(Reading time: 78 - 156 minutes)

திர்ந்து போய் நின்ற அர்னவினை வைத்த கண் வாங்காமல் பார்த்தவள், தன் உணர்வுகளை அடக்கப்போராடினாள்…

“சகி…. என்னாச்சுடா?....”

அவன் பேச பேச, அவள் அழுதாள்…

“சகி….”

அவன் மனம் தாங்காமல் அவள் பெயரை அழுத்தி உச்சரிக்க,

“எனக்கு இப்பவே உங்களை கட்டிக்கணும்… கட்டிக்கவா?....”

என்றாள் அவன் விழி பார்த்தவாறு…

என்னவோ ஏதோ என்று பயந்து போய் நின்றவன், அவளது வார்த்தைகளை கேட்டதும், கலங்கிய கண்களை கண்டுகொள்ளாது,

இருகை விரித்து, விழிகள் மூடி இமைத்து, ஒற்றை தலையசைப்புடன் அழைக்க,

“கார்த்தி……………………………………………….” என கதறியபடி அவனை ஓடிவந்து கட்டிக்கொண்டாள் அவள்….

தன்னை ஓடி வந்து அவள் அணைத்துக்கொண்டதும், அவனும் அவளை இதமாக அணைத்துக்கொள்ள, அவள் அழுது தீர்த்தாள்…

“வேண்டாம்டா… சொன்னாக்கேளு…” அவன் அவள் முதுகை நீவி விட, அவள் கேட்டாள் இல்லை…

அழுது முடித்து அவள் நிமிர, அவளின் முகத்தினை அழுந்த துடைத்துவிட்டவன்,

“என்னடா இது… பாரு… எப்படி கண்ணெல்லாம் சிவந்திருக்குன்னு… லூசு… எதுக்குடி இப்படி அழுத?.. இப்போ என்ன நடந்துச்சுன்னு?...”

அவன் சொல்லிக்கொண்டே அவளைப் பார்க்க, அவள் அவனையேப் பார்த்தாள்…

அவன் கண்களில் இருந்து வழிந்த நீரைக் கண்டவள்,

“ஐ லவ் யூ கார்த்தி…………… ஐ லவ் யூ கார்த்தி…………….” என்றபடி அவன் முகம் ஏந்தி, முத்தமிட்டாள் ஆசை தீர….

நெற்றி, கண், கன்னம், என மாறி மாறி முத்தமிட்டு அவனை விடுவித்தாள் அவள் மூச்சுவாங்க…

முத்தம் தந்த தித்திப்பு அவனுக்கு போதையேற்ற, அவளைப் பார்த்தான் அவன் மெல்ல விழிகளைப் பிரித்து…

வெட்கம் ஒருபுறம் உள்ளிருந்து தள்ள, மெல்ல தலை கவிழ்ந்து நின்றாள் அவள்…

அவளின் சந்தனப்புடவை, கூந்தலில் அவனுக்கு பிடித்த வாசம் மிகுந்த மல்லிகை….

அவனின் உணர்வுகள் மேலோங்க, மெல்ல அவளின் அருகே சென்றான்… அவளின் பின்னே சென்றவன், அவள் கூந்தலில் இருந்த மல்லிகையை அப்படியே கைகளில் அள்ளி எடுத்து வாசம் பிடிக்க, அதில் அவளது வாசமும் சேர்ந்து வந்து அவனைக் கிறங்கடிக்க,

அவளோ உடல் சிலிர்க்க நின்றாள் வெட்கம் பிடுங்கி தின்ன…

மெல்ல அவளின் தோள் பற்றி திருப்பியவன், அவளைத் தன்னைப் பார்க்க சொன்னான்…

அவள் மறுக்கவே, “ப்ளீஸ் சகி… என்னால இதுக்கு மேலயும் முடியாது…..” என கூற,

அவனை சட்டென நிமிர்ந்து பார்த்தவள், அவன் அவளையேப் பார்ப்பதை உணர்ந்து,

அவன் அதரங்களோடு சேர்த்து தன் இதழ்களை பிணைத்தாள் மெல்ல….

திடீரென நிகழ்ந்திட்ட முத்த இணைப்பில் பித்தம் தலைக்கேறியது அவனுக்கு…

அவள் அவனிடமிருந்து விலகி, கண்களை மூடி நிற்க, அவளது துடிக்கும் உதட்டினையும், மூடிய விழிகளுக்குள் போராடிக்கொண்டிருந்த இமைகளையும், வெட்கம் முகத்தில் பூவென பூத்திருப்பதையும் அவன் காண,

“இனி எதுக்காகவும் வெயிட் பண்ண வேண்டாம்… கார்த்தி…..” என்றது தான் தாமதம் என்பது போல், அவளை இறுக அணைத்து, அவளின் முகம் ஏந்தி முத்தமிட்டான் அவன் அவளது நெற்றியில்…

இருள் நீங்கி வானில் வெள்ளை மேகங்கள் உலவ ஆரம்பிக்க, பறவைகள் தங்கள் கூட்டினில் இருந்து எழும்பி, கீச் கீச் என்று சத்தமிட, ஆதவனின் ஒளி உலகிற்கு அந்த நாளின் விடியலை உணர்த்த,

ஜன்னலின் வழி, மரத்தில் இருந்த பறவைகள் கூட்டினை ரசித்துக்கொண்டிருந்தவள், மெல்ல திரும்பிட, கட்டிலில் குழந்தையைப் போல், உறங்கிக்கொண்டிருந்தான் அர்னவ்…

அவனது அருகில் சென்றவள், அவனது சிகை கோதி, நெற்றியில் முத்தம் ஒன்றை பதித்துவிட்டு, மீண்டும் ஜன்னலின் அருகில் வந்து அந்த விடியலை ரசிக்க ஆரம்பித்தாள்…

பூத்து குலுங்கிய பூவின் வாசம், அவளது நெஞ்சில் கணவனது வாசத்தை விதைக்க, வெட்கம் வந்து குடிகொண்டது அவளது நெஞ்சில்…

பூவில் தோன்றும் வாசம்

அது தான் ராகமோ….

இளம் பூவை நெஞ்சில் தோன்றும்

அது தான் தாளமோ

வயதில் தோன்றிடும்நினைவில் ஆன்ந்தம்

வளர்ந்தோடுதுஇசைபாடுது

வழிந்தோடிடும் சுவை கூடுது…”

வெளி உலகத்தை ரசித்தபடி அவள் பாட,

வானில் நேர்ந்த மாற்றங்கள், காற்றில் கூடிய இனிமை… அனைத்தும் அவளுக்குள் என்னவோ செய்ய, நேற்றிரவும் கண் முன்னே வர, தன்னை அறியாமல் கண்களை மூடிக்கொண்டாள் அவள்…

“வானில் தோன்றும் கோலம்…

அதை யார் போட்டதோ?...” என பாடிக்கொண்டிருந்தவள்,

சட்டென தன் மீது ஸ்பரிசம் உணர்ந்து திரும்ப, அங்கே அவளின் கணவன் நின்றிருந்தான் புன்சிரிப்புடன்…

“ம்ம்… அடுத்த லைன் பாடு…”

“ஹ்ம்ம்… ஹூம்ம்….”

“பாடு சகி… ப்ளீஸ்… நான் வேணும்னா எடுத்து கொடுக்கவா?...”

“பனிவாடை வீசும் காற்றில்……” என்றவன் தன் சுவாசத்தினை அவளது கழுத்தினில் உலவ விட

வெட்கம் பாதி, சிரிப்பு மீதியுமாய்,

“பனிவாடை வீசும் காற்றில்

சுகம் யார் சேர்த்ததோ…

வயதின் ஆசைகள்…

மலரின் கோலங்கள்…”

அவன் மெதுவாக அவளது காது மடலை வருட, சிணுங்கினாள் அவள்…

குயிலோசையின் பரிபாஷைகள்

அதிகாலையின் வரவேற்புகள்:…”

“ஹ்ம்ம்… இதுதான…. அடுத்த லைன்…” அவன் சிரிப்புடன் கேட்க, அவளோ ஆம் என்றாள்…

அவனும் சிரிக்க, அவனது இறுக அணைத்துக்கொண்டவள்

புத்தம் புது காலை

பொன்னிற வேளை

என் வாழ்விலேதின்ந்தோறும் தோன்றும்

சுகராகம் கேட்கும்….

எந்நாளும் ஆனந்தம்…..”

என்றவாறு அவனது நெஞ்சில் இதழ் பதித்தவள், அவனது முகம் பற்றி,

“இந்த காலையை என் வாழ்க்கையில நான் மறக்கவே முடியாது கார்த்தி… என்னோட கார்த்தி… என் பக்கத்துல… என் கணவனா…. ம்ம்…. நிஜமாவே இது புத்தம் புது காலை தான்ல கார்த்தி….”

அவள் அவன் விழி பார்த்து கேட்க,

“என்னாலயும் மறக்க முடியாது… இந்த காலையை மட்டுமில்ல… இனி வர்ற ஒவ்வொரு காலையும், நமக்கு புத்தம் புது காலை தான்…” என்றவன் சட்டென அவள் இதழை சிறை செய்தான் மென்மையாக…

ஆதவனோ தன் ஒளியால் அவர்களுக்கு இடையூறு தராது, நாணி அகல, பறவைகளின் கீச் கீச் ஒலியோ அவர்களுக்கு இசையாய் தோன்ற, அதிகாலை தென்றலோ, அவர்களது ஆலிங்கன நிலையைக் கண்டு சத்தமில்லாமல் ஜன்னல் கதவைச் சாத்தி சென்றது வெட்கச் சிரிப்புடன்…

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்…

முதல்ல ஒரு பெரிய சாரி சொல்லணும்…

இரண்டு வாரமா அப்டேட் கொடுக்காததுக்கு மன்னிச்சிடுங்க…

இறுதி அத்தியாயம் எழுத இதுவரை எந்த கதைக்கும் நான் இத்தனை நாள் எடுத்துக்கொண்டதில்லை…  

எழுத அமரும்போதெல்லாம் ஏதேனும் ஒரு தடை வந்திடும்… இதில் உடல்நலக்குறைவு வேறு…

அத்தனையையும் தாண்டி மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த இறுதி அத்தியாயத்தை எழுதினேன்…

பிழைகள் ஏதேனும் இருந்தால், மன்னித்துவிடுங்கள்…

ஹ்ம்ம்… படித்துவிட்டு கூறுங்கள்… பிடித்திருக்கிறதா என?...

ரொம்ப நன்றி… இத்தனை நாள் இறுதி அத்தியாயத்தை படிக்க ஆவலோட வெயிட் பண்ணிட்டிருக்கீங்க…

நான் தான் கால தாமதமா கொடுத்திட்டேன்… மன்னித்துவிடுங்கள்….

சில்சீக்கு மிகவும் நன்றிகள்… எனக்கு உறுதுணையாக இருந்து, கதை எழுத வாய்ப்பு கொடுத்தமைக்கு… நன்றி சில்சீ…. ரொம்ப நன்றி…

இது என்னுடைய நான்காவது தொடர்கதை…

இதை எழுத ஆரம்பித்த போது எத்தனை வரவற்புகள் இருந்ததோ, அதே வரவேற்பு, இறுதி அத்தியாயம் வரையிலும் எனக்கு தொடர்ந்து கொடுத்த அத்தனை தோழர், தோழியர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்…

வாய்ப்பு கிடைத்தால், மீண்டும் ஒரு புதிய தொடர்கதையில் அடுத்தவாரம் சந்திக்கலாம்…. நன்றி…

சுபம்!

Episode # 36

{kunena_discuss:995}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.