(Reading time: 19 - 38 minutes)

தே நேரத்தில் இப்போது சொன்ன சம்மதத்தை முன்பே செய்திருந்தால்,இயற்கைக்கு எதிராக,தாங்கள் இருவருமே நன்றாக இருக்கும் போது இன்னொரு பெண்ணை நாடிய தவறை செய்திருக்க வேண்டியிருக்காதே என்றும்  தோன்றியது..அதுவும் மருத்துவமனையில் நடந்த சில சம்பவங்களினால் ஏற்பட்ட ஞான உதயம்.

தனக்கு வலித்தது போல தானே அந்த பெண்ணுக்கும் இருக்கும் என்ற இரக்க குணம் தான்,இயற்கையாகவே பிள்ளை பெற்றிருக்கலாம் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது.

அவளது எண்ண அலைகளை எப்போதும் போல் படிக்க முயன்று தோற்றவன்,இந்த கணத்தில் தன்னுடைய சந்தோஷத்தை கெடுத்துக்கொள்ள மனமில்லாதவனாய்..

“அப்பா,கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டார் அவந்தி.நாளைக்கு நாம ஊருக்குப் போறோம்”என்றதும்..தன்னுடைய அப்பாவை தான்,அவனும் அப்பா என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறான் என்று புரிந்தும்,அன்புக்கு ஏங்கி தவிக்கும் அவனை வாடவிட வேண்டாம் என்று எண்ணியும், தன் தவிப்புகளை வெளியிடவில்லை.

அவள் பேசாமல் இருக்கவே,”உன்கிட்ட ஒண்ணு காட்டனும் வா”என்றவன் அவளது கண்ணை தன் இரு கைகளால் பொத்திக்கொண்டு,ஒரு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனான்.

அந்த அறை மட்டும் எப்போதும் பூட்டியிருக்கும் என்பதால் ஒருமுறை கூட அவள் உள் நுழைந்ததில்லை..

இப்போது பார்க்க பார்க்க ஆச்சர்யம் மட்டுமே மிச்சமிருந்தது.அந்த அறை அவளுக்கு பிடித்த மாதிரி இருந்ததில் ஆச்சர்யம் கொள்வதற்கில்லை தான்..அவளது பதின்ம வயதில் அவனுடன் இருந்த பொழுது எடுத்த போட்டோக்களை பொக்கிஷமாக மாற்றி வைத்திருந்தான்..

ஒருவிதமான சந்தோஷமோ,கலக்கமோ எதுவென்று உணர முடியாத மனநிலையில் இருக்கும் போது,அருகில் வந்தவன் அவள் பின் பக்கமாய் அணைத்து,வலது தோளில் தன் கன்னம் வைத்தவன்,”இந்த ரூம் நமக்கான ரகசியங்களை புதைச்சு வைச்சிருக்கும்..எப்பவும் நம்மளோட ரகசியங்கள் இங்கே தான்”என்றவன் சொல்ல வருவது புரிந்தும் அமைதியாக தான் இருந்தாள்.

பதிலில்லை என்றதும் நம்பர் லாக் செய்து கதவை சாற்றியவன்,”உன்கிட்ட எதையுமே நான் மறைச்சதில்லையே..இதோ இதையும் பார்”என்றவன் ஒரு வீடியோவை காட்டினான்..

தன்னை தான் எடுத்து வைத்திருக்கப் போகிறான் என்று அசுவாரசியமாக பார்க்க ஆரம்பித்தவள்,அதில் தன் தோழிகள் நால்வரும் ஒன்றன் பின் ஒன்றாக வருவதை கண்டு,”நீகா” என்று அலறலோடு அவனை பார்க்க..

“தப்பு செய்தாங்க தானே..சின்னதா ஒரு தண்டனை கொடுத்தேன்.அதையே அவங்களால தாங்கிக்க முடியலை”என்று சாதரணமாக கூறினான்.

அவளால் தான் அதை அப்படி எடுத்துக்கொள்ள முடியவில்லை..சுயநினைவற்றுக் கிடந்த தோழிகள் அவள் கண் முன்னே வலம் வர..அப்போதும்..”இதை நீங்க செய்யலை தானே..”என கண்ணீருடன் கேட்டாள்.

“நான் தான் செய்தேன்”என்றான் ஒருவித வெறியோடு!!

“பொய்!பொய்! நான் நம்ப மாட்டேன்”என்று அலறிக் கொண்டிருந்தவளை,இழுத்து அணைத்தான்.

திமிறியவளை விடவில்லை!!தெரிந்தோ தெரியாமலோ,அறிந்தோ அறியாமலோ அவளின் கையிலிருந்த மோதிரத்தை உருவி ஜன்னலுக்கு வெளியே எறிந்தான்..அது யஷ்வந்த் போட்டுவிட்ட மோதிரம்! அதை கழட்டியதைக் கூட அவளை உணரவிடாமல்,

“எனக்கான எல்லா உறவும் நீ தான்னு எவ்வளவு ஆசையோட இருந்தேன் தெரியுமா! எல்லாத்தையும் ஒரே பொய்யால சாவடிச்சுட்டாங்க..அதான் அவங்களுக்கு மரணத்துக்கு ஈடான தண்டனையை கொடுத்தேன்”என்றவன் மிரண்டு விழித்தவளின் கன்னத்தில் தட்டி..

“ஓவர் பிலீங்க்ஸ் வேணாம்..அதான் நீ என்னை வந்து சேர்ந்துட்டல்ல..இனி அவங்களை சரியாக்கிடலாம்..பாவ மனிப்பு கொடுத்திடலாம்”என்றான் சாதரணமாக!!

“எதுக்காக இப்படியெல்லாம்”என..

“எல்லாம் உனக்காக தான்”என்ற ஒற்றை வரியில்..அவள் மனதை சுக்கு நூறாக உடைத்துப் போட்டிருந்தான்.

‘எல்லாம் என்னாலையா..அய்யோ’கதறித்துடித்த மனதை வெளிப்படுத்த முடியவில்லை..அவன் அவர்களுக்கு கொடுத்த தண்டனையும் கூட,தண்டனை அல்ல தான்.எளிதாக அவர்களை மீட்டுவிடலாம்..

ஆனால் மீட்பது முழுவதும்,தான் அவனுடன் வாழப் போகும் வாழ்க்கையில் தான் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டாள்.இதுவும் ஒருவிதமான ப்ளாக் மெயில் தானே..!!ஆனால் அவன் அப்படி அர்த்தம் கொண்டு பேசவேயில்லை என்பது முக்கியமான விடயம்!!

என்றுமில்லாத அளவிற்கு உற்சாகமாக இருந்தவனுக்கு,தான் தவறுக்கு தான் தண்டனை கொடுத்திருக்கிறோம் என்ற மனநிலை தான் இருந்தது.தான் தவறு செய்த எண்ணமே அவனுக்கு இல்லை.இதை அவளும் உணர்ந்தே இருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.