(Reading time: 78 - 156 minutes)

பார்த்தவருக்கோ என்ன சொல்வதென்று தெரியவில்லை… வேலையோடு வந்து பெண் கேட்பேன்… என்று சொன்ன வாக்கை நிறைவேற்றிவிட்டான் அவன்…

ஒரு தகப்பனாய் நான் என் பெண்ணிற்கு என்ன செய்யப்போகிறேன்?.. அவள் விரும்பியவனுடன் அவளை சேர்த்து வைக்கப்போகிறேனா?... இல்லை, ஜாதி, கௌரவம், அந்தஸ்து அனைத்தும் பார்த்து, இந்த சின்னஞ்சிறுசுகளை பிரிக்கப் போகிறேனா?... என்ன செய்யப்போகிறேன் நான்?... என அவர் தனக்குள் உழன்று கொண்டிருந்த வேளை,

இன்னும் என்ன கேள்வி உனக்கு?... கட்டிவைத்தால் கவர்மெண்ட் வேலைக்காரனுக்குத்தான் என் பெண்ணை கட்டி வைப்பேன்னு வீர வசனம் பேசினது நீ தான?... அதை என்னைக்கோ உன் பொண்ணு எதேச்சையா அவங்கிட்ட சொல்லியிருக்கா… அவன் அதை மனசுலயே வச்சு அவ நெருங்கும்போதெல்லாம், தன் வேலையை முன்னால வச்சு ஒதுங்கி போயிருக்கான்…

கடைசியில அவனால ஒதுங்கி போக முடியலைன்னு தெரிஞ்ச பின்னாடி,, உன் ஆசையை நிறைவேத்த பாத்து, அதுக்காக, போராடி, உங்கிட்ட கெஞ்சி, இப்போ வேலையையும் வாங்கிட்டு வந்து நிக்குற இந்த பையனை விட சரியான மாப்பிள்ளையை நீ உன் பொண்ணுக்கு பார்க்க முடியாது… அத புரிஞ்சிகிட்டு மேற்கொண்டு ஆக வேண்டிய காரியத்தைப் பாரு… என அவரின் மனசாட்சி அவருக்கு உண்மையை எடுத்துரைக்க,

“நிச்சயமா நான் ஜானவியை நான் நல்லா பார்த்துப்பேன் மாமா.... உங்களுக்கு இன்னமும் என் மேல நம்பிக்கை இல்லன்னா, பரவாயில்லை மாமா… நான் வெளிநாடு கிளம்புறதா முடிவெடுத்துட்டேன்… இனி இந்தியா பக்கமே வரமாட்டேன்… என்னால ஜானவி வாழ்க்கையில எந்த பிரச்சினையும் வராது… அவளை நான் விரும்புறது கூட அவகிட்ட நான் தெரியப்படுத்திக்கலை… உங்ககிட்ட தான் முதல்ல சொன்னேன்… இவ்வளவு ஏன், இந்த வேலை, அதுக்காக நான் பட்ட கஷ்டம் எதுவுமே அவளுக்கு தெரியாமலே இருக்கட்டும்… நான் வரேன் மாமா…”

அவன் சொல்லிவிட்டு நகர, அவர் ஓடிச்சென்று அவன் கைகளைப் பிடித்துக்கொண்டார்…

“சத்தியமா, உங்களை விட ஒரு நல்ல மாப்பிள்ளை என் பொண்ணுக்கு கிடைக்காது….” என்றவர்,

“நாளைக்கே பொண்ணு பார்க்க வாங்க… வீட்டுல இருக்குறவங்க கிட்டயும் பேசி கலந்துட்டு…” என சொல்லிவிட்டு செல்ல, அவனும் நேரே வீட்டிற்கு சென்று தெரியப்படுத்தி நாளையே கிளம்ப வேண்டும் என்று கூறி, பிறகு பெண் பார்க்க வந்து, அதன் பின்னர் தான் என்னன்னவோ ஆகி விட்டதே… ஆம்… இன்று அனைத்தும் சுபமாக முடிந்தும் விட்டதே…

நடந்த நிகழ்வினை மறைக்காமல் அர்னவ் ஜானவியிடம் கூற, அவளின் முகமோ பலவித உணர்ச்சிகளை பிரதிபலித்தது…

அவளின் மன்நிலை புரிந்தார் போல அவளருகே வந்தவன், “மாமா மேல எந்த தப்பும் இல்லை… அவர் தான் பெத்த பொண்ணு சந்தோஷமா வாழணும்னு ஆசைப்பட்டு சில முடிவுகளை எடுத்து வச்சிருந்தார்… அதுல ஒன்னு தான் வரப்போற மாப்பிள்ளைக்கு இருக்குற உத்தியோகம்… அத நீ ஆரம்ப காலத்துல கிண்டலா சொன்ன நினைவிருக்கா?...”

“எங்க அப்பா நாடோடிகள் பட்த்துல வர மாதிரி, இந்த கையில அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுங்க… இந்த கையில என் பொண்ணை உங்க கையில பிடிச்சு கொடுக்குறேன்னு சொல்லிட்டிருக்குறார்… நீங்க வேற?... மாப்பிள்ளை பிசினெஸ் மேன் அது இதுன்னு சொல்லுறீங்க… அப்படி எல்லாம் இருந்தா கண்டிப்பா ரிஜெக்ஷன் தான்ப்பா…”

அவள் இலகுவாக அவர்கள் பேசி பழகிய ஆரம்ப காலத்தில் அவனிடம் சொன்னதை அவன் நினைவுபடுத்திக்கூற, அவள் சிலையாக நின்றாள்…

“அன்னைக்கு நீ சொன்னது தான் அதுக்குப் பின்னாடியும் என மனசுல உறுத்திட்டே இருந்துச்சு… ஆனா அந்த உறுத்தல் இப்படி வேலையும் வாங்க வைக்கும்னு அந்தநேரத்துல நானே நினைச்சுப்பார்க்கலை… வேலையோட உன்னை பொண்ணு பார்க்க வந்தா, நீ வேற அப்படி ஒரு முடிவெடுத்துட்ட… அதுக்குப் பின்னாடி தான் யோசிச்சேன்… உன்னை ஒரு நல்ல வேலையில உட்கார வச்சு பாக்கணும்னு தான் மாமா ஆசப்பட்டார்….. அதை ஏன் நாம செய்யக்கூடாதுன்னு தான் கல்யாணத்தை தள்ளி போட்டேன்….” என்றவன், அந்த நிகழ்வினையும் அவளிடத்தில் கூறி முடிக்க,

கண்களில் கண்ணீரோடு அவனை கையமர்த்தி தடுத்தாள் அவள்….

“சகி… நான்… சொல்ல வந்ததை….”

அவனை பேச விடாது அவள் மீண்டும் கையமர்த்தி தடுக்க, அவன் அதிர்ந்து போனவனாய் நின்றான்…

தே நேரம்,

சரயூவின் அறையில் உறைந்து போய் நின்றாள் அவள்…

“திலீப் என்ன சொல்லுறீங்க?...”

“உண்மையை தான் சொல்லுறேன்…”

“விளையாடாதீங்க திலீப்…. இந்த வயசில நான் போய்….”

“லூசு மாதிரி பேசாத… கத்துக்குறதுக்கு ஆர்வம் இருந்தா போதும்… வயசு ஒரு தடையே இல்லை…”

“முடியாது நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கமாட்டேன்…”

“அப்போ நானும் உங்கிட்ட பேசமாட்டேன்…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.