(Reading time: 78 - 156 minutes)

நான் கல்யாணம் முடிஞ்சு கார்த்தி வீட்டுக்குப் போனதும், இங்க அப்பா, அம்மா தனியா ஆகிடுவாங்க… அவங்களை அப்படி தனிமரமா நிற்க வைச்சுப் பார்க்க ஆசைன்னா சொல்லிடு ஜனனி… நான் உன்னை கட்டாயப்படுத்தலை… என்ன தான் அம்மா, அப்பான்னு கூப்பிட்டாலும், அவங்க என்ன உன்னைப் பெத்தவங்களா?.. அவங்க எக்கேடு கெட்டுப் போனா உனக்கென்ன?... நானும் இல்லாம, நீயும் இல்லாம அநாதையா அவங்க இருக்கட்டும்னு நினைச்சிட்டல்ல?....”

ஜானவி சொல்லி முடித்தது தான் தாமதம் என்பது போல், அவளை ஓடிவந்து கட்டிக்கொண்டாள் ஜனனி…

“இல்லை……………… அப்படி சொல்லாத… அம்மாவும் அப்பாவும் எனக்கு வேணும்… என்னைக்கும் வேணும்…. நான் அவங்களைப் பார்த்துப்பேன்… அவங்க எனக்கு எவ்வளவோ செஞ்சிருக்காங்க இந்த நாலைஞ்சு வருஷத்துல… அதை சத்தியமா நான் மறக்க முடியாது என் உயிர் இருக்குற வரைக்கும்….”

அவள் வாய்விட்டு சொல்லி அழ, ஜானவியோ அவளின் முதுகினை வருடிக்கொடுத்தாள்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா" - சமூக அக்கறையுள்ள குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“என்னை மன்னிச்சிடுடா… உன்னை சம்மதிக்க வைக்க எனக்கு வேற வழி தெரியலை… அதான் இப்படி எல்லாம் பேசி உன்னை காயப்படுத்திட்டேன்… சாரிடா…”

மனதிற்குள்ளேயே அவள் தன் தோழியிடம் மன்னிப்பை யாசிக்க, ஜனனியோ அழுது தீர்த்துக்கொண்டிந்தாள்…

“அடடா… சிஸ் என்ன இது?... சின்னப்பிள்ளையாட்டம்?... இவ அழுகை உங்களுக்கும் தொத்திக்கிச்சா?...”

அவர்கள் இருவரையும் தேடி வந்த அர்னவ் கேலி செய்ய, ஜானவி அவனை முறைத்தாள்…

“ஏன் முறைக்குற?....”

“என்ன சொன்னீங்க இப்போ?....”

“என்ன சொன்னேன்… எதுவும் சொல்லலையே…”

“இல்ல இப்போ சொன்னீங்களே…”

“நான் எதுவுமே சொல்லலையேடா….”

“என் அழுகை உங்க அக்காக்கும் தொத்திக்கிச்சோ?....”

“ஹாஹா… அது சும்மா… கேலிக்கு….”

“ஓஹோ…”

ஜானவி கோபமாக அர்னவினை முறைக்க,

“ஹேய்… எதுக்குடி… என் தம்பியை முறைக்குற?... அவன் என்ன சொல்லிட்டான்னு இந்த பார்வை பார்க்குற?... அவன் உண்மையை தான சொன்னான்…” என்றாள் ஜனனி…

“ஏண்டி… என்னை அவர் தான் கலாய்க்குறார்னா அதுக்கு நீ சப்போர்ட் வேறயா?... உன்னை… என்ன பண்ணுறேன்.. பாரு…”

ஜானவி ஜனனியை அடிக்க துரத்த, அவள் ஓட, அர்னவ் அதைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான் ரசித்தபடி…

ஜானவியும், ஜனனியும் கிட்டத்தட்ட ஓரே சமயத்தில் தான் வேலைக்கு சேர்ந்தார்கள்…

ஜனனிக்கு அப்பா, அப்பா கிடையாது… பிறந்தது வளர்ந்தது எல்லாமே காப்பகத்தில் தான்… தனக்கென்று பிடிப்பாக படிப்பினை பிடித்துக்கொண்டவள், அதன் மூலம் ஒரு வேலைக்கும் சேர்ந்தாள்… அங்கே தான் ஜானவியையும் சந்தித்தாள்…

ஆரம்பத்தில் இயல்பாக ஆரம்பித்த அவர்களது விசாரிப்பு, அதன் பின் நட்பாக வளர்ந்தது… தனியாக ஒரு வாடகை வீட்டில், யாருமில்லா தனிமையில் வாழ்ந்த ஜனனியை, தன் வீட்டிற்கு அழைத்தனர், ஜானவியும் அவளைப் பெற்றவர்களும்…

அது சரியாகாது…. இது சரியாகாது என்று இழுத்தடித்தவளை, கடைசியில் ஜானவியின் பெற்றோர் வந்து அழைத்து செல்ல முயன்ற போது, ஜானவியின் திருமணம் ஒன்றை காரணம் காட்டி தள்ளிப் போட்டாள் ஜனனி…

“எப்போ அவ உன்னோட பேச ஆரம்பிச்சாளோ, அதுல இருந்து வீட்டுல எப்பவும் உன்னைப் பத்தி தான் பேசிட்டிருப்பா… எங்களுக்கு அவ வேற, நீ வேற இல்லம்மா… இரண்டு பேரையும் நல்ல இடத்துல கட்டிக்கொடுத்துட்டா போதும்… எங்களுக்கு நிறைவா இருக்கும்…”

ஜானவியின் அன்னை சொன்ன போது,

“முதல்ல அவ கல்யாணம் முடியட்டும்மா… நான் தான் உங்ககூடவே வந்து இருக்கப்போறேனே… கொஞ்ச நாள் உங்களோட சந்தோஷமா இருந்துட்டு அப்புறமா நீங்க யாரை கல்யாணம் பண்ணிக்க சொன்னாலும் நான் பண்ணிக்கிறேன்ம்மா… அதுவரை நான் இப்படியே இங்கேயே இருந்துடுறேனே… ப்ளீஸ்ம்மா… அதும் இல்லாம எனக்கும் கொஞ்ச நாள் வேணும், இந்த மாற்றத்தை எல்லாம் ஏத்துக்க….” என பிடிவாதமாய் உடன் வர மறுத்துவிட்டாள் ஜனனி…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.