(Reading time: 78 - 156 minutes)

ன்னது?....”

அவள் விழி விரிய அவனைப் பார்க்க,

“இது உன்னோட ரொம்ப நாள் ஆசைன்னு எங்கிட்ட சொன்ன தான?... என்னால அப்போ நிறைவேத்த முடியலை… அதான் இப்போ நிறைவேத்தணும்னு ஆசைப்படுறேன்… ப்ளீஸ்டி… மறுக்காத…” என்றான் அவன்…

கணவனின் இந்த செயல் அவளுக்கு சந்தோஷத்தையும் மகிழ்வையும் அள்ளி அள்ளித்தந்தது இனிதே…

எனினும், இந்த வயதில்?... அவள் மேலும் தயங்கி நிற்க, அவன் அவளை நெருங்கினான்…

“எனக்காக செய்ய மாட்டீயா?...”

அவன் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு கேட்க, அவள் தயங்கி நின்றாள்..

“சரி நீ செய்ய வேண்டாம்…”

கோபமாக முறுக்கிக்கொண்டவன், கட்டிலில் சென்று படுத்துக்கொண்டு கண் மூடிட,

அவளுக்கு சிரிப்புதான் வந்தது…

“திலீப்……”

அவள் அழைக்க, அவனிடத்தில் எந்த சத்தமும் இல்லை…

“திலீப்……………”

“……………………….”

“திலீப் உங்களைத்தான் கூப்பிடுறேன்…”

“………………..”

அவனது செய்கை, மேலும் சிரிப்பைத் தர, அவனருகே சென்று நின்றாள்…

அவன் தோள் மேல் அவள் கைவைக்க, அவன் அதை தட்டி விட்டான்…

“திலீப்… இதென்ன சின்னப்பிள்ளை மாதிரி கோபம்?...”

அவள் அமைதியாக கேட்க, அவன் முறைத்தான் அவளை…

“நீ தான் மறுத்துட்டல்ல?... அப்புறம் என்ன விடு….”

“அய்யோ திலீப்… சரி….ஓகே…”

“என்ன?....”

அவன் எழுந்து அமர்ந்து கேட்க,

“நீங்க சொன்னதுக்கு ஓகே…. போதுமா?...”

“நிஜமாவா?....” அவன் சந்தோஷத்தோடு வினவ,

“ஆமா நாளையில இருந்தே பாட்டுக்கத்துக்குறேன்… அவங்களை வர சொல்லுங்க….”

“ஹேய்….” என்றவன் அவளைத் தூக்கி சுற்ற, திலீப் விடுங்க என்று கெஞ்சினாள் அவள்...

அவளை மெல்ல இறக்கி விட்டவன், அவள் முகம் பார்த்துக்கொண்டே இருந்தான்…

“இப்படியே பார்த்துட்டிருந்தா விடிஞ்சிடும்….” என்றாள் அவள் சிறு கேலியோடு….

“ஓஹோ… அப்படியா?...” என்றவன் அவளை இழுத்தணைத்து, “இப்போ…..” எனக்கேட்க, அவள் வெட்கத்துடன் அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள்…

பொழுது புலர்ந்து அறையினுள் வெளிச்சம் பரவ, மெல்ல கண் விழித்தாள் சரயூ…

அயர்ந்து தன்னருகே உறங்கும் கணவனைப் பார்த்தவளுக்கு, இத்தனை வருடம் வாழ்ந்த வாழ்க்கை கண் முன் வர, அதிலிருந்து வேறுபட்டு நின்றது அந்த நாள் விடியல்… அது அவளுக்கு புது மலர்ச்சியைத் தர, தானாகவே அவள் இதழ்கள் முணுமுணுத்தது அவளின் மனதிற்கு பிடித்தமான பாடலை…

புத்தம் புது காலை….

பொன்னிற வேளை

என் வாழ்விலே

தின்ந்தோறும் தோன்றும்

சுகராகம் கேட்கும்

எந்நாளும் ஆனந்தம்….”

சத்தம் கேட்டு கண் விழித்த திலீப், அருகில் அமர்ந்து தன் மனைவி தன்னையேப் பார்த்து பாடிக்கொண்டிருப்பதைக் கண்டு எழுந்தவன், அவளை இழுத்தணைத்து தன் மேலேயே சரித்து கொள்ள, அவளும் அந்த புத்தம் புது காலையினை தன் கணவனின் நெஞ்சத்தில் சாய்ந்து வரவேற்றாள் காதலுடன்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.