(Reading time: 22 - 44 minutes)

பூஜை முடிந்து வீட்டுக்கு கிளம்புவதற்காக, வீட்டிலிருந்து எடுத்து வந்த பொருட்களை வாணியும், நர்மதாவும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்... கங்காவோ இளங்கோவோடு அவனது அலுவலக அறையில் பேசிக் கொண்டிருந்தாள்...

"கங்கா... நீ ஏன் துஷ்யந்த் கிட்ட அப்படி பேசுன.. அவருக்கு நீ தான் சகுந்தலான்னு தெரியாது... அவர் எந்த மனநிலையில இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்காருன்னு தெரிஞ்சும் இப்படி நீ கேக்கலாமா..??"

"சாரி இளங்கோ... பேசினதுக்கு அப்புறமா தான், தப்புன்னு தோனுச்சு... இனி அப்படி பண்ண மாட்டேன்...

ஆமாம் நர்மதா, யமுனாவை இதுக்கு நீ இன்வைட் பண்ணலையா..??"

"இல்ல.. சிம்பிளா தான் செய்யப் போறதா சொல்லிட்டேன்... ஈவ்னிங் சின்னதா ஒரு ட்ரீட் வைக்கப் போறதா சொல்லி அவங்களை வரச் சொல்லியிருக்கேன்..."

"சரி நர்மதாவுக்கு கல்யாணம் முடிவாயிருக்குன்னு நீ ஏன் என்கிட்ட சொல்லல..??"

"என்ன சொல்ற..?? நர்மதாவுக்கு கல்யாணமா..?? உனக்கு யார் சொன்னா..??"

"அப்போ உனக்கே தெரியாதா இளங்கோ... அவளுக்கு கல்யாணம் முடிவாகி, இன்னைக்கு புடவை எடுக்கறாங்க...  நீ தெரியாதுன்னு சொல்ற..??"

"நிஜமா தெரியாது கங்கா... அவங்க ரெண்டுப்பேரையும் நான் லாஸ்ட்டா, உன்னோட புக்கை கொடுக்க வரச் சொன்னேனே அப்போ தான் பார்த்தேன்... அதுக்கப்புறம் பார்க்கல, ஆனா வாட்ஸ் அப் ல அடிக்கடி சேட் பண்ணிக்கிட்டு தான் இருக்கோம்... இதைப்பத்தி நர்மதா எதுவும் சொல்லலையே... சரிவிடு அவ உடனே சொல்லாததுக்கு ஏதாவது ரீஸன் இருக்கும்... ஆமாம் உனக்கெப்படி இந்த விஷயம் தெரியும்..??"

"நான் இன்னைக்கு நர்மதாவோட தான் ஆட்டோவ ஷேர் பண்ணி வந்தேன் இளங்கோ... அப்போ தான் அவ தான் நர்மதான்னும், அவளுக்கு கல்யாணம்னும் தெரிய வந்துச்சு... அவ புடவை எடுக்கப் போறதா, என்கிட்டேயே சொன்னா... கூடவே நம்ம யமுனாவும் போறாளாம்... அவளையும் பிக்அப் பண்ணிக்கிட்டு தி.நகர் போகனும்னு நர்மதா சொன்னாளா..?? நான் உடனே இறங்கி வேற ஆட்டோ பிடிச்சு வந்தேன்...

"ஏன் அவ வந்தா என்ன..?? எதுக்காக இறங்கின.. இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்கப்போறதா உத்தேசம்... அவளை நேருக்கு நேரா சந்திச்சா தான் என்ன..?? அவ உன்னை அப்படி என்ன பண்ணிட போறா..??"

"என்னைப் பார்த்தா வீணா அவளுக்கு தர்ம சங்கடம்... அதான் இறங்கிட்டேன்... என்ன சொல்றியே... நீ எதுக்காக அவங்களை பூஜைக்கு இன்வைட் பண்ணல..??"

"எதுக்காகன்னு தெரியாதா..?? நீ இப்படி கிறுக்குத்தனமா ஏதாவது யோசிச்சு பூஜைக்கு வர மாட்டேன்னு சொன்னா.. அதுக்காக தான், அதுமட்டுமில்ல துஷ்யந்தை அவ பார்த்தா, தேவையில்லாத கேள்வியெல்லாம் அவளுக்கு தோனும்... அதெல்லாம் அவாய்ட் பண்ண தான், புரிஞ்சுதா..??" என்று அவன் சொல்லவும், அவன் சொல்வதும் ஒருவிதத்தில் சரி தான்... அவள் துஷ்யந்தை பார்க்காமல் இருப்பது தான் சரி என்று கங்காவும் நினைத்தாள்.

ஷாப்பிங் முடிந்ததும் ப்ரண்ட்ஸ்க்கு இன்விடேஷன் வைக்க வேண்டுமென்று சொல்லி, மறுபடியும் அவர்களின் காரை தவிர்த்து யமுனாவோடு ஆட்டோ ஏறினாள் நர்மதா...

எப்படியோ இன்னும் கொஞ்ச நேரத்தில் இளங்கோவை பார்க்க செல்ல வேண்டும், அதுவரை யமுனாவோடு ஹாஸ்டலில் இருக்கலாம் என்று அவள் முடிவு செய்திருந்தாள்...

ஆட்டோவில் ஏறியதில் இருந்து, இருவரும் மௌனமாகவே வந்தார்கள்... "ஏன் ரெண்டுப்பேரும் அமைதியாகவே வரோம்... ஏதாவது பேசு..??" என்று நர்மதா தான் முதலில் மௌனத்தை கலைத்தாள்...

"ஹே செல்வா நல்லா சாரி செலக்ட் பண்றாரில்ல.." என்று யமுனா சொன்னதும், " இதுக்கு நீ பேசாமயே வந்திருக்கலாம்.." என்று முனுமுனுத்தவள்..

"இது பெரிய விஷயமா யமுனா.. எங்க அப்பாக் கூட தான் நாங்க சின்னப்பிள்ளைங்களா இருக்கும் போது, அவரே ட்ரஸ் எடுத்துக்கிட்டு வருவாரு... அவர் செலக்‌ஷன் சூப்பரா இருக்கும் தெரியுமா..??" என்றாள்..

" நர்மதா... உனக்கு அந்த செல்வாவை பிடிக்கலையா..?? நானும் காலையிலிருந்து பார்த்துக்கிட்டு தான் இருக்கேன்... அவரை நீ முறைச்சுக்கிட்டு இருக்க மாதிரி தோனுது...

இங்கப்பாரு நர்மதா... உன்னை கல்யாணம் செஞ்சுக்கப் போற துஷ்யந்த் பத்தி தான் எதுவும் தெரியல... அட்லீஸ்ட் அந்த வீட்ல இருக்க மத்தவங்காலாவது எப்படின்னு தெரிஞ்சு வச்சுக்கறது நல்லதில்லையா..?? அந்த விதத்துல 3 பேரும் நல்ல மாதிரியா தான் தோனுது... அதுவும் செல்வா உன்னோட நல்ல ப்ரண்ட்லியா இருப்பாரு.. அவரை பார்த்தா அப்படி தான் தோனுது... நீ என்ன சொல்ற...??"

"அப்படியும் இருக்கலாம்... அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாமே... சரி நீ இளங்கோ அண்ணா இன்வைட் பண்ண ட்ரீட்க்கு வரத்தான போற..??"

"வரலைன்னு சொன்னா.. அண்ணனும் தங்கச்சியும் விடவா போறீங்க... அதெல்லாம் வரேன்... ஆமாம் இன்னிக்காவது உன்னோட பாசமலர் கிட்ட கல்யாணம் பத்தி சொல்ற ஐடியா இருக்கா..??"

"ம்ம் இன்விடேஷன் கையோடு எடுத்துட்டு வந்துருக்கேன்... இளங்கோ அண்ணாக்கிட்ட இன்னைக்கே கொடுத்துடுவேன்... கொஞ்ச நேரம் ஹாஸ்டல்ல இருந்துட்டு அப்புறம் போகலாம் என்ன..??"

"ம்ம்.."

"அப்புறம் யமுனா... இன்னொரு முக்கியமான விஷயம்.. எப்போ இளங்கோ அண்ணா காதலுக்கு நீ யெஸ் சொல்லப் போற..?? அண்ணா மாதிரி ஒரு ஹஸ்பண்ட் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கனும்...

நானும் ஒரு வாரத்துக்கு அப்புறம் வேலைக்கு வர மாட்டேன்... நீ எப்படியோ லோன்லியா ஃபீல் பண்ணுவ... அண்ணா தான் அவரோட அப்பாக்கிட்ட கூட பர்மிஷன் வாங்கிட்டாரமே... உனக்குன்னு தான் யாரும் இல்லல்ல... சீக்கிரம் அண்ணாவை நீ மேரேஜ் செஞ்சுக்கலாம் இல்ல.."

"இங்கப் பாரு நர்மதா... எனக்கு யாருமில்லன்னு சொல்லாதன்னு நான் எத்தனை முறை சொல்லியிருக்கேன்... எனக்கென்னவோ அந்த வார்த்தையை கேட்கவே பிடிக்கல.. ப்ளீஸ் அப்படி சொல்லாத..."

"எனக்கு மட்டும் அப்படி சொல்லனும்னு ஆசையா..?? இருந்தாலும் அது தானே உண்மை... அது உனக்கு கஷ்டமா இருக்கலாம்... ஆனா அண்ணாவை நீ மேரேஜ் பண்ணிக்கிட்டா, உனக்குன்னு ஒரு குடும்பம் கிடைக்குமில்ல... அப்புறம் உனக்கு யாருமில்லைன்னு யாராவது சொல்ல முடியுமா சொல்லு..??"

"நான் இப்போ என்னோட கல்யாணம் பத்தி யோசிக்கிற மனநிலையில் இல்ல நர்மதா... ப்ளீஸ் இதைப்பத்தி பேச வேண்டாமே.." என்றவள், அந்த பக்கம் வேடிக்கை பார்ப்பது போல் திரும்பிக் கொண்டாள். மனமோ சொல்ல முடியாத பாரத்தோடு கனத்தது..

இதற்கும் மேலும் இவள் என்ன பேசினாலும் யமுனா காது கொடுத்து கேட்க மாட்டாள் என்பதால், நர்மதாவும் அத்தோடு அமைதியாகிவிட்டாள்.

ப்ரண்ட்ஸ் கதை இன்னும் சஸ்பென்ஸோட போகுதேன்னு ஃபீல் பண்ணாதீங்க... இந்த கல்யாண அத்தியாயங்கள் முடியட்டும் அப்புறம் சஸ்பென்ஸெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா கிளியர் பண்ணிடலாம்... கங்கா, துஷ்யந்த் fb நீங்க ரொம்ப எதிர்பார்க்கீறீங்கன்னு தெரியுது... அது கதை முடிவுக்கு முன்னாடி தான் வரும். ஆனா அதுக்கு முன்னாடியே அவங்க ரெண்டுப்பேருக்கும் என்ன சம்பந்தம்னு சொல்லிடுவேன் கவலைப்படாதீங்க... உங்க கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள் அதுக்காக நான் காத்திருக்கிறேன்... நன்றி.

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 10

Episode # 12

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.