(Reading time: 19 - 38 minutes)

ப்படியாவது நானும் உள்ளே வருகிறேன் பார்’மனதிற்குள்ளேயே சபதம் எடுத்துக்கொண்டவள் மறந்தும் போனாள்.

இப்போது நிரேஷை பார்த்த பின்னர் அந்த ஆசை துளிர்விட்டு எரிய,உடனே அவன் சம்மதம் தந்துவிட மாட்டான் என்று தெரியும்..

பரப்பரப்புடன் நின்றிருந்தவளிடம் முதலில் சிரித்து சமாளிக்க தான் பார்த்தான்.போனிடேய்ல் போட்டு,நெற்றியில் சிறு பொட்டோடு,ஒல்லியான தேகத்துடன் இருந்தவளை அளவேடுத்தவனுக்கு மறுப்பு சொல்ல ஏனோ மனம் வரவில்லை.

“என்னோட கார்ட்”என்று நீட்டவும்..

“தேங்க்ஸ் மாஸ்டர்”என்றவளுக்கு அதற்கு மேல் பேச்சே வரவில்லை.

ப்படித்தான் இவர்களது முதல் சந்திப்பு நடந்தது.அதிகப்படியான மகிழ்ச்சியைக் காட்டிய அவந்திகாவின் முகம் கண்ணுக்குள் நுழைந்து அவனை இம்சை செய்யவே இல்லை என்பது தான் உண்மை. 

ஆனால் கொலுவில் வீற்றிருக்கும் ராதையின் பிம்பத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவள் நினைவு மேலெழும்.

அவளுடைய பெயரை விட,’கொலு பொம்மை ராதே’இதை தான் அதிகமாக கூறியிருக்கிறான்.பலமுறை சினுங்கியிருந்தாலும் அந்தப் பெயரை அவளும் முழு மனதோடு வரவேற்கவே செய்திருக்கிறாள்.

அவனது நடனப் பள்ளியில் உள்ளே நுழைந்துவிட்ட போது,அங்கேயே தானும் பயிற்சி பெறுவோம் என்று நினைக்கவில்லை.ஆனால் நிரேஷ் அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தான்.

பெரிய பெரிய கதாநாயகர்களுக்கும்,கதாநாயகிகளுக்கும் மட்டுமே தனிப்பட்ட முறையில் நடனம் கற்றுக்கொடுப்பான்.மற்றபடி நடனப் பயிற்றுவிப்பாளர்கள் தான் பிறரை கவனித்துக்கொள்வார்கள்.முதலில் அவந்திகாவும் அவர்களிடமே தான் பயிற்சி பற்றிக்கொண்டிருந்தாள்.

அதே நேரத்தில் டெல்லியில் தான் இவளது மொத்தக் குடும்பமுமே இருந்தது.பாண்டியனின் கால் சிகிச்சைக்காக மல்லிகாவும் தனது குடும்பத்தோடு டெல்லியிலையே தங்கிவிட்டார்.சாரதி மட்டும் கோவில் வேலைகளை கவனித்துக்கொண்டு நம்மூரிலையே இருந்துவிட்டார்.

சரணுக்கும் தனது செவ்வந்தியின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பும் இது போன்ற நடன பள்ளியில் தான் ஆரம்பித்தது.

வயது ஏற ஏற’ஆளை அசரடிக்கிறாள்’என்பார்களே..அது போலத்தான் இருந்தாள்.இயல்பிலையே கருவிழிகள் அவளுக்கு அழகை கொடுத்திருந்தது.பிறந்த குழந்தையின் கண்களில் உள்ள பளபளப்பு இப்போதும் அவள் கண்களில் இருப்பது போன்ற பிரம்மை ஏற்படும்.

பிற்காலத்தில் மாமன் மகளின் வழி தனி,தன்னுடைய பாதை தனி என்றுணர்ந்து முழுவதுமாக சலனத்தைக் கடந்து நண்பனாக மட்டுமே மாறிப்போனான்.

ஆனால் நிரேஷ் அப்படி மாறவில்லை.சலனம் என்பதை மீறி காதலாகி கசிந்துருகினான் என்பதை பார்ப்பவர்கள் கூட சத்தியம் செய்துதான் செல்வார்கள்.

தனிப்பட்ட முறையில் அக்கறை!

அவளது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற துடிப்பு!

தன் கண்பார்வையிலையே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஏக்கம்!

இப்படி பலவித உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.அவந்திகாவிற்கு அது புரியவில்லை என்பது பிழையோ இல்லை மற்றவர்கள் புரிந்துகொண்டது தான் பிழையோ என்று இன்றுவரை தெரியவில்லை.

ருமுறை நடனம் பயின்று கொண்டிருக்கும் போது,அவளது பயிற்றுவிப்பாளன் சற்றே கடினமாக நடந்துகொண்டான்.

“இப்படி பென்ட் பண்ணக் கூடாது..”என்று அவள் செய்வதையெல்லாம் குறை கூறிக்கொண்டிருந்தவன் வழக்கத்துக்கு மாறாக அழுத்தமாக அவளது இடையை பிடித்து தூக்கியிருந்தான்.

எப்போதுமே பட்டும் படாமலும் தொட்டுக்கொள்வது தான் வழக்கம்.

அவளது முகசுழிப்பு தூக்கியவனுக்கு தெரியவில்லை.எங்கிருந்தோ அனைத்தையும் நிரேஷ் பார்த்துக்கொண்டு தான் இருந்தான் என்பது அவளுக்கு மெதுவாக தான் புரிய வந்தது.

அதன் பின்னே தனது நேரடி கண்காணிப்பில் அவந்திகாவை வைத்துக்கொண்டான்.பிறரது மூச்சுக்காற்று கூட அழுத்தமாக அவள் மீது படிவதை அவன் விரும்பவில்லை.அதற்கான வாய்ப்பையும் அவன் யாருக்கும் கொடுக்கவில்லை.அவ்வளவு பொசசிவ் ஆக தான் மாறிப்போவோம் என்பதை அவனே எதிர்பார்த்திருக்கவில்லை.

மறைமுகமாக அவளை நெஞ்சில் தாங்கியதை மீறி..நேரடியாகவே அவளுடன் பழக ஆரம்பித்திருந்தான்.அவளுக்கும் நிரேஷின் மேல் குரு என்ற முறையை தாண்டி அதிக மதிப்பு,பாசம்,நம்பிக்கை என்று அனைத்துமே அதிகமாகத்தான் இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.