(Reading time: 33 - 66 minutes)

வாடிய மலராக கங்கா படுத்திருக்க, அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் துஷ்யந்த்.. காய்ச்சல் என்று சொன்னார்கள், அதிகமான காய்ச்சலோ.. அவன் மீது அனல் வீசுவது போல் இருக்கிறதே, என்று நினைத்தான்.. அவள் நெற்றியை தொட்டுப் பார்க்க கைகள் பரபரத்தது அவனுக்கு… ஆனால் “உன் அனுமதியில்லாம என் சுட்டு விரல் கூட உன் மீது படாது..” என்று ஆறு வருடத்திற்கு முன் அவளுக்கு செய்துக் கொடுத்த சத்தியம் அவன் கைகளை கட்டிப் போட்டிருந்தது.. இருந்தும் அவள் அருகாமையை விரும்பியவனாக அவன் அமர்ந்திருந்தான்..

அவளும் அவனுடைய அருகாமையை தான் விரும்பினாளோ.. அவன் தன் அருகில் இருப்பதை இந்த மயக்கத்திலும் உணர்ந்தாளோ.. அந்த நேரம் அவள் உதடுகள் துஷ்யந்த் என்று முனுமுனுத்தது..

துஷ்யந்தால் நம்ப முடியவில்லை.. அவள் நிஜமாகவே அவன் பெயரை தான் முனுமுனுத்தாளா..?? அவன் சந்தேகத்தோடு அவளை நோக்க, திரும்பவும் அவள் துஷ்யந்த் என்று அவன் பெயரை உச்சரித்தாள்.

இதுவரையிலும், கங்கா அவனுடைய பெயரை உச்சரித்து துஷ்யந்த் கேட்டதில்லை.. நெருக்கமாக இருந்த ஆரம்பக் காலங்களில், ஏம்பா, என்னப்பா.. என்று அப்பாவை சேர்த்து அழைப்பாள்… அதன்பிறகு இத்தனை நாட்களில், வாங்க, உக்காருங்க என்று சொல்வாள்… இளங்கோவோ, வாணியோ, ரம்யாவோ இருக்கும்போது, உங்க தம்பி, உன்னோட ஃப்ரண்ட், உன்னோட சார்ன்னு, அவங்க என்ன அழைப்பார்களோ.. அப்படி பேசுவாள்… ஆனால் இன்று தான் துஷ்யந்த் என்று இவன் பெயரை உச்சரித்துக் கேட்கிறான்..

ஒருமுறையல்ல, இருமுறையல்ல, தொடர்ந்து அவன் பெயரை மயக்கத்தில் உளறினாள். “நான் இங்க தான் இருக்கேன் கங்கா..” என்று அவன் கூறினாலும், அவள் காதுகளில் அது விழவில்லையோ.. திரும்ப திரும்ப அவன் பெயரை அவள் உச்சதித்தாள்..

“என்ன செய்வதென்று அவனுக்கு தெரியவில்லை.. நன்றாக தூங்கி எழுந்தால் தானே, அவளுக்கு காய்ச்சல் சரியாகும்… ஆனால் அவளோ இவன் பெயரை உளருகிறாளே.. பேசாமல் வாணி அக்காவை கூப்பிடலாம் என்று நினைத்தவன், அவள் இவனுடைய பெயரை தானே உச்சரிக்கிறாள்.. என்பதால், அவள் இவன் பெயரை உச்சரிப்பதையே, அவளின்  அனுமதியாக எடுத்துக் கொண்டு, அவள் கையை எடுத்து தன் கை மேல் வைத்து, மெதுவாக தடவிக் கொடுத்தான்…

அவன் ஸ்பரிசத்தை தான் அவளும் எதிர்பார்த்தாளோ..? அவன் கைப்பட்டதும், அவள் கொஞ்சம் கொஞ்சமாக உளருவதை நிறுத்தினாள்.. பின் அவன் கைகளை எடுத்ததும், கொஞ்சம் கண்களைச் சுருக்கி, அவள் கொஞ்சம் அசைந்ததும், திரும்பவும், அவன் நாற்காலியில் இருந்து எழுந்து, மெத்தையில் அவள் அருகில் கொஞ்சம் காலியாக இருந்த இடத்தில் அமர்ந்து, ஒரு கையை அவள் கைகளோடு கோர்த்துக் கொண்டு, இன்னொரு கையால் அவள் தலை முடியைக் கோதினான்…

“கங்கா… நான் உன் பக்கத்திலேயே தான் இருக்கேன்… நல்லா தூங்கும்மா..” என்றப்படி, தொடர்ந்து அவள் தலையை அவன் கோத, அவள் அப்படியே ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றாள்… அவனும் கட்டிலில் சாய்ந்தப்படி படுத்தவன், அப்படியே கண்ணசந்தான்.

ரிஷப் தான் செல்வாவா..?? யமுனாவால் நம்ப முடியவில்லை… “என்ன சொல்ற நர்மதா..?? செல்வா தான் ரிஷப் ஆ.. இப்போ வந்து இதை சொல்றியே நர்மதா.. இந்த நேரத்துல என்ன பண்ண முடியும்..?? நீ முன்னாடியே சொல்லியிருந்தா.. நாம இந்த கல்யாணத்தை நிறுத்தியிருக்கலாம்.. செல்வாக்கிட்ட பேசி, செல்வாவோட..” அவள் தயக்கத்துடன் சொல்லும்போது, இடைப்புகுந்த நர்மதாவோ…

“நான் சொன்னதை நீ தப்பா புரிஞ்சிக்கிட்டன்னு நினைக்கிறேன் யமுனா.. என்னால ரிஷப் சொன்னதை மறக்கவே முடியாது யமுனா.. அவன் என்னை எவ்வளவு கேவலமா பேசினான் தெரியுமா..?? ஏன் இப்பவும் அந்த ரிஷப் என்னை தப்பா தான் பேசறான்… அவன் இருக்கற வீட்ல என்னால இருக்க முடியாது யமுனா.. அதனால தான்  கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்…

ஆனா நாளைக்கு என்னோட கல்யாணத்தை நினைச்சு அம்மா, அப்பா எவ்வளவு சந்தோஷமா இருப்பாங்க.. அவங்களுக்காகவாவது நான் இந்த கல்யாணத்தை செஞ்சுக்கனும் யமுனா.. என்னோட விதியில இப்படி தான் எழுதியிருக்குன்னா என்ன பண்ண முடியும்.. அதை நான் ஏத்துக்க தான் வேண்டும்.. இதெல்லாம் எனக்குப் புரியுது. இருந்தும் குழப்பமா இருக்கு.. அதைத்தான் சொன்னேன்..

என்னால என்னோட குடும்பத்துக்கு அவமானத்தையும், வேதனையையும் கொடுக்க முடியாது யமுனா.. நான் இந்த கல்யாணத்தை ஏத்துக்கிட்டு தான் ஆகனும்… நான் குழம்பி, உன்னையும் குழப்பிட்டேன் சாரி. சரி வா படுக்கலாம்..” என்று நர்மதா முன்னே போக, யமுனா அப்படியே நின்றிருந்தாள்…

தன் தோழியின் நிலை அவளுக்குப் புரிகிறது… அவளுக்கு ரிஷப் மேல் இன்னும் காதல் இருக்கிறது.. இருந்தும் அதை மறைக்கிறாள்… முன்பு போல ரிஷப் மீது இவளுக்கு கோபம் வரவில்லை… சில நாட்களாக அவனை பார்த்ததிலும், இன்று நர்மதாவிற்காக அவன் பதறியதும், ரிஷப் ஐ தவறாக நினைக்க தோன்றவில்லை… முன்பே இதுப்பற்றி தெரிந்திருந்தால் ஏதாவதி செய்திருக்கலாம்… இப்போது என்ன செய்வது, என்று அவள் குழம்பினாள்.

துஷ்யந்த் சொன்ன சிறிது நேரம் முடிந்ததும், வாணியும், இளங்கோவும் கங்காவின் அறைக்குள் நுழைய, அப்போது அவர்களின் நிலையைப் பார்த்து, இருவரும் கண்களை அந்த பக்கத்திலிருந்து பிரித்தெடுக்க, அதற்குள் அரவம் கேட்டு, பதட்டமாக துஷ்யந்தும் எழுந்தான்…

ஆனால் அவளை எந்திரிக்க விடாமல், கங்கா அவனுடைய கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள். மனதே இல்லாமல், அவள் கைகளை தன் கைகளிலிருந்து அவன் பிரித்தெடுத்தான்..

“அது.. அது.. கங்கா தூக்கத்துல என்னோட பேரை சொன்னா.. அதான் இப்படி..” என்று தயக்கத்தோடு விளக்கமளித்தான்..

வாணி கங்கா அருகில் சென்று அவளை தொட்டுப் பார்த்துவிட்டு, “காய்ச்சல் சுத்தமா விட்டுடுச்சே..” என்றார்.

“துஷ்யந்த்.. இப்ப ரொம்ப நேரமாச்சு.. உங்க வீட்ல தேடுவாங்க.. நீங்க கிளம்புங்க..” என்று இளங்கோ கூறினான்.

“ரொம்ப தேங்க்ஸ் இளங்கோ… என்னை கொஞ்ச நேரம் இங்க இருக்க அனுமதிச்சதுக்கு, ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்… அப்புறம் நான் இங்க வந்தது கங்காவுக்கு தெரிய வேண்டாம்… அப்புறம் அவ கோபப்படுவா.. இதுக்கப்புறம் அவ என்னை பார்க்க அனுமதிக்க மாட்டான்னு எனக்கு தெரியும்… அதனால தான், என்னை தப்பா நினைச்சிக்காத.. சரி அப்போ நான் கிளம்பறேன்..” என்றவன், ஒன்னு செய்ய நீங்க அனுமதி கொடுக்கனும்.. என்று அவர்களிடம் அனுமதி வேண்டியவன்,

கங்காவின் நெற்றியில் முத்தம் ஒன்று பதித்துவிட்டு, அவளின் தலையை மீண்டும் ஒருமுறை கோதிவிட்டு, அவர்களிடம் விடைப்பெற்றான்.

துஷ்யந்தின் இந்த செயலை, இளங்கோவால் தவறாக பார்க்க முடியவில்லை… துஷ்யந்துடைய திருமணம் நடக்கப் போவதை நினைத்து, அழுது காய்ச்சலில் படுத்திருக்கும் கங்காவை பார்க்கும்போது, இந்த திருமணம் நடக்க வேண்டுமா..?? என்று அவன் மனதில் கேள்வி பிறந்தது… ஆனால் திருமணத்திற்க்காக காத்திருக்கும் நர்மதாவை நினைத்தால், இந்த திருமணம் நின்றால், அவள் எதிர்காலம் என்னாகும் என்ற அச்சமும் வந்தது… ஆரம்ப நாட்களிலேயே, தன்னால் இந்த திருமணத்தை நிறுத்த முடிந்திருக்கும், ஆனால் கங்காவுக்கு செய்துக் கொடுத்த சத்தியம் இவன் கைகளை கட்டிப் போட்டது, இப்போதோ இவன் அமைதி, இருப் பெண்களுக்கும் துரோகம் செய்வதாக தன் மனம் தன்னையே குற்றம் சாட்டியது… அந்த குற்ற உணர்வோடு, விதி இவர்கள் மூவரின் வாழ்க்கையில் என்ன செய்ய இருக்கிறதோ செய்யட்டும்… என்று அவன் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான்.

ஆனால் வெளியில் வந்த துஷ்யந்தோ, அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தான்… கங்காவின் மனதில் தனக்கு என்ன இடம் கொடுத்திருக்கிறாள், என்று இத்தனை நாள் புரியாமல் குழம்பினான்… ஆனால் இன்று அவள் மனம் அவனுக்கு நன்றாக புரிந்தது…

அவளை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்தி பார்க்கக் கூடாது என்று தான், இவன் இந்த திருமணத்திற்கு சம்மதித்ததே… ஆனால் இந்த திருமணமே அவளுக்கு கஷ்டத்தை கொடுக்கும் என்பதை அவன் எப்படி அறியாமல் போனான்… இன்று அதை அறிந்துக் கொண்டானே.. இனி என்ன செய்ய வேண்டும் என்பதை அவன் முடிவெடுத்துவிட்டான்… மனதில் அந்த முடிவை உறுதியேற்று, தன் வீடு நோக்கி பயணித்தான்.

போன முறை அப்டேட் கொடுக்க முடியாம போய்டுச்சு ப்ரண்ட்ஸ்… அதுக்கு சாரி.. இந்த முறையும் கொஞ்சம் அப்டேட் எழுத டைம் இல்லாம இருந்தது.. இருந்தும் உங்களை ஏமாற்ற விரும்பாம, 2.30 மணி வரை டைப் பண்ணி, அப்டேட் போஸ்ட் பண்ணியிருக்கேன்… இந்த அப்டேட்க்கு உங்களோட கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் நன்றி.

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 13

Episode # 15

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.