(Reading time: 78 - 156 minutes)

ப்போதான் சரயூ… மனசுக்கு நிம்மதியா இருக்கு….”

வீட்டிற்கு வந்ததும், மனைவியின் கைகளைப் பிடித்துக்கொண்டான் திலீப்…

“நானும் பார்த்துட்டு தான் இருந்தேன்… எவ்வளவு பதட்டம் உங்களுக்கு?... ஏன் திலீப்?...”

“பின்ன பதட்டப்படாம எப்படி இருக்க முடியும்?...”

“ஏன் எனக்கு எதுவும் ஆகிடும்னு பயந்துட்டீங்களா?...”

“என்ன வார்த்தை பேசுற நீ?... அதெல்லாம் உனக்கு எதுவும் ஆகாது…”

“ஒருவேளை ஆகிட்டா?...”

“ஒரு தடவை நான் எல்லாத்தையும் இழந்தேன்… என் அம்மா உட்பட… இன்னொரு தடவையும் நான் நேசிக்கிற உறவுகளை இழக்க மாட்டேன்… முக்கியமா அம்மாவா என்னைப் பார்த்துக்குற என் சரயூவை….”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "கிருமி" – காதல் கலந்த விறு விறு தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

திலீப் அவள் விரல்களை விடாத வண்ணம் சொல்ல, சரயூவோ அவனை அணைத்துக்கொண்டாள்…

“நாம இழந்ததெல்லாம் போதும் திலீப்… இனியாவது சந்தோஷமா வாழலாம்…. உங்களுக்கு எல்லாமாவும் நான் இருப்பேன்… என்னைக்கும்… சரியா?...”

சரயூ திலீப்பிடம் அன்பாக கூற, அவனும் புன்னகைத்தபடியே அவளை அணைத்துக்கொண்டான் இதமாக…

“சரயூ அத்தை கொஞ்ச நேரம் முன்னாடி போன் பண்ணினாங்க… டிரெஸ் எடுக்கணும் அதனால எல்லாரும் வாங்கன்னு சொன்னாங்க…”

“ஆமாங்க எனக்கும் போன் பண்ணி சொன்னாங்க…”

“சரி எப்போ போகணும்னு சொல்லு… போயிட்டு வரலாம்…”

“ஹ்ம்ம்… சரிங்க…”

“அத்தை என்னக்கு வர சொன்னாங்க சரயூ?...”

“இரண்டு நாள் கழிச்சு நாள் நல்லாயிருக்குன்னு சொன்னாங்க… அன்னைக்கே போகலாம்னும் சொன்னாங்க…”

“அப்போ சரி சரயூ…” என்றவன் நினைவு வந்தவனாக,

“இன்னும் அர்னவ் கிட்ட நீ பேசலை தான?...” எனக் கேட்க, அவள் பதில் சொல்லவில்லை…

“இன்னும் என்ன கோபம் உனக்கு?... அவன் பாவம் தான… அவனை மன்னிச்சி விட்டுடேன்…”

“கோவம் இருந்ததென்னவோ உண்மைதான்… ஆனா உண்மை எல்லாம் எப்போ ஜானவி அப்பா சொன்னாங்களோ அப்பவே போயிட்டு… இருந்தாலும் சும்மா உல்லுலாய்க்கு அவன் கிட்ட பேசாம இருக்குறேன்….”

“உண்மையா?... என்ன சொல்லுற சரயூ?...”

“அது உங்களுக்கு தெரியாதுல்ல?... இருங்க சொல்லுறேன்…” என்றவள் அவனிடம் அனைத்து உண்மைகளையும் கூற, திலீப்பிற்கு அர்னவின் மேல் இருந்த மதிப்பு பன்மடங்கானது…

“நிஜமாவே அர்னவ் கிரேட் சரயூ… ஆனா அவன் நல்லது தான பண்ணியிருக்கான்… அதுக்கு போய் நீ கோபப்பட்டு பேசாம இருக்குறீயே…”

“நீங்க வேற… அப்பா சொன்ன அன்னைக்கே, எனக்கு கோவமெல்லாம் பறந்து போயிட்டு… அந்த பக்கி எங்கிட்டயே மறைச்சிருக்கான் பாருங்க எல்லாத்தையுமே… லவ் பண்ணுறத தான் சொல்லலை… அட்லீஸ்ட் இந்த நல்ல விஷயத்தையாவது சொன்னானா?... சரியான கேடி அவன்…”

“ஹேய்… பாவம் சரயூ அவன்… திட்டாத….”

“இதோடா… அவனுக்கு என்ன நீங்க சப்போர்ட்டா?...”

“பின்ன இப்படி ஒரு தம்பி கிடைக்க நீ குடுத்துதான் வச்சிருக்கணும்…”

“அதென்னவோ உண்மைதான்…”

“ஹ்ம்ம்… நல்ல தம்பின்னு அவன் என்னைக்கோ நிரூபிச்சிட்டான்… பெத்தவங்களுக்கு நல்ல புள்ளைன்னும் பேர் வாங்கி நிரூபிச்சிட்டான்… இப்போ மாமனாருக்கு நல்ல மருமகன்னு நிரூபிச்சிட்டான்… இது எல்லாத்துக்கும் மேல கல்யாணத்துக்கு முன்னாடியே கணவன்னா இப்படித்தான் இருக்கணும்னும் நிரூபிச்சிட்டான்… ரியலி ஹீ இஸ் கிரேட் சரயூ…”

“கண்டிப்பாங்க… அவனை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு….”

“ஹ்ம்ம்.. நான் தான் அவனை புரிஞ்சிக்காம போயிட்டேன்… அதை இப்போ நினைச்சாலும் ரொம்ப கஷ்டமா இருக்கு….”

அவன் பழைய நினைவுகளில் மூழ்க, அவனை அதிலிருந்து வெளியே கொண்டு வந்தாள் அவள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.