(Reading time: 78 - 156 minutes)

ன்று அவள் சொல்லிவிட்டாளே தவிர, அவளால் அதனை முழுமையாய் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை… யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என்பது அவளின் எண்ணம்.. எனினும், ஜானவியின் அப்பா, அம்மாவை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது… இது போல பெற்றவர்களுடன் வாழ தனக்கு கொடுப்பினை இல்லையே என்று அவள் பல நாட்கள் ஏங்கியதுண்டு… அந்த ஏக்கமும் தீர்ந்து போக ஒரு வாய்ப்பு கிடைத்தபோது, அவள் மனது மகிழ்ந்த வேளையே, இல்லை அவர்களுக்கு நாம் பாரமாக இருக்கக்கூடாது என்றெண்ணியவள், உடனேயே, வேறு வேலை தேடிக்கொண்டு எங்கேயாவது சென்றுவிட வேண்டும் என முடிவெடுத்தாள்…

ஜானவியின் திருமணமும் உறுதி செய்யப்பட, அதிலிருந்து தன் முடிவினை செயல்படுத்த துவங்கினாள் ஜனனி… அதை தெரிந்தவர்கள் மூலம் கண்டுபிடித்திட்ட ஜானவியால், அதன் பின்னும் அமைதியாக இருக்க முடியவில்லை.. பெற்றவர்களிடமும், அர்னவிடமும், அவள் பேச, அவர்களும் அவளை அழைத்துவர சொல்லிட, ஜானவி பத்திரிக்கை கொடுப்பது போல் வந்து ஜனனியை தன்னுடன் இதோ உடன் அழைத்தும் சென்றுவிட்டாள்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வசுமதியின் "சர்வதோபத்ர... வியூகம்...!!!" - சாகசம் + கற்பனை + நகைச்சுவை கலந்த தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

தே நேரம்,

“வாங்க மிஸ்டர் திலீப்… இன்னைக்குத்தான் வழி தெரிஞ்சதா?...”

சரயூவோடு வந்திருந்த திலீப்பிடம், கேலியாக கேட்டார் மருத்துவர்…

“அப்படி எல்லாம் இல்ல டாக்டர்… கொஞ்சம் வேலை… அவருக்கு அதான்….”

திலீப் சொல்வதற்குள் முந்திக்கொண்டு பதில் சொன்னாள் சரயூ…

“சரயூ… நான் உங்ககிட்ட கேட்கலை…. சோ நீங்க பதில் சொல்லக்கூடாது…”

“சாரி டாக்டர்… அவ மேல கோப்படாதீங்க… என்ன வேலை இருந்திருந்தாலும் நான் வந்திருக்கணும்… வராம போயிட்டேன்… சாரி டாக்டர்…”

“ஹ்ம்ம்… சாரி எல்லாம் தேவையில்லை திலீப்… பட் உங்க வொய்ஃப் ஹெல்த் கண்டிஷன் எப்படி இருக்குன்னு தெரிஞ்சிக்கவாச்சும் நீங்க வந்திருக்கலாம்…”

“சாரி டாக்டர்…. சரயூக்கு இருக்குற ட்யூமர் சரியாகிடும் தான டாக்டர்?... ப்ளீஸ் டாக்டர்… எப்படியாவது சரி பண்ணிடுங்க… ப்ளீஸ்…”

கையெடுத்து கும்பிட்டு திலீப் கேட்க, அவனை ஆச்சரியமாகப் பார்த்தார் மருத்துவர்…

“ரிலாக்ஸ் திலீப்… நீங்க இப்படி எல்லாம் கேட்கவே வேண்டாம்… அஸ் அ டாக்டரா என் கடமையை நான் செய்வேன்… நீங்க கவலைப்படாதீங்க…”

“சரி டாக்டர்… ட்யூமர் சரி பண்ணிடலாம் தான?...”

“ஹ்ம்ம்… கண்டிப்பா குணமாகிடும்… லாஸ்ட் டைம் வந்தப்போ, எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாம தான் இருந்துச்சு… அதே மாதிரியே இந்த டைமும் இருந்தா கொஞ்சம் கிரிட்டிக்கல் தான்… ஆப்பரேஷன் தான் பண்ண…”

அவர் சொல்லிமுடிப்பதற்குள்,

“டாக்டர்?................... என்ன சொல்லுறீங்க?...”

திலீப் அதிர்ந்து போனவனாய் கேட்க,

“வெயிட் மிஸ்டர் திலீப்… என்னை முழுசா சொல்லவிடுங்க…”

“சரி டாக்டர் சொல்லுங்க…”

“அப்படி இருந்தா ஆப்பரேஷன் பண்ண வேண்டி வரும்… பட் ட்ரீட்மெண்ட்ல இம்ப்ரூவ்மெண்ட் இருந்தா ஆப்பரேஷனுக்கு அவசியமே இருக்காது….”

“இம்ப்ரூவ்மெண்ட் இருக்கான்னு சீக்கிரம் சொல்லுங்க டாக்டர்… ப்ளீஸ்…”

“ப்ளீஸ் வெயிட் திலீப்… ரிப்போர்ட்ஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும்… சோ பயப்படாதீங்க… டென்ஷன் ஆகாதீங்க… எல்லாம் நல்லதாகவே நடக்கும்…”

டாக்டர் சொல்ல, சரயூ புன்னகையுடன் தன் கணவனைப் பார்த்தாள்…

“நீங்க தான் டென்ஷன் ஆகுறீங்க… பாருங்க சரயூ எவ்வளவு ரிலாக்ஸா இருக்குறாங்கன்னு… எனக்கு தெரிஞ்சு அவங்க முகத்துல இவ்வளவு பொலிவை நான் பார்த்ததே இல்லை… அநேகமா அவங்க ரிப்போர்ட்ஸ் கூட இப்படி இருந்தா இன்னும் சந்தோஷப்படுவேன்…”

டாக்டர் சொல்லிக்க்கொண்டிருந்த போது, சரயூவின் ரிப்போர்ட்ஸ் வர, அதை வாங்கிப் படித்த டாக்டர், அவர்கள் இருவரையும் பார்க்க,

“சொல்லுங்க டாக்டர்… என்னாச்சு ரிப்போர்ட்ஸ்ல?... சொல்லுங்க டாக்டர்…, என் சரயூக்கு ஒன்னும் இல்லல்ல?...”

திலீப் தன் குரல் நடுங்க கேட்க,

“வெல்… குட் நீயூஸ் தான் திலீப்… சரயூவோட ட்யூமர், ரொம்பவே கரைஞ்சிருக்கு… நல்ல முன்னேற்றம் இருக்கு… இப்படியே போச்சுன்னா, இன்னும் இரண்டே மாசத்துல ட்யூமர் இருந்த இடம் தெரியாம கரைஞ்சிடும்…” என்றார் டாக்டர் சிரித்தவண்ணம்…

“தேங்க் காட் டாக்டர்… தேங்க்யூ சோ மச்….”

திலீப் மனதார, டாக்டரிடம் கூற, அவரும் பதிலுக்கு புன்னகைத்துவிட்டு, அடுத்த முறை செக்கப்பிற்கு இன்னும் முன்னேற்றத்துடன் வர சொல்லி அனுப்ப, இருவரும் மன நிறைவுடன் வெளியே வந்தனர்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.