(Reading time: 78 - 156 minutes)

ன்னி… ஜன்னி…. ம்ம்… என் செல்ல ஜன்னி என் பக்கத்துல இருக்கும்போது என் சந்தோஷத்துக்கு என்ன குறைச்சல்?...”

“ம்ம்… பாருடா ஐஸ்-அ….”

“ஐஸ்-ம் இல்லை… ஒன்னுமில்லை… நான் நிஜமாதான் சொல்லுறேன்… வேணும்னா உன் தம்பிகிட்டயே கேளு…”

“ஆமா சிஸ்… உங்களை மாதிரி ஒரு ப்ரெண்ட் கிடைச்சா கண்டிப்பா முகத்துல சந்தோஷத்துக்கு குறைவே இருக்காது….”

அர்னவும் மன நிறைவுடன் சொல்ல, ஜனனியின் முகத்திலோ இதமான புன்னகை தவழ்ந்தது…

“சரிடி… ஒரு வாரத்துக்கு முன்னாடியே வந்துடு… என்ன?...”

“எது?... ஒரு வாரமா?...”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தெய்வாவின் "காதல் கீதம்" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“ரொம்ப கம்மியா சொல்லிட்டனோ?... ம்ம்… அப்போ சரிடி… கிளம்பு… இப்பவே வீட்டுக்குப் போகலாம்…”

“எதுக்கு?...”

“கல்யாணத்துக்குத்தான்…”

“அதுக்கு இன்னும் ஒருமாசம் இருக்கே…”

“அது தெரியும்… அதான் உன்னை இன்னைக்கே கூட்டிட்டு போறேன்னு சொல்லுறேன்… சரிதான கார்த்தி… நான் சொல்லுறது?...”

தான் சொன்னது சரிதான் என்பது போல், அர்னவினையும் அவள் துணைக்கழைக்க,

அவனும் ஆம் என்றான் ஆமோதிப்பாய்…

“ஹேய்… அவ தான் ஏதோ புரியாம சொல்லுறான்னா?... நீயுமா அர்னவ்?...”

“ஆமா சிஸ்… தம்பிக்கு கல்யாணம்… சோ நீங்க இப்பவே அங்க வர்றது தான முறை?....”

“ஹேய்… என்ன இரண்டு பேரும் சேர்ந்து ஒரு முடிவோட தான் வந்திருப்பீங்க போல?...”

“அப்படி எல்லாம் இல்ல சிஸ்… எல்லாம் முறைப்படி செய்யுறோம்… அவ்வளவுதான்…”

“ஓஹோ… அப்படியா?...”

“என்ன ஓஹோ… ஆஹா… கிளம்பு பேசாம… நேரம் ஆச்சு…”

ஜானவி அவசரப்படுத்த, ஜனனி அமைதியாக இருந்தாள்…

“இதெல்லாம் சரி வராதுங்க… ஒரு நிமிஷம் இருங்க…” என்றவள், வேகமாக சென்று பேக் செய்து வைத்திருந்த பையினை கொண்டு வர, ஜனனி விழித்தாள்…

“என்னடி முழிக்கிற?... இது உன்னோடது தான்… எல்லாம் பேக் பண்ணியாச்சு… கிளம்பு…”

“ஏய் என்ன விளையாடுறீயா?... என்னோடதை எப்போ பேக் பண்ணின?...”

“அதெல்லாம் எப்பவோ பண்ணியாச்சு… நீ வா…” என அழைக்க, ஜனனிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை…

“இதப்பிடிங்க கார்த்தி… நீங்க இத கொண்டு போங்க… நான் இவளை கூட்டிட்டு வரேன்….”

ஜானவி பொறுமையாக சொல்ல, அர்னவும் ஜனனியின் பையினை வாங்கிக்கொண்டு முன்னே செல்ல, ஜானவியை முறைத்தாள் ஜனனி…

“பைத்தியாமாடி நீ… என்ன பண்ணுற நீ?...”

“உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போகப்போறேன்… பார்த்தா உனக்கு தெரியலை?...”

“கல்யாணத்துக்கு முந்தின நாள் கண்டிப்பா வருவேண்டி…”

“அது எனக்கும் தெரியும்… நீ கிளம்பு…..”

“விளையாடாத ஜானு… ப்ளீஸ்… புரிஞ்சிக்கோ…”

“புரிஞ்சதனால தான் சொல்லுறேன்… இந்த வீட்டுல தனியா இருந்து என்ன பண்ண போற?... அடிக்கடி சொல்லுவல்ல, அம்மா அப்பா கூட இருக்க எனக்கு ஏனோ விதி இல்லைன்னு… எத்தனையோ முறை உன்னை அங்க நம்ம வீட்டுக்கு கூப்பிட்டிருக்கேன்… நீ வரலை… அம்மாவும், அப்பாவும் இங்க வந்தே உன்னை கூப்பிட்டாங்க… அப்போ நீ என்ன சொன்னன்னு நினைவிருக்கா?... ஜானுக்கு கல்யாணம் முடிஞ்ச பின்னாடி கண்டிப்பா நான் அங்க உங்களோடவே வந்துடுவேன்னு அன்னைக்கு நீ சொன்ன… அதை நிஜமாக்க தான் நானும் உன் தம்பியும் சேர்ந்து தான் இந்த முடிவை எடுத்திருக்குறோம்… இனி நீ அங்க தான் தங்க போற நம்ம அப்பா அம்மாவோட… இனி அது தான் உன் வீடு… புரியுதா?...”

ஜானவி சற்றே ஆதங்கத்துடன் பேச, கண் கலங்க நின்றாள் ஜனனி…

“இப்பவும் அதான் சொல்லுறேன்… உனக்கு கல்யாணம் முடியட்டும்… அப்புறம் வரேன்…. “

“கிழிச்ச நீ… கல்யாணம் முடிஞ்ச கையோட யார்கிட்டயும் சொல்லாம எங்கேயோ எஸ்கேப் ஆக ப்ளான் போட்டிருக்கன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா?... எல்லாம் தெரியும் எங்களுக்கு… விசாரிச்சாச்சு…”

ஜானவி கோபமாக சொல்ல, ஜனனியே தன் உணர்வுகளை அடக்கப் போராடினாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.