(Reading time: 19 - 38 minutes)

வளது எண்ணப் போக்கை அறியாமல்..”எப்பவுமே உன்னைப் பார்க்கும் போது எனக்கு ‘கண்ணனின் ராதே’ தான் மனசில வரும்..கண்ணன் ஆயிரம் கோபியர்கள் கூட இருந்தாலும்,திருமணமாகத நிலைமையிலும் கூட தன்னை முழுவதுமா அர்ப்பணிக்க தயாரா இருந்தது ராதே மட்டும் தான்.

ஒருமுறை ராதையோட ஆடைகளை திருடிட்டு மரத்தில ஏறிக்கிட்டாராம்..ராதே கேட்டும் அவர் கொடுக்காமலிருக்க..எந்த விதமான மன உறுத்தலுமே இல்லாம தண்ணீர்ல இருந்து எழுந்து வந்தாங்களாம்..இதைப் படிக்கும் போது எனக்கு அதில இருந்த அதீத காதல் தான் தெரிஞ்சுது.தப்பா எதுவுமே தோணலை..இன்பெக்ட் ராதே ஒரு கற்பனை கதாபாத்திரம்னு தான் சொல்றாங்க..ஆனால் எனக்கு உன்னப் பார்க்கும் போதும்,உன்னோட செயல்களிலும்,நீ என் மேல வைச்சிருக்க முழு நம்பிக்கையிலும் நான் ராதையை உணர்ந்தேன்..இப்பவும் உணர்றேன்”என்றவன் அதே மனநிலையோடு அணைத்துக்கொண்டான்.

ஆனால் அவளுக்கோ..’நான் ராதை அல்ல..மீரா’என்று கத்த வேண்டும் போலிருந்தது.

தான் காதலித்தது யஸ்வந்த்தையா இல்லை நிரேஷையா என்ற தெளிவு வரவில்லை என்றாலும்..உண்மையாய் காதலிப்பது இவர்களில் ஒருவரைத்தான் எனும் போது..காதலித்த கண்ணனை விட்டுவிட்டு,சூழ்நிலையால் வேறு ஒருவரை மணந்துகொண்ட மீரா..கணவனோடும் நிம்மதியாக வாழ முடியாமல்,இறுதியில் இறைவன் பாதத்தில் சரணடைந்த மீராவாக தான் தன்னை அவளால் உணர முடிந்தது.

தன் மேல் அளவுகடந்த காதலை வைத்திருக்கும் நிரேஷ்க்கு நியாயம் செய்ய வேண்டும் என்று அவள் மனம் கூவிக்கொண்டு,இரு மனமாக போராடிக் கொண்டிருக்க...திருமணத்திற்கு சம்மதம் கிடைத்துவிட்ட நிம்மதியில்,இரட்டைக் குழந்தை வரப் போகிறது என்ற சந்தோஷத்தில்,என்றுமில்லாத அளவிற்கு மனதில் தோன்றிய நிறைவை ,அவந்திகாவிடம் காட்டிக்கொண்டிருந்தான் நிரேஷ்...

இயல்பான அவனது தொடுகை எல்லை மீறுவதை உணர்ந்து எதிர்பார்த்துப் பார்த்தாள்..அவன் கண்களில் தோன்றிய நிராசையை பார்த்து..ஏதோ ஒரு உந்துதலில்..அவனுக்கு இனி கஷ்டத்தையே வரவிடக் கூடாது..பிறருக்கும் அவன் கஷ்டத்தைக் கொடுக்கக் கூடாது என்ற மனநிலையில்,அவன் இழுத்த இழுப்பிற்கு இசைந்து கொடுத்தாள்.

உணர்வுகளும் உணர்ச்சிகளும் கொந்தளித்தது தான்...கண்ணனை விட்டுவிட்டு இன்னொருவனை கரம் பிடித்த மீராவின் மனநிலை அப்போது எப்படி இருந்திருக்கும் என்ற சிந்தனையிலையே தன்னை அவனுக்கு கொடுத்திருந்தாள்.

தவறு தான்.தெரிந்தே செய்துவிட்ட தவறு தான்.வாழ்நாள் முழுக்க வருத்தப்பட வைக்கப் போகிற செயல் தான்.காதல் என்ற ஒன்றை மட்டும் அடிப்படையாக வைத்து,இணைந்தது பிழை தான்..தவிர்க்க முடியவில்லையே..!!

இந்த கணத்தில் நிரேஷ் இந்த உலகத்திலையே இல்லை எனலாம்.மரணம் இப்போது வந்து தன்னை தழுவினாலும் மகிழ்ச்சியுடன் ஏற்கும் மனநிலையில் இருந்தான்..அதை அவளையும் உணர வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு..மறுநாள் முழுவதும் அவளோடு சுற்றி திரிந்தான்..அவளை சிரிக்க வைத்தான்.தான் தான் உனக்கு எல்லாமாக இருக்க வேண்டும்  என்பதை அடிக்கடி நிரூபிக்கும் விதமாய் ஏதாவது செய்துகொண்டே இருந்தான்..

இங்கே யஷ்வந்த்தோ,நந்தனாவின் பிரதிநிதியாய்..இல்லை அவளைவிட கொஞ்சம் அதிகம் பாதிக்கப்பட்டவளான நீகாவின் வீட்டுக்கு தன் குழுவோடு சென்றுவிட்டு..அடுத்து வந்தது நிரேஷின் வீடு தான்..

யார் தவறு செய்திருந்தாலும்,அதற்கு யார் தண்டனை அனுபவிக்க தயாராய் இருந்தாலும்,அனைத்துக்கும் மூல காரணமாகிப் போன..அவந்திகா தான் சிலுவை சுமக்கப் போகிறாள்!!

சமூகத்தால் அவமானப்படுத்தப்பட போகிறாள்!!

ஹாய் பிரண்ட்ஸ்..இந்த பதிவுக்கு உங்களுடைய கருத்துக்கள் எதுவாகினும் வெளிப்படுத்தலாம்..அடுத்த பகுதிக்கு கருத்துக்கள் உதவியாக இருக்கும்.ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..நன்றி.

தொடரும்

Episode # 15

Episode # 17

{kunena_discuss:1004}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.