(Reading time: 78 - 156 minutes)

ட்டென இருவரும் தங்களுக்குள் இருந்த இடைவெளியை அதிகரிக்க,

“என்ன தம்பி?... நான் இந்நேரம் நீங்க வீட்டுக்குப் போயிருப்பீங்கன்னுல்ல நினைச்சேன்…”

“ஒரு போன் வந்துச்சு… அதான் பேசிட்டே நின்னுட்டேன்….”

“ஓஹோ… போன் பேசி முடிச்சாச்சா?... இல்ல இன்னும் பேலன்ஸ் எதாவது இருக்கா?...”

அவள் சற்றே கேலியுடன் கேட்க,

“பேலன்ஸ் நிறைய இருக்கு சிஸ்…” என தன் மனதிற்குள்ளேயே சொல்லியவன், “வரேன் சிஸ்…” என ஜனனியிடம் சொல்லிவிட்டு,

“வரேன்….” என்பது போல் ஜானவியைப் பார்த்து தலையசைக்க, அவளும் வெட்கம் கலந்த புன்னகையுடன் சரி என தலை அசைக்க, அதன் பிறகே, பைக்கை உதைத்து கிளம்பினான் அர்னவ் அங்கிருந்து…

வரும் வழியெங்கும் அவளின் நினைவே இருக்க, வீட்டிற்கு வந்ததும், அவளின் நினைவு அதிகரித்தது…

தன் அறைக்குள் நுழைந்ததும் கதவை சாத்தியவன், அவளுக்கு போன் செய்ய, அவளும் எடுத்தாள் உடனேயே…

“கார்த்தி…. வீட்டுக்கு வந்துட்டீங்களா?...”

“இப்போதான்டா வந்தேன்…”

“சரிங்க… வேலை எதுவும் இருந்தா பாருங்க….”

“ம்ம்… சரி….”

“ம்ம்… வேற என்ன?....”

“வேற…. ம்ம்…”

“அக்கா எப்போ வராங்க கார்த்தி?....”

“இரண்டு நாள் கழிச்சு வருவாங்கன்னு நினைக்கிறேன்… அம்மா காலையிலேயே போன் பண்ணிட்டாங்க… நானும் சொல்லியிருக்கேன்… ம்ம்…. மட்டும் சொன்னாங்க…”

“இன்னும் அவங்களுக்கு கோபம் போகலையா?...”

“ஹ்ம்ம்… அப்படித்தான்னு நினைக்கிறேன்… விடு… சரியாகிடும்…”

“நான் பேசிப் பார்க்கவா?....”

“எங்கிட்ட எப்படியோ அப்படித்தான் உங்கிட்டயும்னு எனக்குத் தெரியும்டா….”

“ம்ம்….”

“அவங்க கோபமும் நியாயமானது தான்… அதான் இரண்டு நாள்ள ஊருக்கு வராங்கல்ல… அப்போ சரி பண்ணிடலாம்… கவலைப்படாத…”

“கண்டிப்பா கார்த்தி… நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறேன்….”

“சரிடா….”

“ஜனனி சிஸ் நான் அங்க இருந்து வந்ததும் உன்னை எதும் சொன்னாங்களா?...”

“அதெல்லாம் எதுவும் சொல்லலை… அப்படி எல்லாம் சொல்லிட்டு அவ எங்கிட்ட எஸ்கேப் ஆகிட முடியாது….”

“ஹ்ம்ம்… அதென்ன எல்லார்கிட்டயும் கோபப்படுற…  எங்கிட்ட மட்டும் அது ரொம்ப கம்மியா இருக்கு….”

“கம்மியா?... காலையில முறைச்சது நினைவில்லையா என்ன?....”

“ஹே… கேட்க மறந்துட்டேன் பார்த்தியா?... காலையில எதுக்குடி அப்படி முறைச்ச?...”

“பின்ன என் அழுகை அவளுக்கும் தொத்திக்கிச்சின்னு சொன்னா கோபம் வராதா?...”

“உண்மை அதான?...”

“கார்த்தி…. வேண்டாம்… திட்டு வாங்குவீங்க சொல்லிட்டேன்…”

“எங்க திட்டு பார்க்கலாம்…”

“நிஜமாவே திட்டிடுவேன்….”

“அதாண்டி திட்டு பார்க்கலாம்….”

அவனும் எதிர்பார்த்து காத்திருக்க, “போங்க லூசு…..” என்றாள் அவள் சிரித்துக்கொண்டே…

“இது தான் உங்க ஊர்ல திட்டுறதா?....”

“ம்ம்… இப்போ திட்ட தோணலை… அதான்….”

 “ஓ… என் சகிக்கு எப்போ திட்ட தோணுமாம்?...”

“அதெல்லாம் தோணுறப்போ போன் போட்டு திட்டுறேன்… இப்போ போய் ரெஸ்ட் எடுங்க… நான் போனை வைக்கிறேன்….”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.