(Reading time: 19 - 38 minutes)

வள் விருப்பத்தை சொல்லாமலையே நிரேஷ் நிறைவேற்றும் போது இன்னும் நம்பிக்கை கூடிப் போனதே தவிர குறையவேயில்லை.

எல்லாமே நன்றாகப் போய்க்கொண்டிருப்பது போல தான் இருந்தது அப்படியொரு நாள் வரும் வரை!!

புகழ் பெற்ற இயக்குனரிடம் நிரேஷ் நேரடியாக அறிமுகப்படுத்தி வைத்திருந்தான்.அவர் புதுமுகம் என்று தயங்கிய போது தானே தயாரிப்பாளராக மாற தயாராக இருப்பதாகவும்,தன்னுடன் சேர்ந்து ஒரு விழாவில் அவந்திகா ஆடியதையும் காட்டி சம்மதிக்க வைத்திருந்தான்.

‘அழகு’அது தானே இங்கு முக்கியமாக வேண்டும்.அது அவளுக்கு நிறையவே இருந்தது..

படப் பூஜை வரையிலுமே சென்றுவிட்டார்கள்..புதுமுக நாயகி என்று பத்திரிக்கைகளில் இயக்குனரும் விளம்பரப்படுத்த ஆரம்பித்திருந்தார்.

நினைத்தது நடந்துவிட்டதைக் கொண்டாட நிரேஷ் ஒரு பார்ட்டி வைத்திருந்தான்..அனைவருமே அதில் கலந்து கொண்டிருக்க..அபஸ்வரமாய் சில தேவையற்ற விவாதங்கள் இடையில் ஓடிக் கொண்டிருந்ததை தாமதமாகத்தான் உணர்ந்தாள் அவந்திகா..

இந்த வயதில் இப்படியொரு வாய்ப்பு கிடைக்குமென்றால்,நிச்சயம் பலருடன் ‘அட்ஜஸ்மென்ட்’செய்திருப்பாள் என்ற பேச்சு எழுந்தது.அதைக் கூட ‘கிசுகிசுக்கள்’ என்று ஒதுக்கிவிட முடிந்தவளால் நிரேஷை தன்னுடன் சேர்த்துப் பேசியதை தான் தாங்க முடியவில்லை.

அதைவிட அவளது தோழிகள் நீகா,மஹிமா,ஸ்மித்தி,ஸ்ரிகா இவர்கள் இன்னும் சிலருடன் சேர்ந்துகொண்டு நிரேஷைப் பற்றி மிகவும் அவதூறாக பேசினார்கள்.இவள் கேட்டுவிட்டதை அறிந்து வேண்டுமென்றே அவன் பலருடன் தனியறையில் இருப்பது போன்ற படங்களை எடுத்து ஆதாரத்தோடு நிரூபிக்கிறேன் என்ற நினைப்பில் தங்கள் மனதில் உள்ள பொறாமையையும்,அழுக்கையும் அவர்கள் காட்டிக் கொண்டிருக்க...

“உன்னோட ப்ளூ பிலிம் தான் மிஸ் ஆகிடுச்சு.கண்டிப்பா எங்களுக்கு ஒரு நாள் கிடைக்கும்.”என்று மராத்தியில் வேறு கிண்டல் (?) செய்ய ஆரம்பிக்க அழுதுகொண்டே ஓடிவிட்டாள்.

அத்தனையையும் நிரேஷ் கவனித்துக்கொண்டு தான் இருந்தான் என்பதை இவர்கள் அறியவில்லை..

வீடு வரை விளக்கம் சொல்ல இவனால் செல்லவும் முடியவில்லை.மறுநாள் தன் தனியறைக்கே அவள் வந்த போது ஆச்சர்யத்தை மறைத்துக்கொண்டு,புன்னகைக்க முயன்றான் முடியவில்லை...

அவனுடைய ‘ராதே’ தொலைந்து போயிருந்தாள் என்பதை நொடியில் அவனால் உணர முடிந்தது..

இறுக்கிப் பிடித்த தொண்டையை சமாளித்து குரலை வரவழைத்தவள்,”நான் எங்க ஊர்ல போய் படிப்பை தொடரலாம்னு இருக்கேன் மாஸ்டர்”எனவும்,

“ஏன்”சுருக்கமாக கேட்டான்.

“இங்க இருக்க பிடிக்கலை..நான் நானா இருக்க விரும்பறேன்.எதையும் மறைச்சுப் பேசி எனக்கு பழக்கமில்லையே..உங்களை எல்லாரும் தப்பா பேசறாங்க”தலையை குனிந்துகொண்டே கூறவும்,

“நீ நம்பறியா”பரிதவிப்புடன் கேட்டதை புரிந்துகொள்ளவில்லை.அவள் தன் வேதனைக்குள்ளையே மூழ்கிப் போயிருந்தாள்.

“நான் நம்பலை மாஸ்டர்.யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டேன்..அது உண்மையா இருந்தாலும் கூட என்னால உங்களை சந்தேகிக்க முடியாது.அவ்வளவு கண் மூடித்தனமா நம்பிட்டு இருக்கேன்”எனவும் அவனுக்கு சற்று தெம்பு வந்தார் போல தோன்றியது.

“நான் உன்னை விரும்பறேன் அவந்தி”மனதை இனியும் மறைக்க வேண்டும் என்று அவனுக்கு தோன்றவில்லை.

“தெரியும்.நேத்து நைட் தான் எல்லாத்தையும் கோர்வையா யோசிக்கும் போது தெரிஞ்சுக்கிட்டேன்.எல்லாரும் சொல்ற மாதிரி என் திறமைக்காக இல்லாம,நீங்க என்னை காதலிச்சதுக்காக தான் இவ்வளவு பெரிய இடத்துக்கு கொண்டு வந்து விட்டு இருக்கீங்கன்னு நினைக்கும் போது சந்தோஷமா தான் இருக்கு.

ஆனால் என் திறமை இங்கே யார் கண்ணுக்கும் தெரியலையே..அது பெரிய ரணமா இருக்கு.அப்பா,மாமா குடும்பம் எல்லாத்தையும் மறந்துட்டு,அவங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணாம,உயிரே இது தான்னு நினைச்சு என்னோட வாழ்நாளை வேஸ்ட் பண்ணியிருக்கேன்னு இப்போ தான் புரிஞ்சுது..

திறமையை விட சிபாரிசு பெரிய வேதனையை கொடுக்கும்..சிபாரிசு மூலமா வர்ற இந்த சினிமா உலகமே எனக்கு வேண்டாம்..அதைவிட எனக்கு நீங்க வேண்டாம்”என்றாள் உறுதியான குரலில்!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.