(Reading time: 78 - 156 minutes)

னக்குத் தெரியும்டா நீ இப்படிதான் கண்ணுல நீரோட, முகம் எல்லாம் சந்தோஷமா படபட்த்து போய் நிப்பேன்னு தெரியும்… அதனால தான் இத்தனை நாள் உங்கிட்ட சொல்லாம மறைச்சேன்….”

“எதுக்கு கார்த்தி?... ஏன்?....”

அவள் அழுகையாய் கேட்க,

“உனக்காகத்தான்….” என்றான் அவன் ஒற்றை வார்த்தையில்…

அவள் அதிர்ந்து நிற்கையிலே, அவளை விட்டு சற்று தூரம் தள்ளிச் சென்றவன், சில மாதங்கள் முன்பு நடந்த நிகழ்வை கூறத்துவங்கினான் அவளிடத்தில்…

ஜானவி சொல்லும்போதெல்லாம் பரீட்சை எழுத ஆர்வமில்லாமல் இருந்தவன், ஒரு கட்ட்த்தில், அவளுக்காக, ஒரு தடவை எழுதினான்… அதன் பின்னர், இனி எழுத மாட்டேன் என அவளிட்த்தில் சொல்லியவன், அவளுக்கே தெரியாமல், அதனை முயற்சி செய்தான்…

சிவில் டிபார்மெண்டில் வேலை போட்டிருக்காங்க… எழுதுறீங்களா?... என அவள் கேட்ட போது, அவன் அதற்கு தான் அப்ளை செய்து கொண்டிருந்தான் அவள் முதன் முதலில் சொல்லிக்கொடுத்த போது எழுதி வைத்திருந்த நோட்டினை அருகில் வைத்துக்கொண்டு…

ஆனால் அவளிடமோ, தனக்கு விருப்பமில்லை…. என்றான்…

முழு முயற்சி எடுத்து படித்தான்… அவள் சொல்லிக்கொடுத்த கொஞ்சம், அது போக அவன் தானாக படித்தது அனைத்தையும் வைத்து அவன் தேர்வையும் எழுதி முடித்தான்…

அதன் ரிசல்ட்டும் வந்த நேரத்தில், சரயூவின் பிரச்சினை வர, அவன் செய்வதறியாது திணறி நின்றான்…

யாரிடத்திலும் எதுவும் சொல்லாமல் அமைதி காத்தான்…

அந்த தருணத்தில் தான் ஜானவிக்கு மாப்பிள்ளை பார்க்கும் விஷயம் அவன் காதுக்கு எட்ட, குழம்பி போய் நின்றான் அவன்…

இண்டர்வியூக்கு வர சொல்லும் நாளை எதிர்நோக்கி அவன் காத்திருந்து காத்திருந்து சலித்துப்போன தருணத்தில் தான், அவளது தகப்பனை சந்தித்து பேசினான் அர்னவ்…

தனக்கு தற்போது நிரந்தர வேலை இல்லை எனவும், சீக்கிரமே நிரந்தர வேலையுடன் வந்து பெண் கேட்பதாகவும், அதுவரை ஜானவிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யாமல் இருங்கள் எனவும் அவன் வேண்டிக்கேட்டுக்கொள்ள, ஜானவியின் தகப்பனும், முதலில் கோபப்பட்டாலும் பின் சரி என்றார்…

அதன் பின்னர், இண்டர்வியூக்கு அவன் வர சொல்லி அழைப்பு வர, நல்ல முறையில் அவன் அதனையும் அட்டெண்ட் செய்ய,

“இண்டர்வியூல செலக்ட் ஆனவங்க லிஸ்டை நாங்க கொஞ்ச நாள் கழிச்சு தான் வெளியிடுவோம்… நீங்க செலக்ட் ஆகியிருந்தா அதுக்கான லெட்டரை வீட்டுக்கே அனுப்பிடுவோம்…” என்றனர் இண்டர்வியூ செய்த ஆஃபீசர்கள்…

அந்த நேரத்தில் ஒருநாள், “என் பொண்ணுக்கு வேற ஒரு வரன் வந்திருக்கு… பையனுக்கு நல்ல வேலை… குடும்பமும் நல்லவங்களா தெரியுறாங்க… உங்க சொல்படி நான் இதுவரை வெயிட் பண்ணிட்டேன்… நீங்களும் எதுவுமே சொல்லமாட்டிக்குறீங்க… இனியும் வெயிட் பண்ணுறது சரிதானான்னு எனக்குத் தெரியலை தம்பி… என்னை மன்னிச்சிடுங்க….”

அவர் மகளைப் பெற்ற தகப்பனாய் பேச, அவனுக்கு அவர் மனநிலை புரிந்த்து…

கவர்மெண்ட் பரீட்டை எழுதுறது பெரிய விஷயம்னா, அதுக்கு ரிசல்ட் வந்து, இண்டர்வியூக்கு கூப்பிட்டு, அதுக்கு பின்னாடி அப்பாயிண்ட்மென்ட் லெட்டர் வந்து, போஸ்டிங்க் போடுறதுக்குள்ள வருஷக் கணக்காகிடும்…

இதுக்குத்தான ஆட்கள் எல்லாரும் தனியார் கம்பெனியை போயி சேருராங்க… சும்மாவா பெரியவங்க சொன்னாங்க கவர்மெண்ட் வேலை எல்லாம் குதிரைக்கொம்புன்னு…

டீக்கடையில் இருந்த ஆட்கள் பேப்பர் பார்த்து பேசிக்கொண்டது அந்த வழி சென்ற அர்னவின் காதுகளிலும் விழ, தன்னால் அவள் வாழ்க்கை பாழாய்ப் போயிடக்கூடாதென்று எண்ணினான்…

உடனேயே வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை துவங்கியவன், மறுநாள் ப்ளைட் என்றிருக்க, கடைசியாக அவளிடம் பேச வேண்டுமென்றெண்ணி, அவளுக்கு போன் செய்தான்…

தான் வெளிநாடு செல்லவிருப்பதாகவும், இனி இந்தியா திரும்பி வரமாடேன் எனவும், அவன் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டு, அவன் தனதறையில் அழுது புலம்பிக்கொண்டிருந்த போது, அவனது அம்மா வாசந்தி வந்து கதவைத் தட்டினார்…

கதவைத் திறந்தவனிடம்,

“அர்னவ்… உனக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு… பாரு…” என நீட்ட, அவன் அதை அலட்சியமாய் வாங்கிக்கொண்டு, கட்டிலில் எரிந்தான்…

பின் மீண்டும் அவளை நினைத்து வருந்தியவன், தனது செல்போனை எடுக்க முயன்ற போது, அந்த லெட்டர் அவன் கண்ணில் பட, அதை கையில் எடுத்தான்…

எடுத்ததுமே புரிந்தது அது என்ன லெட்டர் என…

உடனேயே வெளியே கிளம்பி சென்றவன், ஜானவியின் தந்தைக்கு போன் செய்து ஓரிடத்திற்கு வர சொல்ல, அவரும் அங்கே வந்தார்…

வந்தவரிடம், “இது என் வேலைக்கான லெட்டர்… பிரிச்சுக்கூட பார்க்கலை… லெட்டர் கிடைச்சதும் நேரே உங்ககிட்ட தான் கொண்டு வரேன்… கண்டிப்பா வேலையில சேர சொல்லி தான் லெட்டர் வந்திருக்கும்… அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு… இருந்தாலும் அதை உங்க கையில கொடுத்து, நீங்க சொல்லி தெரிஞ்சிக்கணும்னு நான் நினைக்கிறேன் மாமா… ப்ளீஸ்… படிங்க…”

அவன் கெஞ்சலுடன் கேட்க, அவரும் அதனை வாங்கி பிரித்து படித்து பார்த்தார்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.