“அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்”புரிய வைக்க முயன்றான்.
“நிறைய இருக்கு..சினி உலகம் ரொம்பவே மோசமானதுன்னு எனக்கு தெரியும்.பலர் பலரோட அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிட்டு தான் வாழ வேண்டியிருக்குன்னும் தெரியும்..ஒரு நாள் கூட குடி போதை இல்லாம இந்த துறையில இருக்கவங்களால தூங்க முடியாதுன்னு தெரியும்.
இப்போ எனக்கு பதினெட்டு தான் ஆகுது..இது காதலிக்கற வயசும் இல்ல.கல்யாணம் செய்துக்கற வயசும் இல்ல.அதே நேரத்தில ப்ளூ பில்ம் நடிக்கற வயசும் இல்ல”எனும் போது கதறியே விட்டாள்.
மனதளவில் மிகப்பெரிய அடியை வாங்கிவிட்டாள் என்பது புரிந்து போக எழுந்து வந்து ஆறுதல் சொல்ல முயன்றான்.
கை நீட்டி அவனை அங்கேயே நிற்குமாறு பணித்தவள்,”எதிர்காலத்தில உங்களோட சேர்ந்து வாழலாம்னு நினைச்சாலும் மனசைவிட்டு இந்த வார்த்தைகள் போகாது போலிருக்கு.அதைவிட நீங்க தப்பானவரா,சரியானவரான்னு இதுவரைக்குமே எனக்கு ஆராய தோணலை.அந்த அளவுக்கு உங்களை நம்பறேன்.இந்த நம்பிக்கை காலம் முழுக்க இருக்கட்டும்..அதுக்காகவே நான் கிளம்பறேன்”என்றவள் கிளம்பிவிட்டாள்.
அதன் பின் இவன் அவள் வீட்டிலையே வந்து பேசி புரிய வைக்க முயற்சிக்க..’அதே நம்பிக்கை’என்னும் பாட்டை படித்து அவனை திருப்பி அனுப்பிவிட்டு,கேள்விகேட்ட அப்பாவிடமும்,மாமா குடும்பத்தினரிடமும்..
“பிடிக்கலை”என்ற ஒற்றை வார்த்தையில் அத்தனை பேரின் வாய்களுக்கும் பூட்டுப் போட்டுவிட்டு, அப்பாவின் பூர்விக வீட்டுக்கே அனைவரையும் அழைத்து வந்துவிட்டாள்.
சில நாட்கள் கஷ்டமாகத்தான் இருந்தது.அவச்சொல்லுக்கு பயந்து புறமுதுகிட்டு ஓடிவந்துவிட்டது போலவும் இருந்தது.ஆனால் எவ்வளவு யோசித்தும்,எடுத்த முடிவில் மட்டும் பின்வாங்கவே இல்லை.
அவர்களது தோட்டம் அவளது கவலையை தன்னுள் உள்வாங்கி,அவளுக்கு மகிழ்ச்சியையே கொடுத்தது..பூமாலை கட்டும் வேலை அவளை ஆசையாக உள்ளிழுக்க..பழைய வாழ்க்கையை மெல்ல மெல்ல மறந்து,அந்த ஊரின் செல்ல செவ்வந்தியாகவே மாறிப் போனாள்.
ஆனால் இன்றோ!!
முரண்பாட்டின் மொத்த உருவமாய்,சிபாரிசு என்ற ஒன்றையே வெறுத்தவள்,இன்று நிரேஷ் உதவி செய்வான் என்று நம்பிக் கொண்டிருக்கிறாள்.
மனதில் என்னவெல்லாமோ ஓடிக் கொண்டிருக்கிறது.எல்லாம் மன அழுத்தத்தினால் வந்தவை என்பது அவளுக்கு தெரியவில்லை.
திருமணமாகாத ஒரு பெண் ‘எக் டொனேட்’ செய்வது என்பது சாதாரண விஷயமல்ல..அதை விட அவள் அரைமயக்கத்தில் தான் மருத்துவமனையில் நடந்த செயல்களை உணர்ந்திருந்தாள்.
இப்படித்தான் இருக்கும் என்பதை மருத்துவமனையில் டாக்டர் விளக்கும் வரையிலும் கூட..பலர் இதை முன்வந்து செய்கிறார்களே! இதில் என்ன தப்பு இருக்கு! இப்படித்தான் மனநிலை இருந்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக நிரேஷ் மேல் வைத்த நம்பிக்கையில் எல்லாவற்றையும் செய்திருந்தாள்.அதே நேரம் பெற்றவரை கொஞ்சமாவது இந்தப் பெண் நினைத்துப் பார்த்திருக்கலாம்.
நிரேஷ் அருகில் இருந்தால் எல்லாமே மறந்து போகிறதா-அப்படித்தான் என்று அடித்து சொன்னது மனம்.
அவன் வெளியில் சென்ற பின்னர் தான் மற்ற கவலைகள் மனதில் வலம் வருகிறது.மீண்டும் முன்பிருந்தது போலவே ஆகிவிட்டோமே என்று கவலைப்பட்ட நேரத்தில் மிகவும் உற்சாகமாக நிரேஷ் வந்து சேர்ந்தான்.
“அவந்தி..”என்று கத்திக்கொண்டே வந்தவன் அவளைக் கண்டதும் தூக்கி சுற்றினான்..
அவளுக்கு தலை சுற்றுவது போல இருக்கவே,”முடியல நிரேஷ்”என்ற பின்பு தான் நிறுத்தினான்.
“நமக்கு ட்வின்ஸ் பிறக்கப் போகுதுடா அவந்தி”என்றவனுக்கோ உலகை வென்றுவிட்ட மகிழ்ச்சி!!
“அவ்வளவு சீக்கிரம் எல்லாருக்குமே ‘சரோகேட் மதர்’ மூலமா முதல் முறையே இரட்டைக் கரு உருவாகிடாதாம்..கருசிதைவுக்கு வாய்ப்பு இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க..நான் உன்னைக் கொண்டு போய் விட டிலே பண்ணதுக்கு காரணம் இது தான்..”என்றவன்..
“நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அவந்தி.எப்...படி..எப்படி அதை காமிக்கிறதுன்னே தெரியலை”என்ற போது அவளுக்குமே மகிழ்ச்சியாக(?) இருப்பது போல தான் தோன்றியது..அது தான் இவனையே வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்ள மனம் சம்மதித்திருந்ததே!!