்ரோல்ல இருக்கட்டும்னு சொல்லி இருந்தேன் ரியு.….இதுதான் அதோட ஸ்விட்ச்….வேணும்றப்ப நாம ஆஃப் செய்துக்கலாம்…. ஈவ்னிங் டைம் பொதுவா அங்க போய் உட்கார ரொம்ப நல்லா இருக்கும்……குளிக்கவும் செய்யலாம்…. அதான்” என காரண காரியத்தோடு விளக்கமும் கொடுத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.