(Reading time: 35 - 70 minutes)

சோ சார் மினி ஹனிமூன் ப்ளான்ல வந்திருக்கீங்க போல…” என்று கேட்ட போது ரியாவும் இயல்புக்கு வந்துவிட்டாள்….

“உன் கூட இருந்தா எப்பவும் ஹனிமூன்தான் ஜிகே” என விவன் அதற்கு ரிப்ளை கொடுத்தபடி அவளை இடையோடு வளைத்து மெல்ல தன்னோடு சேர்த்த போது அவள் முன்னிருந்த மெல்டிங் மூடிற்குகூட வந்துவிட்டாள்.

மென் அழுத்தத்தை தன் பார்வைக்கு கொண்டு வந்து தன் அணைப்பிலிருந்தவள் முகத்தையே பார்த்தபடி நின்றான் விவன்…

அந்த ஜெரோமை தொடர்ந்து எதுவும் சொல்வாளா??

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

ரியாவும் அவன் முகத்தைதான் பார்த்துக் கொண்டிருந்தாள்…..அவனிடம் சில விஷயம் அவள் பேசியாக வேண்டும்.

 விவன் சாண்ட்விச் வாங்கி கொடுத்த அந்த இன்சிடென்ட்…..அத இவ மறந்தே போயாச்சு….. ஆனா அந்த இன்சிடென்ட் மூலமா அவனுக்கு என்ன புரிஞ்சிருக்கும்…..? பூர்விக்கா ஆனந்தப்பா கூட அப்போ அப்போ இவளுக்கு ப்ரச்சனை இருந்திருக்கும்னுதானே….

அதான்  முதல்ல அவன் பொண்ணு கேட்டு வரவும் இவ வேண்டாம்னு சொன்னப்ப….. பூர்விக்காதான் மேரேஜ வேண்டாம்னு சொல்றாங்களான்னு கூட கேட்றுப்பான்…. அதுக்கு இவ கோபபட்டு அவன ஒருவழி செய்துட்டா…..அதனால இப்பவுமே அவன் பூர்விக்கா பத்தி பேசுறப்ப ஒரு அலர்ட்னெஸ்ஸோட பேசுறான்…. இத எல்லாத்தையும் இப்ப இவ க்ளாரிஃபை செய்தாகனும்… இதுதான் அவள் மனதிலிருந்தது அப்போது….

ஆக அந்த நிகழ்வை சொல்லி அதன் பேக்ரவ்ண்ட் எல்லாவற்றையும் சொன்னவள் “பூர்விக்காவ தப்பா நினைக்காதீங்கப்பா….” என முடித்தாள்.

இவள் சொல்வதை முழுமையாக கேட்டிருந்தவன்….. அந்நிகழ்வின் மொத்த வீரியமும் அவனைத்தாக்க….. “உண்மையில் உங்க ஆனந்தப்பாவ ரொம்பவும் அப்ரிஷியேட் செய்யனும் ரியு” என்றபடி அவளை மெல்லமாய் தன் மார்பிற்குள் புதைத்திருந்தான்…

“சொந்த தம்பி பிள்ளைங்கன்னதும் எங்க பெரியப்பாவுக்கு இப்டில்லாம் எந்த ப்ரச்சனையும் வரல…. அடுத்தவங்க குழந்தைய எடுக்றப்ப என்னதெல்லாம் கோ த்ரூ செய்ய வேண்டி இருக்கு… ஸ்டில் அவங்க உன்ன  நல்லாவே பார்த்திருக்காங்க…” இன்னுமே அவன் ஆனந்தப்பா பற்றியே தொடர….

அவனது வார்த்தைகளிலும், அணைத்திருந்த கையிலும் இருந்த பரிதவிப்பே இவளது அந்த நேர வேதனையை அவன் அனுபவிக்கும் விதத்தை அவளுக்கு  அறிவிக்க…… ஆனாலும் இவ கேட்டது என்ன அவன் சொல்றது என்ன? பூர்விக்கா பத்தி இவன் ஏன் ஒன்னும் சொல்ல மாட்டேன்றான்???

“பூர்விக்காவும் அப்பா மாதிரிதான்பா…..அவ கொஞ்சம் எமோஷனல்……ஆனா பாருங்க எப்பவும் யார்ட்டயும் என்ன அவ விட்டு கொடுத்ததே கிடையாது…..  என் மேல ரொம்பவும் அக்கறை உண்டு…. நீங்கதான சொல்வீங்க சொந்த பேரண்ட்ஸ்னாலும் இப்டிதான் ட்ரீட் பண்ணுவாங்கன்னு….எனக்கு சொந்த அக்கா இருந்திருந்தா அந்த இடத்தில் பூர்வி மாதிரிதான நடந்துருப்பா….. நம்ம மேரேஜ்க்கு நோ சொன்னது அவ கிடையாதுப்பா….” இவள் இன்னுமாய் அவனுக்கு புரியவைக்க முனைய…

“அப்பல்லாம் உன் பூர்விக்கா மேல எனக்கு எந்த விதமான நெகடிவ் ஃபீலும் கிடையாது ரியு….நம்ம மேரேஜ் விஷயமா  இன்ஷியேட் செய்தப்பகூட நான் நேர உன்ட்ட வரலையே….உங்க அக்காட்ட தான பெண் கேட்டு வந்தேன்…..உன்ன தன் குடும்பமா வச்சு வளர்த்திருக்காங்க……அவங்கட்ட வந்து கேட்கிறதுதான் அவங்களுக்கு செய்ற மரியாதையும் முறையும்னு பட்டுது….” இப்படியாய் அந்த பேச்சை முடித்தான் அவன்…….

ரியாவுக்கு இப்போது இப்படி ஒரு கேள்வி….. ‘அப்பல்லாம் கிடையாது…… அப்படின்னா எப்ப இருந்து இவனுக்கு  அக்கா மேல நெகடிவ் ஃபீல்…..அன்ட் ஏன்?’ 

ஆனால் அடுத்து அவள் எதையும் கேட்கும் முன்….. வெளியே கேட்டில் அடிக்கப்படும் காலிங் பெல் ஓசை சன்னமாய் காதில் விழுகிறது….

ஒரு மாதிரி  பதறுகிறது இவளுக்கு….. ‘இங்க யார் வர முடியும்?’

வன் கைக்குள் இருந்தவள் அல்லவா…? இவள்  பதற்றத்தை உணர்ந்தான் போலும்…

“தெரிஞ்சவங்களாதான் இருப்பாங்க ரியு…..டென்ஷனாகத…” என்றபடி அணைப்பிலிருந்து இவளை விலக்காமல் ஒரு கையால் தன் மொபைலை எடுத்துப் பார்த்தவன்…

“யெஸ்…..வா போய் பார்க்கலாம்…”  என்றபடி இவளை தன்னோடு கூட்டிப் போய் கதவை திறந்தான்.

எதிரில் நின்றிருந்தது ஒரு குச்சி சைஸ் குடும்ப பொண்ணும்…. கூடவே அவளது லைஃப் பாட்னரும் போல….

வயதைப் பார்க்க குறைவாக தெரிந்தாலும்…. வேஷ்டி சட்டையில் அவர்……தழைய கட்டிய புடவைக்குள்ளும் வகிடெடுத்து பின்னிய முடிக்குள்ளும் ரொம்பவும் சாஃப்ட் அண்ட் அப்பாவியாய் அவள்…. கையில் ஒரு தாம்பள தட்டு…

ரியாவும் விவனும் காரில் வந்து வீட்டு முன் இறங்கும் போது…..இந்த இவரை ரியா தெருவில் பார்த்திருந்தாள்….நாலைந்து வீடு தள்ளி எதோ வீட்டு முன் நின்று மொபைலில் பேசிக் கொண்டிருந்தார்.

இப்போ பார்க்கவும் “வணக்கம் ….நாங்க எதிர் வீட்டுக்காரங்க…..நாளைக்குத்தான் வீட்டுக்கு கிரஹபிரவேசம் செய்து குடிவரோம்….. பழைய வீட ரினவேட் செய்து வர்றதால பெருசா எதுவும் அரேஞ்ச் செய்யல….ஆனா பக்கத்து வீட்டுகாரங்க நீங்கல்லாம் கண்டிப்பா வந்துடனும்…” என தங்கள் வருகையின் காரணத்தை அறிவித்தார் அந்த  வேட்டிக்காரர்…

“என் பேர் ஜெபர்சன் இது என் வைஃப் சௌந்தரி...”  தங்களை அவர் அறிமுகமும் செய்து கொள்ள… …

“வாங்க….உள்ள வாங்க சார்… வாங்க மேம்…” என விவன் வரவேற்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.